1940களில் அக்காலக் கட்டத்தில் விவசாய அமைச்சராக இருந்த டி.எஸ்.சேனநாயக்கா அம்பாறை மாவட்டத்தில் அரச நிதி உதவியுடன் பல சிங்கள குடியேற்ற திட்டங்களை நிறுவினான்.இதன் மூலமாக அம்பாறை மாவட்டத்தில் கல்லோயோ அபிவிருத்தி திட்டம், திருகோணமலையில் கந்தளாய் குடியேற்ற திட்டம், அல்லை குடியேற்ற திட்டம் போன்ற குடியேற்ற திட்டம் உருவாக்கப்பட்டு தமிழர்களின் பரந்து விரிந்த நிலப்பரப்பு சூறையாடப்பட்டன.

அடுத்து 1956ம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலில் S.W.R.T.பண்டாரநாயக்கா இலங்கையின் பிரதமரானார்.அவரது வாக்குறுதிகளில் ஒன்றான சிங்களம் மட்டும் சட்டத்தை 1956ம் ஆண்டு ஜூன் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதனை அகில இலங்கை தமிழரசுக்கட்சி தனது எதிர்ப்பை நேரடியாக தெரிவிக்க 1956ம் ஆண்டு ஜூன்5ந்தேதி பழைய பாராளுமன்ற கட்டிடத்திற்கு முன்னால் சத்தியாகிரக போராட்டம் நடத்தியது.இதில் அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த தமிழ் கல்வி மான் வண்பிதா தனிநாயகம் அடிகளார் அவர்களும் கலந்து கொண்டார்.

Inginiyagala
அன்றைய தினம் சிங்கள காடையர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் வயது வித்தியாசமின்றி தாக்கப்பட்டு தமிழ் மக்கள் பலரை கோரமாக கொலை செய்தனர்.கொழும்பிலுள்ள தமிழர் கடைகள் கொள்ளையடிக்கப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டது. அன்றைய தினம் இலங்கை தீவு முழுவதும் தமிழர்களுக்கு எதிரான பல கொலை, கொள்ளைகள் நடத்தப்பட்டன.

அம்பாறை மாவடத்தில் குடியேறிய சிங்கள காடையர்கள் தமிழர்களுக்கு எதிரான வன்முறையில் “இக்கினியாக்கலை ” என்ற இடத்தில் கரும்புத் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த 150 அப்பாவித் தமிழர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.அரைகுறை உயிருடன் உள்ளவர்களை இரக்கமின்றி இறந்தவர்களுடன் எரியும் தீயில் தூக்கி வீடப்பட்டதும் மிகக்கொடிய செயல். இத்தகைய இக்கினியாக்கலை படுகொலை அந்த கால நேரத்தில் இலங்கை வரலாற்றில் முதன் முறையான பெரும் தொகை தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்.

இப்படுகொலையில் ஏறக்குறைய 150 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது. இக்கினியாக்கலை படுகொலை சிங்கள காடையர்களின் இரத்த வெறியாட்டத்தின் ஆரம்ப நிலை.

நன்றி – “அவசரகாலச் சட்டம் 1958” என்ற நூலிலிருந்து .