தமிழ்ச் சிற்றூர்தி நீதிக்கான பயணம் – 3வது நாள்

0
625

van-eelamதமிழ்ச் சிற்றூர்தி நீதிக்கான பயணத்தை ஐரோப்பிய நாடுகளை ஊடறுக்கும் முகமாக நோர்வே ஒஸ்லோ நகரில் ஆரம்பிக்கப்பட்டு மூன்றாவது நாளாக சுவீடன் நாட்டில் கெல்சிங்போர்க் நகரில் தனது கண்காட்சியூடாக சுவீடன் மக்களுக்கும் அத்தோடு அங்கு வாழும் வேற்றின மக்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கு நடந்துகொண்டிருக்கும் இனஅழிப்பை எடுத்துக்காட்டினர்.

ஸ்ரொக்கொல்ம் நகரில் இரண்டாவது நாளான 25.02.2014 அன்று மாலை நேரம் மக்கள் சந்திப்பும் இடைபெற்றது. இச் சந்திப்பில் கலந்துகொண்ட மக்கள் ஐனிவா மார்ச் மாதம் 10ஆம் திகதி நடைபெறவிருக்கும் மாபெரும் பேரணியில் கலந்துகொள்ளும் வகையில் உணர்வுடன் தமது கருத்துக்களை பதிவு செய்தனர்.

இவ் நிகழ்வில் அங்கு வாழும் தமிழ் உறவுகள் தமிழீழப் பற்றோடு தமிழ்ச் சிற்றூர்தி நீதிக்கான பயணத்தை மேற்கொள்பவர்களை இருகரம் நீட்டி வரவேற்று உபசரித்தனர். தமிழ்ச் சிற்றூர்தி நீதிக்கான பயணம் முன்றாவது நாளான மாலைப் பொழுதில் டென்மார்க் கொல்பெக் நகரை வந்தடைந்தது.