தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கி செல்லும் விடுதலைச் சுடர் ஸ்ராஸ்பூர்க் நகரத்தை தொடர்ந்து நேற்றைய தினம் பெல்ஜியம் தலைநகரை நாட்டை வந்தடைந்தது. மதியம் 2 மணியளவில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்னர் தமிழ் மக்களால் கவனயீர்ப்பு நிகழ்வு நடாத்தப்பட்டது.

 

begiumதாயகத்தில் யாழ்.பல்கலைக்கழக சமூகம் மற்றும் பொது ஜன அமைப்புக்களும் இணைந்து, ஐ.நா விசாரணை அறிக்கை தாமதப் படுத்தியதால் கடும் வேதனை அடைந்துள்ளதை காட்டவும் ஐ.நா எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதில் தமது எதிர்பார்ப்புக்கள் என்ன என்பதை காட்டவும் போராட்டம் நடத்து கொண்டிருந்த நேரத்தில் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களுடனும், ஐரோப்பிய அங்கத்துவ நாடுகளின் நிரந்தர காரியாலயத்திலும், ஐரோப்பிய வெளிவிவகார சேவையின் காரியாலயத்திலும் பல சந்திப்புகள் பெப்ரவரி 23 ஆம் 24ஆம் திகதிகளில் நடைபெற்றது.

 

ஐரோப்பிய அங்கத்துவ நாடும், பொதுநலவாய அங்கத்துவ நாடாகிய மல்ட்ட நாட்டு பிரதிநிதியுடனும், யேர்மனி , இத்தாலி நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுடன்,ஐரோப்பிய கொமிசன் பிரதிநிதிகளுடனும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வட மாகாணசபை மக்கள் பிரதிநிதியுமாகிய திரு சிவாஜிலிங்கம் மற்றும் அனைத்துலக ஈழத் தமிழர் மக்கள் அவை பிரதிநிதிகளும் , ஐரோப்பிய தமிழர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் வட மாகாண சபையின் இனப்படுகொலைக்கான பிரேரணை, ஆட்சி மாற்றத்தின் பின் இன்றைய சிறிலங்கா, ஈழத் தமிழர்களுக்குரிய நீதியான சர்வதேச விசாரணை, அரசியல் தீர்வு, போன்ற விடயங்கள் கலந்தாய்வு செய்யப்பட்டது.

 

இந்த சந்திப்பின் போது, ஈழத் தமிழர்களின் ஜனநாயக உரிமைகள் காக்கப்பட வேண்டும், ராணுவம் வெளியேற்றப்பட வேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், காணாமல் போன்னோர் விபரங்கள் வெளியிடப்பட வேண்டும், மக்ககளின் காணிகள் திருப்பி அளிக்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமை காக்கப்பட வேண்டும், இவற்றை சிறிலங்கா அரசு செய்யும் என்ற நம்பிக்கை தமிழ் மக்கள் இடையே இல்லை என்பதை எமது சந்திப்பின் போது எடுத்துரைக்கப்பட்டது.

 

belgi-1அங்கே தொடர்ச்சியாக ஒரு இனப்படுகொலை நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது, அவை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பதை வலியுறுத்தியதோடு தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வை, ஈழத்தில் வாழும் தமிழ் மக்களும், புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுமே தீர்மானிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கூறப்பட்டதோடு மனுவும் கையளிக்கப்பட்டது.

 

நாளைய தினம் விடுதலைச் சுடர் பெல்ஜியம் Antwerpen நகரை சென்றடைய இருக்கின்றது . மதியம் 2 மணிக்கு அங்கு நீதி மன்றத்துக்கு (Bolivaarplaats) முன்பாக கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற இருக்கின்றது .இக் கவனயீர்ப்பு நிகழ்வில் திரு சிவாஜிலிங்கம் அவர்களும் கலந்துகொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது .

 

ஸ்ராஸ்பூர்க் நகரத்தில் நடைபெற்ற விடுதலைச் சுடர் பற்றிய செய்தி உள்ளுர் இணைய பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .