தமிழினத்திற்கு தொடர்ந்து துரோகச் செயல்களை செய்துவரும் சுப்பிரமணியசாமி சென்னை வருவது தெரிந்தவுடன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக சென்னை மாவட்ட செயலாளர் ச.குமரன் சிலமணி நேரங்களிலேயே 20க்கும் மேற்பட்ட தோழர்களை திரட்டி, தமிழின துரோகி சுப்பிரமணியசாமி சென்னையில் உள்ள பிரித்தானிய தூதரகத்திற்கு (பிரிட்டிஷ் கவுன்சில்) வருவதை அறிந்துகொண்டு,

periyar1
சென்னை மாவட்ட செயலாளர் ச.குமரன் தலைமையில், வடக்கு மண்டல அமைப்பாளர் கரு.அண்ணாமலை அவர்கள் முன்னிலையில் 20க்கும் மேற்பட்ட கழக தோழர்கள் கருப்புக்கொடியுடன் “தமிழின துரோகி சுப்பிரமணியசாமியே தமிழ் நாட்டை விட்டு வெளியேறு” என்ற வீர முழக்கமிட்டுக்கொண்டு காலை 10:00 மணி அளவில் சென்னை ராஜரத்தினம் விளையாட்டு திடல் அருகில் இருந்து பிரித்தானிய தூதரகத்தை நோக்கி முன்னேறினர்.

கழக தோழர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைது செய்த தோழர்கள் அனைவரையும் , சிந்தாதரி பேட்டையில் உள்ள “காமாட்சி மீனாட்சி” திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து மாலை 6:00 மணிக்கு விடுவித்தனர்.

இந்த கருப்புக்கொடி போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த தோழர்கள் சசி, கோபி, ஏ.வெங்கடேசன், வாசு, சங்கர், ராசன், பரமாத்மா,ராசசேகர், சுரேசு, செயபிரகாசு மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டார்கள்.

இப்படிக்கு,

செய்திப்பிரிவு,
தந்தை பெரியார் திராவிடர் கழகம்,
சென்னை மாவட்டம்.