சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றுபவர்களிடம் அன்பான வேண்டுகோள்…

நீங்கள் தமிழ் இனம் மீது சிங்கள அரசு மேற்கொள்ளும் நுண்ணிய இன அழிப்புக்குள்ளும் தமிழ் மக்களுக்குள் திணிக்கப்படும் பௌத்த சிங்கள திணிப்புக்களுக்குள்ளும் சிக்குப்பட்டுள்ளீர்கள். அதிலிருந்து மீண்டு வாருங்கள்..

வன்னியில் நீங்கள் மொட்டில் தேர்தலில் நிற்கும் ரத்னபிரியவுக்கு வாக்களித்தால் வெல்லப்போவது ஒரு சிங்கள பிரதிநிதி. நீங்கள் சுயநலாமாக சிந்திக்காது இனம் சார்ந்து சிந்திக்க வேண்டும்.

அவர்கள் வேலை தந்திருக்கலாம். உதவி செய்திருக்கலாம். அது அரசாங்கம் தரவேண்டியது தான். அது அவர்களின் கடமை. வேலை தந்துவிட்டார்கள் உதவி செய்தார்கள் என்பதற்காக அவர்களின் காலை கழுவிக்கொண்டிருப்பது உங்களை நீங்களே அடிமையாக கருதிவிட கூடியது.

அழித்தவர்கள் தான் அவற்றை திருப்பி தரவேண்டும்.. அதற்காக அழித்தவர்களுக்கு எவ்வாறு நன்றிக்கடன் செலுத்த முடியும்? அவர்களை கூப்பிட்டு விருந்து வைக்கவேண்டியதில்லையே..

வன்னியில் மொட்டின் ஒரு பிரதிநிதி உருவாகிவிட்டார் என்றால் இவ்வளவு காலமும் நாம் விலையாக கொடுத்த மாவீரர்களினதும் அப்பாவி பொதுமக்களினதும் தியாகங்களுக்கு அர்த்தமற்றதாகிவிடும். இதே மொட்டுக்காரர் தான் அவர்களை கொன்றொழித்தவர்கள்.

வன்னியில் மொட்டின் பிரதிநிதி அதுவும் சிங்களவர் ஒருவர் வென்றால் இந்த அரசை தமிழ் மக்கள் மன்னித்து விட்டதாகவும் இந்த அரசை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டதாகவும் சர்வதேசம் பிழையாக அர்த்தம் கொள்ள காரணமாக அமைந்துவிடும். எனவே தமிழராக இருந்தாலே சிங்கள கட்சிக்கு வாக்களித்தால் தமிழ் மக்களின் அரசியல் கேள்விக்குறியாகிவிடும்ம்

சிங்கள பகுதியில் ஒரு தமிழர் தேர்தலில் நின்றால் எந்த சிங்களவரும் அந்த தமிழருக்கு வாக்கு போட மாட்டார்கள். அது அவர்களின் இனமான உணர்வு. தமிழ் பகுதியில் ஒரு சிங்களவர் நின்றால் இனமான உணர்வை இழந்து தமிழர்கள் வாக்கு போட முனைகிறார்கள்.

உண்மையில் அவர்கள் சொல்வது சரிதான். பனங்கொட்டை தமிழன் இழிச்சவாய் தமிழன் மூளையில்லாத தமிழன் என்று சொல்வது சரிதான்.

இவ்வளவு காலமும் தமிழ் வேட்பாளர் தம்மோடு ஒருவரை நிறுத்தி எவ்வாறு முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் வெல்கிறாரோ?? அவர் வென்றபின் வன்னியை எவ்வாறு சீரழித்தோரோ அதேபோல முஸ்லிம் வேட்பாளரோடு ஒரு சிங்கள வேட்பாளரும் நிறுத்தப்பட்டுள்ளார். தமிழ் மக்களின் வாக்கை சூறையாடுவது தான் இவர்களின் நோக்கம்.

இவர்கள் வென்றபின் வன்னியில் தமிழ் பகுதிகளை அபிவிருத்தி செய்ய மாட்டார்கள். ஏனென்றால் அப்போது வன்னியில் சிங்களவர்கள் தான் அதிகம் வசிப்பார்கள். முஸ்லீம்கள் தான் அதிகம் வசிப்பார்கள்.. தமிழர்கள் சிறுபான்மையாக்கப்பட்டு ஒரு மூலையில் இருப்பார்கள். ஏனையோர் தப்பியோடி வெளிநாட்டிலிருப்பார்கள். இந்த நுண்ணிய இன அழிப்பு அரசியலை விளங்கி கொள்ளுங்கள்..

இவர்கள் அபிவிருத்தி என அள்ளி வீசும் காசு அரச பணம் அல்ல. நீங்கள் நான் எல்லாரும் சேர்ந்து கட்டப்போகிற வெளிநாட்டிலிருந்து வாங்கிய கடனே அந்த பணம். எங்கள் எல்லார் தலையிலும் கடனை சுமத்திவிட்டு அபிவிருத்தி என்று படம் போடுவார்கள்.. எமக்கு உரிமைகளை தராமல் செய்யும் அபிவிவிருத்தி என்பது வெறும் மண்ணால் கட்டப்படும் வீடு போன்றது..

அன்பானவர்களே சிந்தியுங்கள்.. தமிழனாக சிந்தியுங்கள்.. இனமான உணர்வோடு சிந்தியுங்கள்..

சிங்கள பௌத்த மேலாதிக்க அரசின் இன அழிப்பு அரசியலுக்கு பகடைக்காய்களாக சிக்குப்படாமல்.. வெளிவாருங்கள்..

தமிழ்த்தேசிய சிந்தனையோடு தெளிவு பெறுங்கள்.. அரச சார்பற்ற தமிழ்க்கட்சி ஒன்றை தெரிவு செய்யுங்கள்.. வாக்களியுங்கள்..

அன்னிய குடியேற்றங்களுக்கான அபகரிப்புக்களிலிருந்து வன்னிமண்ணை காக்கவேண்டும்.. நீங்களும் வாருங்கள்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here