தமிழீழ விடுதலைக்காக களமாடி வீரமரணம் அடைந்த போராளிகளை நினைவுகூரும் நிகழ்வுகள் உலகம் எங்கும் இடம்பெற்று வருகின்றது. இந்த நிகழ்வுகளின் ஒரு பகுதியை இங்கு தருகின்றோம்.

மாவீரர் தினம் உணர்வு பூர்வமாக தமிழர் தாயகத்தில் அனுஸ்டிப்பு!!
jaffna-2013-1
யாழ்பாணத்தில் இன்று மாவீரர் நாள் மிக உணர்வு பூர்வமாக நடைபெற்றது. சிங்களப் படைகளின் பலத்த நெருக்கடிகள், அச்சுறுத்தல்கள் மத்தியில் மக்கள் தங்களுக்கு ஏற்றவகையில் மிகவும் இரகசியமான முறையில் மாவீரர் நாளை அனுஸ்டித்து வருகின்றனர்.
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று புதன்கிழமை காலையும் மாலையும் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபியில் சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேநேரம் யாழ் போதனா மருத்துவமனையின் புதிய கட்டிடத்தின் மேல் பகுதியில் மாவீரர்களுக்குச் சுடர் ஏற்றப்பட்டுள்ளது. சம்பவத்தை அறிந்த இராணுவத்தினர் குறித்த இடத்திற்குச் சென்று மாவீரருக்கு ஏற்றப்பட்ட சுடரை அணைத்து அப்புறப்படுத்தியுள்ளார்கள்.

மன்னார்

மன்னார் முருங்கன் பிரதேசத்தில் மாவீரர் நாள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாவீரர் நாளை முன்னெடுத்த மூவர் சிறீலங்காக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவீரர் நாள் கடைப்பிடிப்பதற்குச் சிங்களப் படைகள் தடை விதித்த போதிலும் இவர்கள் மாவீரர் நாளை கடைப்பிடித்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு

மாவீரர் நாளை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலும் நேற்று இரவு மாவீரர் நாள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதனை அறிந்த இராணுவத்தினர் இச் சுவரொட்டிகளை அகற்றியுள்ளனர்.
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மாணவர்களோடு மாவீரர் நாள் நிகழ்வு…

பிரித்தானியா
lon-hero-2013-1
லண்டனில் எக்ஸெல் மண்டபத்தில் மாவீரர் தினம் 11.00 மணிக்கு ஆரம்பமானது. தேசிய கொடி ஏற்றப்பட்ட பின்னர் 12.35 க்கு அக விளக்கு ஏற்றப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளார்கள். மண்டபத்தில் தற்போது 20,000 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உள்ளார்கள்.

புதுக்கோட்டை (தமிழகம்)
hero2013-2
புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்.நாம் தமிழர் கட்சியின் தலைவர் திரு சீமான் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு (தமிழகம்)
hero-senkalpet
காவல்துறை மாவீரர் சின்னங்களை இடித்த போதும் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் மாவீரர் நாள் அனுசரிப்பு.
ஈழத்தில் உயிரிழந்தவர்களுக்காக நவ 27ம் தேதி மாவீரர் நாள் அனுசரித்து அஞ்சலி செய்து வருகின்றனர் உலகத் தமிழர்கள். இந்த நவ 27ல் மாவீரர் தினத்தை அனுசரித்து அஞ்சலி செலுத்துவதற்காக செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் மாவீரர் நினைவு சின்னத்தை உருவாக்கி கொடியேற்றி அஞ்சலி செலுத்துவதற்காக மாவீரர் நினைவு மண்டப அமைப்பையும் ஈழத்தமிழ் அகதிகள் செவ்வாய்க்கிழமை இரவு உருவாக்கினர்.

தகவலறிந்த தமிழக காவல்துறையினர் ஈழத்தமிழர்கள் உருவாக்கிய மாவீரர் நாள் நினைவு மண்டபத்தை இடித்து இரவோடு இரவாக தகர்த்தெரிந்தனர்.

இதனால் ஈழத்தமிழர்கள் தங்களின் உணர்வுகளை கொச்சைபடுத்தியதாகவும், இதனால் தங்களது மனம் புண்படுத்தபட்டுவிட்டதாவும், மாவீரர் நினைவு தினத்தை அனுசரித்து அஞ்சலி செய்ய விடாமல் தங்கள் மனதை காயப்படுத்திய கியூபிரிவு காவல்துறை மற்றும் மாவட்ட காவல்துறையினரை கண்டித்து முகாமில் தங்கியுள்ளவர்களில் 36 பேர் புதன்கிழமை காலையில் இருந்து உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்பு மாலை 6 மணிக்கு மேல் உண்ணா நிலைப் போராட்டத்தை முடித்துக் கொண்ட முகாம் வாசிகள் மீண்டும் தற்காலிக நினைவுச் சின்னங்கள் , கல்லறைகள் உடனே அமைத்து மாவீர்களுக்கு அஞ்சலி செலுத்தத் தொடங்கினர். விளக்குகள் ஏற்றியும் மாவீரர் சுடர் ஏற்றியும் இறந்த மாவீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். மாவீரர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்தனர்.

இம்முறை காவல்துறை முகாம் தமிழர்களின் இந்நடவடிக்கைக்கு எந்த வித எதிர்வினையும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் மாவீரர் நினைவு தினம் எந்தவொரு சிக்கல்களும் இல்லாமல் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அனுசரிக்கப்பட்டது .

மலேசியா
malasiya-hero
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள சோம அரங்கில் நடைபெற்ற தமிழீழ மாவீரர் எழுச்சி நாள் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசசார்பற்ற அமைப்புக்களும் பெரும்திரளான மக்களும் கலந்து கொண்டனர்.