tamilini-5தமிழர் தரப்பு நடந்த இனஅழிப்புக்கு அனைத்துலக விசாரணையை கோரும் அதே சமயம் அனைத்துலக மருத்துவ குழு ஒன்றின் கீழ் இறுதி இனஅழிப்பிற்கு முகம் கொடுத்த மக்களையும் போராளிகளையும் முழுமையான மருத்துவ பரிசோதனைக்குட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருக்க வேண்டும். ஆனால் இன்றுவரை அந்த கோரிக்கை வைக்கப்படவில்லை.

 

தடைசெய்ய்பபட்ட ஆயுத பாவனை மற்றும் இராசயன குண்டுகள் மற்றும் கிளஸ்டர் குண்டுகள் இறுதி இனஅழிப்பில் பாவிக்கப்பட்டதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளன.

 

இது மனித உடலில் எத்தகைய பின்விளைவை தரும் என்பதற்கு உலகளவில் நிறைய தேசங்கள் சாட்சியாக உள்ளன.

 

அத்தோடு கொடிய சித்திரவதை மற்றும் உளத்தாக்கங்களுடன் போதிய குடிநீர் மற்றும் உணவை எடுத்து கொள்ளாததன் விளைவாக ஏதோவொரு உடற்தாக்கத்தினை எமது மக்கள் சுமந்து கொண்டுதான் இருக்கிறார்கள். விளைவாக மரணத்தை தினமும் ஏதோவொரு வழியில் எதிர்கொண்டபடியே இருக்கிறார்கள்.

 

பெரும் போர் நடந்து முடிந்த தேசங்களில் ஐநாவின் அமைதிப்படை சென்று பணியாற்றுவதும் ஏதிலிகள் முகாம்களை ஐநா பொறுப்பெடுப்பதும் வழமை. ஆனால் சிறீலங்காவில் என்ன நடந்தது?

 

குறிப்பாக 2009 மே மாதத்திலிருந்து தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் சுயாதீன ஊடகவியலாளர்கள், தொண்டு நிறுவனங்கள், மனித உரிமையாளர்கள் குறிப்பாக அனைத்துலக மருத்துவர்கள் மக்களை சந்திப்பது முற்றாகத் தடுக்கப்பட்டிருந்தது. இது ஒன்றே போதும் இலங்கை அரசை இனஅழிப்பு குற்றவாளியாக்க..

 

ஆனால் ஐநா உட்பட எல்லோருமே மவுனமாக இருந்து இந்த இனஅழிப்புக்கு உடந்தையாக இருந்ததுதான் வரலாற்று சோகம்.

 

ஐநாவின் இந்த மவுனமே தமிழின அழிப்பின் முதன்மை குற்றவாளியாக நாம் ஐநா வை குறிப்பிட முக்கிய காரணமாகும்.

 

Doctors Without Borders/ Médecins Sans Frontières (MSF) போன்ற அனைத்துலக மருத்துவ குழுக்களை அன்றே வனனிக்குள் நழைய ஐநா அனுமதித்திருந்தால் எமது மக்களின் / போராளிகளின் இன்றைய மரணங்களை தடுக்கும் வலல்மையை நாம் உருவாக்கியிருக்கலாம்.

 

ஆனால் மறுவளமாக எப்படி இனஅழிப்பு அரசு இதை அனுமதிக்கும் என்ற கேள்வியை நாம் மறுதலிக்கவில்லை.

 

ஏனென்றால் Doctors Without Borders/ Médecins Sans Frontières (MSF) போன்ற மருத்துவர்கள் எமது மக்களை சுயாதீனமாக மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தினால் இராசாயன ஆயுதங்களின் பாவனை தொடக்கம் இனஅழிப்பு நோக்கில் நடந்த பாலியல் வல்லுறவு குற்றங்கள் வரை கண்டறிந்திருப்பார்கள்.

 

அது சிங்களத்தை இனஅழிப்பு குற்றவாளிகளாக்கும் போதிய ஆதாரங்களாக இருந்திருக்கும்.

 

ஏனவேதான் ஆறு ஆண்டுகளாகியும் நடந்த இனஅழிப்பை மறைக்கவும் – தொடர்ந்து இனஅழிப்பை நடத்தவும் எதையுமே “உள்ளக” அளவில் செய்ய முற்படுகிறது இனஅழிப்பு அரசு.

 

ஆனாலும் தொடாந்து ஒரு அனைத்துலக தலையீட்டை கேட்க வேண்டியது நமது கடமை.

 

இறுதி இனஅழிப்புக்கு முகம் கொடுத்ததன விளைவாக புற்றுநோய, சிறுநீரக செயலிழப்பு உட்பட பல விதமான நோய்களை எதிர்கொண்டு மரணத்தை சந்திக்கும்; நமது மக்களை காக்கும் பொறிமுறை இது என்பது மட்டுமல்ல இனஅழிப்பை அம்பலப்படுத்த இது ஒரு கருவியாகவும் இருக்கும்.

 

இனியாவது ஒரு அனைத்துலக மருத்துவ குழுவை கொண்டு இறுதி இனஅழிப்பில் பாதிக்கப்பட்டு எஞ்சியுள்ள மக்களுக்கும் போராளிகளுக்கும் தீவிர மருத்துவ பரிசோதனை செய்ய தமிழ்

 

அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் பரிந்துரைப்பார்களா?

 

ஈழம்ஈநியூஸ்