un-sanctions_siஅடுத்த மாதம் ஜெனிவாவில் வரஇருக்கும் இலங்கையில் நடைபெற்ற போர்குற்றம் பற்றிய விசாரணை அறிக்கையை தள்ளிப்போடுவதற்கு இலங்கைக்கும் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஆதரவு தன்மையை கூறிக்கொண்டு தமிழ் மக்கள் மத்தியில் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதுமான நிலைப்பாட்டினை காட்டிக்கொள்வது தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் வரலாற்று தவறாகும்.

 

ஐரோப்பாவில் உள்ள அரச சார்பற்ற அமைப்பு ஒன்றுடன் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு, ஜெனீவாவில் அடுத்த மாதம் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் பற்றிய விசாரணை அறிக்கை உரிய நேரத்தில் வெளியாகுமா என வினாவியோது, இலங்கை அரசு விசாரணை அறிக்கை வெளியாவதை ஒத்தி வைக்குமாறு கோரியிருந்தனர். நாம் இதுபற்றி தமிழ்க்கூட்மைப்பு என்ன கூறியது என்று கேட்போது, அவர்கள் (தமிழ்க்கூட்மைப்பு) அதற்கு அதுபற்றி அவர்கள் இலங்கை அரசின் கோரிக்கையை மறுதலிக்கவிலை  என்று கூறினார்கள். இதனால் அவ் விசாரணை அறிக்கை வெளியாவது சாத்தியமற்றது என்று தெரிவித்துள்ளனர். எனவே அப்படி ஒத்தி வைக்க கோரிய தமிழ் கூட்டமைப்பின் தலைமை யார் என்ற கேள்வி எழுகின்றது.

 

மேலும் நேற்றைய தினம் 16.02.2015 யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகையில் கூட்டமைப்பின் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ள திரு சுமந்திரன் அவர்கள், நிபந்தனையின் படி இலங்கை அரசாங்கம் நடந்து கொண்டால் விசாரணை அறிக்கை வெளியாவதன் காலத்தினை நீட்டிக்கலாம் என்றும் சர்வதேச விசாரணைக்கு பதிலாக உள்ளக விசாரணைக்கு அதரவு தெரிக்கலாம் என்றும் கூறியுள்ளார். இச்செய்தியானது போரில் கொல்லப்பட்ட மக்களின் உறவினர்களுக்கும், காணாமல் போன உறவுகளுக்கும் மற்றும் போரில் இடம்பெயர்ந்து சென்ற அனைத்து உறவுகளுக்கும் கடுமையான விசனத்தினையும் கவலையையும் ஏற்படுத்தும்.

உதயன் பத்திரிகையில் வெளியாகிய விடையங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளது. இணைப்பு:

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=884463874815750775

 

1. ‘ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் மேற்பார்வையின் கீழ் உள்ளக விசாரணை இடம்பெறுவதற்கு உத்தரவாதம் கொடுத்தால் அதை நாம் வரவேற்போம்.’
(இது சர்வதேச விசாரணையை நிராகரிக்கும் செயலாகும். இந்த உள்நாட்டு விசாரணை கம்போடியாவிலும் நடைபெற்று தோல்வி கண்டது என்பது குறிப்பிடத்தக்கது என ஒபாமாவுக்கான தமிழர்கள் தெரிவித்துள்ளனர்)

 

2. ‘ஐ.நா. விசாரணையின்போது விசாரணையாளர்கள் நாட்டுக்குள் வர அனுமதிக்கப்படவில்லை. அவர்களுடைய காலத்தை நீடித்து நாட்டுக்குள் வந்து விசாரணையை நடத்த இலங்கை அரசு இடமளித்தால், காலத்தை நீடிக்க நாம் இணக்கம் தெரிவிக்கலாம்.’

 

வெளிவகார அமைச்சர் திரு மங்கள சமரவீர அவர்கள் வாசிங்டனில் வைத்து அமெரிக்க ராஜதந்திரிகளிடம் பேசும் போது வெளிநாட்டு விசாரணையாளர்களுக்கு 07.02.2015 அன்று அழைப்பு விடுத்துள்ளதாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்தே திரு சுமந்திரனும் மேற்சொன்ன விடையத்தினை கூறியிருப்பதானது திட்டமிட்ட ஒரு செயற்பாட்டினையும், விசாரணை அறிக்கையை வெளியாவதை ஒத்திவைப்பதற்கு உள் இணக்கம் ஏற்படுத்திவிட்டு விடப்படும் அறிக்கை போன்றே தோன்றுகின்றது.

 

மேலும் திரு மங்கள சமரவீர அவர்கள் வாசிங்டனில் வைத்து அமெரிக்க ராஜதந்திரிகளிடம் பேசும் போது 1965ம் ஆண்டுக்கு பின்னர் தமிழ்க்கூட்டமைப்புத் தலைமைகள் சுதந்திர நிகழ்வில் கலந்து கொண்டமையானது, புதிய அசராங்கத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும், தாம் எடுக்கும் நிலைப்பாடுகளுக்கு அவர்கள் ஆதரவுத்தன்மையை வெளிப்படுத்துவதாகும் இருப்பதாக கூறினார்.

 

இப்படியாக தமிழ் கூட்மைப்பின் தலைமை நடந்து கொள்வதால், சர்வதேச விசாரணையின் மூலம் நீதியையும் அரசியல் தீர்வினையும் பெற்றுக்கொள்ளலாம் என்று நினைத்திருந்து மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தினையும், எமது மக்களின் இன்படுகொலையை ஐக்கிய நாடுகள் சபை வரை கொண்டு செல்ல உழைத்த புலம்பெயந்த மக்களுக்கும் இதற்காக உழைத்த பல சர்வவேச அமைப்புக்கள் ஆகியற்றிக்கு மிகுந்த ஏமாற்றத்தினையும், சலிப்பினையுமே ஏற்படுத்தியுள்ளது.

 

ஒபாமாவுக்கான தமிழர்கள்.