Ranil-Wickremesinghe-Nisha-Biswal-APதமிழர்களின் இனப்பிரச்சினையானது வெறுமனே , இலங்கைத்தீவின் எல்லைகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்டதொன்றல்ல.
இன்று விரும்பியோ விரும்பாமலோ, அது சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளது, அல்லது சர்வதேச சக்திகள் சில இதை தங்களுக்காக பயன்படுத்துகின்றன என்பதை தமிழர் அரசியலை தர்க்க பூர்வமாக அவதானித்துவருபவர்கள் அனைவருக்கும் புரிந்த விடயம்.

 

ஒரு தேசியவிடுதலைப்போராட்டம் தோன்றுவதும் வளர்ச்சியடைவதும் என்பது அத்தேசிய இனத்தின் விடுதலை உணர்வில் தங்கியிருக்கும் ஆனால் அதன் வெற்றியில் சர்வதேச பிராந்திய அரசியலும் பங்களிக்கும் என்பத பேராசிரியர் கா. சிவத்தம்பியின் பிரபலமான கூற்று ஒன்று.

 

தமிழ் இனத்திற்கு எதிரான அமெரிக்காவின் கொள்கை தொடர்பில் அரசியல் பிரமுகர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் வருமாறு:

 

சிறீலங்கா அரசாங்கத்துக்கு ஆதரவாக, சர்வதேச விசாரணை பொறிமுறையை என்பதற்கு பதிலாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான உள்ளக விசாரணை பொறிமுறை தொடர்பாக ஐ.நா மனிதவுரிமை பேரவையில் அமெரிக்க அரசு புதிய தீர்மானம் ஒன்று கொண்டுவரவுள்ளது.

 

ஜெனீவாவில் செப்டம்பரில் நடக்கவிருக்கும் ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைக் பேரவை மாநாட்டில் அந்த தீர்மானத்தை கூட்டாக கொண்டுவரவே நாங்கள் விரும்புகிறோம். சிறீலங்கா அரசுடனும், இதனுடன் தொடர்புடைய அனைத்து முதன்மையான தரப்பினருடனும், இணைந்து இந்த தீர்மானத்தைக் கொண்டுவர நாங்கள் விரும்புகிறோம்.

 

-நிசா பிஸ்வால்
துணை அமைச்சர்,

மத்திய மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான வெளியுறவுத்துறை

ஐக்கிய அமெரிக்கா.

 

 

கொலை விசாரணை உலக அளவில் வேண்டாம் என்கிறான்
கொன்றவனே நீதிபதி ஆக்கு என்கிறான்

 

-கவிஞர் காசியானந்தன்

 

வெறும் உள்ளக பொறிமுறையால் எமக்கு நீதிகிடைக்காது. இந்த விசாரணையில் சர்வதேசம் பங்கு கொள்ளவேண்டும். சர்வதேச நிபுணர்கள் கட்டாயமாக பங்கு கொள்ளவேண்டும். மேலும், மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம் இங்கு ஒரு கண்காணிப்பு பிரிவை அமைப்பதை விரும்புகின்றோம்.

 

-திரு சுமந்திரன்

 

சிறீலங்கா அரசுத்தலைவராக மகிந்த ராஜபக்சே இருந்த போது சீனாவை இலங்கையில் தாராளமாகக் காலூன்ற அனு‌மதித்தார். கம்பாந்தோட்டவில் பிரமாண்ட துறைமுகம் அமைக்க அனுமதி, இலங்கைக் கடல்பகுதியில் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் வருவதற்கு அனுமதி போன்றவை மூலம் அவர் சீனாவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொண்டார்.

 

இதை விரும்பாத அமெரிக்கா மகிந்த ராஜபக்சேவை மிரட்டுவதற்காக ஐ.நா சபையில் சிறீலங்கா அரசுக்கு எதிராகத் தீர்மானங்களைக் கொண்டுவந்தது. தற்போது அமெரிக்காவுக்குச் சாதகமான அரசு இலங்கையில் இருப்பதால் ஈழத்தமிழர்களுக்கு எதிரான போக்கை அமெரிக்கா கடைப்பிடிகின்றது.

 

பழ.நெடுமாற‌ன்,
தலைவர் – தமிழர் தேசிய முன்னணி

 

இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிக்கட்ட போரின் போது இலங்கை ராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து சர்வதேச அளவிலான விசராணை நடத்தப்பட வேண்‌டும் என ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா 3முறை தீர்மானம் கொண்டு வந்தது. இதைத் தொடர்ந்து மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

இதன் இறுதி அறிக்கை வரும் செப்டம்பர் மாதம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்நிலையில் அமெரிக்கா தனது நிலையில் இருந்து திடீரெனப் பின்வாங்கி தன்னிச்சையான உள்நாட்டு விசாரணையே போதும் என புதிதாகத் தீர்மானம் கொண்டுவர உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இவ்வாறு விசாரணை நடத்துவது ஈழத்தமிழர்களின் பிரச்னைக்குத் தீர்வாகாது.

 

கந்தையா பிரேமச்சந்திரன்
தலைவர் – ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி