மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான கோடௌலூபே(Quadeloupe) என்ற பிரெஞ்சு அரசாட்சிக்குள் இருக்கும் நாட்டில் வாழும் தமிழ் மக்கள் சார்பில் அழிந்து கொண்டிருக்கும் தமிழ் கலாச்சாரம், தமிழ் மொழி, தமிழின அடையாளம் பாதுகாக்கும் முகமாக நடைபெற்ற “தமிழர் அடையாளங்கள் தேடி” என்ற மாநாட்டுக்கு அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவைக்கு விடப்பட்ட அழைப்பின் பேரின் பிரான்சில் இருந்து பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் பொறுப்பாளர் திரு திருசோதி அவர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டார்.

இத் தீவில் வாழும் மக்கள், காலனித்துவ காலத்தில் கறுப்பின மக்களை அடிமைகளாக பொருளாதார அபிவிருத்திக்காக கொண்டுவரப்பட்டவர்களின் பரம்பரையில் வந்தவர்கள், அடிமை ஒழிப்பு போராட்டத்தில் அவர்கள் விடுதலை அடைந்த பின், அங்கே, அந்த வளமிக்க நிலங்களில் தொழிலிற்காக கொண்டுவரப்பட்ட தமிழ் மக்கள், அவர்கள் வழியில் வந்தவர்கள் இன்று அங்கே இருக்கும் 53000 தமிழ் மக்கள், அந்த நாட்டு மக்கள் தொகையில் 10% மானோர் தமிழர்கள்.

Tamil-dias
இன்று தமது இனம் அழிவு நிலையில் இருப்பதை புரிந்து கொண்டு அவர்கள் எமக்கு விடப்பட்ட அழைப்பின் அடிப்படையில் தமிழ் மொழி, தமிழ் கலாச்சரா வளர்ச்சிக்கு அவர்களுக்கு பக்க துணையாக நின்று அவர்களுக்கு தேவையான உதவிகளை நாம் வழங்க அவர்களுக்கு இதன் ஊடாக நாமும் உறுதி அளித்து இருக்கிறோம்.

அதே நேரத்தில் இந்த தீவில் தமிழர் பிரச்சனைகளை புரிந்து கொண்ட கட்சிகள், மனிதவுரிமை அமைப்புகளுடனும் சந்திப்புகள் நடைபெற்றது. அந்த சந்திப்புகளில், அவர் தமது மூதாதையர்களும் அடிமை கொடுமைகளுக்கு எதிராக போராடியதாகவும், தமது இனப்பெண்கள் கொண்டுமையான அவமானங்களுக்கு உள்ளானதாகவும், இன்று உலக அளவில் அதுதான் நடந்து கொண்டிருப்பதாகவும்- இதை உணர்ந்து கொண்டவர்கள் என்ற அடிப்படையில் சுதந்திர போராட்டங்களில் சுயநிர்ணய உரிமைக்கு போராடும் மக்களுடன் தாமும் சேர்ந்து இயங்குவோம் என்ற உறுதி மொழியை அளித்தார்கள்.

அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள்அவை ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான செயல் திட்டங்களில் ஈடுபடும் அதே நேரத்தில், உலகெங்கும் வாழும் தமிழர்களை அத்துடன் உலக மக்களை ஒன்று திரட்டும் செயற்பாடுகளில் இதுவும் ஒரு நகர்வாகும் . மௌரிசியஸ் நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டம் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டு வருகிறது.

செய்தி: அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை