தமிழ்த் தேச மக்கள் கட்சியின் சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு 31.08.2014 அன்று காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, இராதா அரங்கில் பிற்பகல் 02.00 மணியளவில் நடைபெற்ற முதல் அமர்வில் தோழர் செந்தமிழ்க்குமரன் தலைமையேற்றார்.

தோழர் வேனில்மைந்தன் வரவேற்புரையாற்றினார், தோழர் இளங்கோவன் அறிமுக உரையாற்றினார், மூத்த நக்சல்பாரி இயக்கத் தோழர் கோவை ஈசுவரன் தொடக்க உரையாற்றினார்.

Tamil-elirchi-TN
உலகத் தமிழ்க் கழகத் தலைவர் முனைவர் ந. அரணமுறுவல், புதுக்கோட்டை பாவாணன், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் தோழர் அப்துல் சமது, தமிழக இளைஞர் எழுச்சி இயக்கம் அமைப்பாளர் தோழர் காஞ்சி அமுதன், தமிழர் முன்னணித் தலைவர் தோழர் செயப்பிரகாசுநாராயணன், தமிழ்த் தேசிய குடியரசு இயக்கம் தோழர் தமிழழகன், கலகம் கலை இலக்கியத் தமிழ்த்தேசியத் தடம் இயக்குநர் வ. கீரா, மக்கள் இணையம் தோழர் தமிழினியன், மக்கள் சனநாயக குடியரசு கட்சி தோழர் பழனி, மறைமலையடிகள் மன்றம் தோழர் வீ. இறையழகன், மீனவர் மக்கள் முன்னணித் தலைவர் தோழர் செ. கோசுமணி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

6.00 மணியளவில் நடைபெற்ற இரண்டாவது அமர்வில் தமிழ்த் தேச மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் தமிழ்நேயன் தலைமையேற்றார், அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தமிழ்மகன் வரவேற்புரையாற்றினார்.

தமிழ்த் தேச மக்கள் கட்சி கொள்கை பரப்புச் செயலாளர் தோழர் ஆற்றல் அரசு தீர்மானங்களை முன்மொழிந்தார்.

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், பாவலர் இன்குலாப், தமிழக மக்கள் புரட்சி கழகப் பொதுச் செயலாளர் அரங்க. குணசேகரன், தமிழ்நாடு மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் செல்வி, தமிழர் முன்னேற்றப் படைத் தலைவர் தோழர் வீரலட்சுமி, தமிழர் கழகம் தோழர் தமிழ் முகிலன் ஆகியோர் எழுச்சியுரையாற்றினர்.

தமிழ்த் தேச மக்கள் கட்சித் தலைவர் தோழர் பா. புகழேந்தி நிறைவுரையாற்றினார் .

தோழர் வெற்றித்தமிழன் நன்றியுரையாற்றினார்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.