தமிழ் தேசிய முன்னணியின் உதயம் தொடர்பில் தமிழர் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த அதியமான் அவர்களின் கருத்து இது.

தமிழ் தேசிய முன்னணியின் தலைமை அலுவலக திறப்பு விழா நடந்தது, அய்யா பழ நெடுமாறன் அவர்களின் அழைப்பை ஏற்று தமிழர் முன்னேற்றக் கழக நிர்வாகிகளுடன் அந்நிகழ்வில் கலந்து கொண்டேன்.

தமிழக அரசியலை தமிழர்கள் கைப்பற்ற வேண்டும் கட்சிகள் இயக்கங்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பும் உரிமையும் உங்களுக்கு உள்ளது அதை நீங்கள் அவசியம் செய்ய வேண்டுமென பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பே நானும் தோழர் ராஜ்குமார் பழனிச்சாமியும் சந்தித்து கேட்டுக் கொண்டோம். அன்று அய்யா ஒத்துக் கொள்ளாவிட்டாலும் இன்று அதற்கான முயற்சியில் தீவீரம் காட்டி பல அமைப்புகளை ஒன்று திரட்டி எதாவது செய்ய வேண்டுமென களம் இறங்கியுள்ளார்.

athiyaman-T-munnetrakalagam
எத்தனையோ வயது முதிந்தவர்கள் வெட்டித்தனமாகவும் வீணர்களுக்கு துணையாகவும் திராவிட கருத்தியலுக்கு அடிமைப்பட்டும் கிடக்கும் தருணத்தில் தனக்கு 81 வயது ஆகிய நிலையிலும் தளராது செயல்படும் அய்யாவை நாம் வாழ்த்துவோம்.

அதே நேரம் பல அமைப்புகளை ஒன்று திரட்டி எங்களைப்போன்றோர் கூடி ஏற்ப்படுத்தப்பட்டுள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அதன் பயணத்தில் எந்தவித தொய்வும் இல்லாது தனது பயணத்தை தொடரும் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

காங்கிரஸ் பா ஜ க சரியில்லை அதனால் கம்யூனிஸ்டுகளுடன் நாம் தோழமை கொள்ள வேண்டுமென்பதிலும், இந்திய தேசியத்தைத்தான் நாம் முதலில் எதிர்க்க வேண்டும் திராவிடத்தை நாம் எதிர்க்கத் தேவையில்ல எனபதிலும் நமக்கு உடன்பாடில்லை இச் செய்தியை அய்யா புதிய தலைமுறை தொலைக்காட்சி நேர்காணலில் கூறியிருந்தார்.

அய்யாவின் இவ்விரு கருத்தியல் கடந்து மீதமுள்ளவற்றில் நாம் அவருடன் ஒத்துப்போகிறோம். நமது அனைத்து இழப்பிற்கும் பிறர் காரணம் என்பதை விட நாம் விழிப்புடன் இல்லை என்பதே நமது அனைத்து இழப்பிற்கும் காரணம்.

நமக்கு திராவிடம் முதல் எதிரி அதை துரத்தி தமிழ்தேசிய அரசியலை கட்டமைப்பதுதான் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முதல் முக்கிய கொள்கை
இங்கு நான் சொல்வது குறை அல்ல. குறை என்பது எம் மனதில் இருந்தால் இந்நிகழ்விற்கு சென்றிருக்க தேவை இல்லை அய்யாவை முதியவர் என்று நினைத்து, இனத்திற்கு இது சரியானது என்பது தெரிந்தும், அதை தெரிவிக்காமல் விட்டு,விட்டு பயணிக்க இனியும் முடியாது.

தமிழ் இன முன்னேற்றத்திற்கான பாதை திட்டமிட்டு திராவிடத்தால் வீழ்த்தப்பட்டுள்ளது அதை நாமும் திட்டமிட்டுத்தான் மீட்டெடுக்க வேண்டும் நமக்குள் ஆயிரம் முரண் இருப்பினும் நாம் ஒன்று கூடாதிருக்க கூடாது நமக்குள் இருக்கும் கருத்து முரண்களை வெளிப்படுத்தாமலும் இருக்க கூடாது.

இது கருத்தியல் ..தமிழ்த்தேசியக் கருத்தியல் வலிமை பெற்று வரும் காலம் வெகு விரைவில் அனைவரும் ஓர் கருத்தியலுக்குள் வருவதற்கு கருத்து முரண்கள் வெளிப்பட்டே ஆக வேண்டும் வெளிப்படும்போதுதான் அது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

யார் ஏற்கிறார்களோ இல்லையோ என திராவிடத்தை நாங்கள் மூன்றாண்டுகளுக்கு முன்பிருந்தே கடுமையாக எதிர்க்க துவங்கினோம் என்பதை அனைவரும் அறிவர். இப்போது அக்கருத்தியலுக்கு அனைவரும் திரும்பிக் கொண்டிருப்பதையும் அனைவரும் அறிவர்.

ஆம் திரவிட அரசியலை ஓரம் கட்டி தமிழ்தேசிய அரசியலைக் கைப்பற்ற அதிமுக திமுக சக்திகளை எதிர்கொள்ளுமளவுக்கும் தமிழ் இன நல அரசியலை வலிமையாக்குவது காலத்தின் தேவை அதை உருவாக்குவோம் தமிழ் இன நல அரசியலா திராவிட அரசியலா என்பதை முடிவு செய்வதாய் இனி வரும் தேர்தல் முடிவுகள் இருக்க வேண்டும்.