ஈழத்தமிழினத்தின் மீதான சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளது இனஅழிப்பினை இரண்டாயிரம் பக்கங்களை கொண்ட ஆவணமாக பதிவுசெய்யப்பட்டுள்ள எனும் நூல் கனேடிய மண்ணில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Canada-1
சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் பொது நிர்வாகத் துறையின் பேராசிரியரும் தலைவருமான ராமு மணிவண்ணன் அவர்கள் ‘SRI LANKA: HIDING THE ELEPHANT’ ‘ எனும் பெயரில் இதனை பதிவு செய்துள்ளார்.

கனடியத் தமிழ்ப் படைப்பாளிகள் கழகமும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நூல் அறிமுக நிகழ்வினை கனடியத் தமிழ்ப் படைப்பாளிகள் கழகத்தின் தலைவர் நக்கீரன் தலைமை தாங்கி நடாத்தியிருந்தார். நூலாசிரியர் பேராசிரியர் ராமு மணிவண்ணன் அவர்கள் இந்நிகழ்வில் நேரடியாக பங்கெடுத்து ஆர்வலர்களுக்கு புத்தகங்களை வழங்கியிருந்ததோடு சிறப்புரையும் ஆற்றியிருந்தார்.

ஈழத்தமிழர் ஆதரவாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கல்வியலாளர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர். இந்நூல் ஏற்கனவே சென்னையிலும் ஜெனீவாவிலும் வெளியிடப்பட்டிருந்த நிலையில் தற்போது கனடாவில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.