tn-student-usaதமிழ்ப்பரப்பில் மட்டுமல்ல அதற்கு வெளியிலும் “அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கிறோம் என்ற கூச்சலுக்கு குறைவில்லை. ஆனால் இன்றைய நாளில் தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் அதை ஒரு போராட்ட பொறிமுறையாக மாற்றிக்காட்டியது தமிழக மாணவர்கள்தான்.

தலைவர் பிரபாகரனின் படத்தையும் தமிழீழ தேசியக்கொடியையும் பாலச்சந்திரனின் படத்தையும் காவியபடி போராட்ட களத்தில் நிற்கும் மாணவர்கள் தாம் யாரின் சார்பாக களத்தில் நிற்கிறோம் என்பதை தெளிவாகவே எழுதியிருக்கிறார்கள்.

ஏனென்றால் மற்றவர்களால் வாய்கிழிய பேச முடியும். ஆனால் எதையும் பிரபாகரனை பின்தொடர்பவர்களாலேயே சாதிக்க முடியும்.

மே 18 இற்கு பிறகுகூட “புலிநீக்கம்” செய்யப்பட்ட அரசியலை முன்மொழியும் சிங்கள இந்திய மேற்குலக சதியின் பின்புலம் இதுதான்.

tn-student-usa2
ஆனால் தமிழக மாணவர்கள் தமிழக மண்ணில் வைத்து புலிகளின் தொடர்ச்சியாக தாம் எந்த வழியிலும் போராடுவோம் என்ற செய்தியை அமெரிக்காவிற்கு “உறைக்கவே” சொல்லியிருக்கிறார்கள்.

புலிகளின் இராணுவ பலம் எத்தகைய வலுச்சமநிலையை உருவாக்கி புலிகளை பேரம்பேசும் வல்லமையாக உருவாகியதோ அத்தகைய ஒரு பரிமாணத்தில் இராஜதந்திர களத்தில் தமிழக மாணவர்களின் போராட்டம் தமிழீழ விடுதலை சார்ந்து ஒரு வலுச்சமநிலையையும் பேரம்பேசும் வல்லமையையும் உருவாக்குவது திண்ணம்.

இன்று சென்னையிலுள்ள அமெரிக்க துணை தூதரகத்திலிருந்து கொழும்பு, ஜெனிவா மற்றும் நியுயோர்க்கிற்கு அனுப்பப்பட்டதாக தூதரக வட்டாரத்திலிருந்து கசியும் தகவல்கள் அதை உறுதி செய்கின்றன.

மாணவர்களுக்கு தமிழீழ மக்கள் சார்பாக பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..

ஈழம் ஈ நியூஸ்.