தமிழ்நாட்டில் இன்று பல இடங்களில் பல அரசியல் இயக்கங்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தைக் கொண்டாடியுள்ளனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சென்னை சாந்தோமிலுள்ள ஒரு மாற்றுத் திறன் படைத்த குழந்தைகளின் பள்ளிக்கூடத்தில் பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடினர். பிரபாகரனின் 60வது பிறந்த தினத்தைக் குறிக்கும்வகையில் 60 கிலோ கேக் வெட்டப்பட்டது.

Muttam-b-day
ம.தி.மு.க. தலைவர் வைகோ, வெள்ளக்கோவிலுக்கு அருகில் உள்ள தென்னிலை என்ற இடத்தில் கேக் வெட்டி பிரபாகரனின் பிறந்த தினத்தைக் கொண்டாடினார்.

திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்தவர்களும் இன்று பிரபாகரனின் பிறந்த தினத்தை சென்னையில் கொண்டாடினர். இது தொடர்பான கூட்டத்தை அவர்கள் நடத்தி முடித்துவிட்டாலும், இந்தக் கூட்டத்திற்கான பதாகைகளை அகற்றுவது தொடர்பாக அக்கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவர் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

seeman-b-day8
இதற்கிடையில், தமிழகத்தில் மாவீரர் தினக் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்க முதல்வர் தலையிட வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரியுள்ளார். பாரதீய ஜனதாக் கட்சியினரின் தலையீட்டின் பேரிலேயே இப்படி நடப்பதாகவும் சீமான் கூறியுள்ளார்.

தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 60வது பிறந்தநாள் விழா!

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக, சென்னை ராயபேட்டையில் 25-11-2014 நள்ளிரவு 12.00மணிக்கு மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

praba-60-1
60கிலோ எடையுள்ள கேக் வெட்டி தோழர்கள் அனைவரும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி வீரமுழக்கமிட்டு,தமிழரின் வீர விளையாட்டுக்களுடன் விழாவினை சிறப்புடன் கொண்டாடினர்.

praba-60-po
த.பெ.தி.க. வடக்குமண்டல அமைப்பாளர் கரு. அண்ணாமலை, தென்சென்னை செயலாளர் செ.குமரன், ப.அமர்நாத், அம்பேத்கர் மக்கள் நீதியியக்க பாண்டியராஜ், விமல்ராஜ், மே 17 இயக்க தோழர்கள், தமிழர் முன்னேற்ற படை நிறுவனர் தோழர்.வீரலட்சுமி மற்றும் 300க்கும் மேற்பட்ட கழக தோழர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். இனிப்பு மற்றும் பிரியாணியும் தங்கள் வாழ்த்துக்களுடன் பரிமாறிக்கொண்டார்கள்.

-த.பெ.தி.க. செய்திப்பிரிவு.
சென்னை மாவட்டம்.

கலிங்கப்பட்டியில் மேதகு பிரபாகரன் அவர்களின் 60 ஆம் ஆண்டு மணிவிழா …..

அரசியலில் பொன்விழா காணும் தலைவர் வைகோ அவர்களின் பிறந்த ஊரான கலிங்கப்பட்டியில் வெகு விமரிசையாக ஊர் பொதுமக்கள் சார்பாக பிரபாகரன் அவர்களின் 60 ஆம் ஆண்டு மணிவிழா கொண்டாடப்பட்டது.

praba-vaiko
ஊர் வினாயகர் கோவிலில் சிறப்பு அபிசேக வழிபாட்டுடன் பொங்கல் வைத்து வண்ண வண்ண வாண வேடிக்கைகள் நிகழ்த்த இன்று இரவு 7-18 க்கு கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தலைவர் வைகோ அவர்களின் தாயார் மதிப்பிற்குரிய மாரியம்மாள் அவர்களும், ஊராட்சி மன்ற தலைவர் திரு.வை.ரவிச்சந்திரன் அவர்களும் திரளான ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.

————————————————–

தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது பிறந்த நாளான இன்று காலை 8 மணியளவில் சாந்தோம் தென்னிந்திய திருச்சபை மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் கொண்டாடப்பட்டது.

tn-praba
இந்நிகழ்வில் 60 கிலோ கேக் வெட்டியும் காலை உணவு அளித்தும் குழந்தைகளுடன் விழா கொண்டாடப்பட்டது , விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் செய்தித்தொடர்பாளர் வன்னி அரசு, தலைவரின் தனிச்செயலாளரகள் தகடூர் தமிழ்ச்செல்வன் , மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன் , வள்ளியூர் வீரக்குமார் , விடுதலைச்செலவன உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். குழந்தைகள் தேசியத் தலைவருக்கு வாழ்த்து பாடல் பாடி மகிழ்ந்தனர்.

——————————————————–

இன்று தமிழ்தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் 60தாவது பிறந்த நாள் மதுரையில் தமிழ் மாணவர் இயக்கமாணவர்களால் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

thiru-
முதலில் இதனை தடுத்து வழக்கு பதிவு செய்வோம் என்று காவல்துறை மிரட்டியது. உடனடியாக மாணவர்கள் தமிழீழ ஆதரவு வழக்கறிஞர்களை தொடர்பு கொண்டனர் பின் வழக்கறிஞர் ரூபஸ் மே 17 இயக்க தோழர் கார்த்திக் உள்ளிட்ட தோழர்களின் பங்கேர்ப்போடு சிறப்பாக கொண்டாடப்பட்டது

———————————————————

புதுவையில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி தமிழர் களம் தலைவர் பிறந்த நாள் கொண்டாட்டம்.

praba-987
மேதகு.பிரபாகரன் அவர்களின் 60 ஆம், ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தமிழர்களம் அமைப்பின் மாநிலச்செயலாளர் கோ.அழகர் தலைமையில் இராசாதிரையரங்கம் அருகில் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்வில் செய்தி தொடர்பாளர் அன்பழகன், இளைஞர் செயலாளர் வேலுபிரபாகரன், தொண்டர்ப்படை செயலாளர் வெங்கடாசலம், நகரமன்ற செயலாளர் சதிசு, கணேசு, விசயரங்கம், ஆனந்து, கார்த்தி, இராசா, நாராயணன் என திரளான தமிழர்களம் தோழர்கள் கலந்துகொண்டனர்.
praba-b-day60