தமிழ் உணர்வாளர்களை உள்ளடக்கிய மூன்றாவது அரசியல் அணி ஒன்றின் தேவையை உணர்த்திய முள்ளிவாய்க்கால் முற்றம் மீதான போர்

0
643

seeman-87தமிழக முதலமைச்சரின் முள்ளிவாய்க்கால் முற்றம் மீதான போர் உள்ளூர் அரசியல் இலாம் கொண்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் தமிழகதின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அதே பதையில் ஜெயலலிதாவும் பயணிப்பது தான் அவரின் மூடத்தனத்தை காண்பிக்கின்றது.

தமிழக மீனவர்கள் மீதான சிறீலங்கா படையினரின் தாக்குதல் தொடர்பில் இந்திய பிரதமருக்கு தொடர் கடிதம் எழுதுவது, சட்டசபையில் தீர்மானங்களை கொண்டுவருவது போன்ற நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டாலும் அது தமிழக மக்களினதும், மாணவர்களினதும் மற்றும் ஏனைய கட்சிகளினதும் அழுத்தத்திற்கும், தி.மு.காவிற்கு மக்கள் கொடுத்த பதிலடியின் பயத்தினாலும் என்பதை ஜெயாவின் எதிரும் புதிருமான செயல்களில் இருந்து அறிய முடிகின்றது.

மனமுவந்து செய்யும் காரியத்திற்கும், அழுத்தங்களை சமாளிப்பதற்காக மற்றவர்களை ஏமாற்றும் நோக்குடன் செய்யப்படும் காரியத்திற்கும் வேறுபாடுகள் உண்டு.

அதனைத் தான் ஜெயாவின் நடவடிக்கைகளில் காணமுடிகின்றது. இதனை தடுப்பது எவ்வாறு?

நாம் தொடர்ந்து கூறிவருவது ஒன்று தான் தமிழகத்தில் தமிழ் உணர்வாளர்களை உள்ளடக்கிய பலமான மூன்றாவது அரசியல் அணி ஒன்று தேவை. அதனை தான் தற்போது பலரும் தமது கருத்துக்களாக தெரிவிக்கின்றனர்.

தமிழக அரசின் முள்ளிவாய்க்கால் முற்றம் மீதான போரின் பின்னர் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கருத்துமாற்றம், கருத்துப் பாரிமாற்றம் என்பவற்றை முகநூல் ஊடாக உள்வாங்கிய ஈழம்ஈநியூஸ் அதனை இங்கு தொகுத்து வழங்குகின்றது.

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் குழந்தைகளும், பெண்களும், ஆண்களும் கண்ணீரோடும், அதிர்ச்சியோடும், கோபத்தோடும் சிற்பங்களைப் பார்த்து , “ இப்படியெல்லாம் செஞ்சாங்களா?. ஏன் இது எதுவுமே நமக்கு தெரியல.. “ என்று பொறுமிச் சென்ற பொதுமக்களைப் பார்த்து முழுதாய் மூன்று நாட்கள் கூட ஆகவில்லை. “இத இடிக்கப் போறாங்களாங்க”ன்னு தனது கண்வரிடம் பேசியவரிடம்,” இடிச்சா விட்டுருவோமா, அருவாளோட வந்துரவேண்டியதுதா” என்ற பேச்சுக்களை ஞாயிறு கேட்டு அடைந்த ஆச்சிரியங்கள் அகலுமுன்னர் அய்யோக்கியர்கள் கைவைத்ததை கேள்விப்பட்டு அதிர்ச்சியாயிருக்கிறது. ( நாளை நடக்கவிருக்கும் இனப்படுகொலைக்கான கருத்தரங்கிற்காக தில்லி வ்ரும்பொழுது கேட்டதால் உடன் பதியமுடியவில்லை)

முள்ளிவாய்க்கால் முற்றம் நெடுஞ்சாலைக்கு இடைஞ்சல் என்றால், திருப்பெரும்புதூரில் தேசிய நெடுஞ்சாலையில் இடையூறு செய்யும் ராஜீவ் நினைவிடத்தினை முதலில் இடி.

ஜெயலலிதாவின் வீட்டில் இர்ந்து முக்கால் கி.மீ தொலைவில் நகரின் மையப்படுகுதியில் ஜெமினி பாலத்தருகே மாநகராட்சி நிலத்தினை ஆக்கிரமித்து கட்டிய தி-பார்க் ஹோட்டலின் கட்டிடத்தினை இடித்து காட்டு.

அயோக்கியர்களே, பண்ணுவதோ மூன்றாம்தர அயோக்கிய ஆட்சி. சுயமரியாதையை இழந்த மானங்கெட்ட மந்திரிகள் கூட்டம். (இதில் மீசைக்கொன்னும் குறைச்சல் இருக்காது). எத்தனைக்காலம் அயோக்கியத்தனமும், பொறுக்கித்தனமும் செய்வீங்க.

உங்களது அக்கிரமிக செயல்பாடுகளை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பொதுமக்களே தட்டிக்கேட்க தயாராகி விட்டார்கள். நாங்கள் வலிமை பெறுகிறோம்.

முளையிலேயே கிள்ளியெறிய கருணாநிதி கும்பல் நினைக்கும். கட்டிமுடிச்ச பிறகு ஜெயலலிதா கும்பல் அடக்குமுறையை காட்டும். இரண்டும் ஒன்னுதான் எங்களுக்கு. உங்கள் இருவரையும் தூக்கி எறிவதுதான் எமது முக்கியப்பணி என்று அடிக்கடி எமக்கு சொல்கிறீர்கள்.

அன்பான தமிழர்களே, இயக்கங்களே, கட்சிகளே ஒன்றுபட்டு இந்த இரண்டு கொள்ளைக் கூட்ட கும்பல்களை விரட்டுவது வரலாற்றுக்கடமை.

திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் மீதான பாசத்தினை விட்டு வெளியே வாருங்கள். இவர்களுடனான கூட்டணியை விட்டு வெளியேறுங்கள். மக்களை நம்புங்கள். ஒன்றாய் தேர்தல் களம் காணுங்கள். இதற்கு மேலும் பொறுப்பதற்கில்லை… மேலுள்ள இந்தக் கட்சிகளை ஒழிக்க முன்வாருங்கள். இது முதல்பணி. இந்தியாவின் செறுக்கை நம் செருப்பால் அடித்து அம்பலப்படுத்துவோம். இது நமது முக்கியப்பணி.

கட்சி, சாதி, மதம் மீறி ஒன்று திரள்க. மனித குல விரோதிகளை விரட்டுவோம்.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

வேடிக்கை பார்க்கத்தான்
திறக்கப்பட்டது
அதனால்தான் இடிக்கப்படும் போதும்
வேடிக்கை பார்க்கப்படுகிறது.
நெடுஞ்சாலை துறைக்கு இருக்கும்
நிலம்

நெடுங்காலமாய் வாழும்
இனத்துக்கில்லை.

பயங்கரவாத அணு உலைகளை
அகற்ற துப்பில்லை
பன்னாட்டு ஆக்கிரமிப்புகளை
அகற்ற துப்பில்லை.

பாழாய்ப் போன தமிழினத்தை
அடக்குகிறாய் ஒடுக்குகிறாய்…

மொழி பற்றை
வெறியாக்காதே!
கரித்துகள் என்னை
பொறியாக்காதே!
வேலை இருக்கிறதெனக்க
போராட தூண்டாதே.

குடும்பம் இருக்கிறதெனக்கு
ஆயுதம் ஏந்த வைக்காதே….

—தமிழ்தாசன்—

000000000000000000000000000000000000000000000

தோழர்களே நேற்று கொளத்தூர் மணி அண்ணன் கைது இன்று நெடுமாறன் அய்யா கைது, நாளை வைகோ ஐயாவும், சீமான் அண்ணனும் கைது செய்யப்படலாம்.
jaya-87
இதற்க்கெல்லாம் ஒரே தீர்வு நமக்கான ஆட்சியை கைப்பற்றுவது மட்டுமே, நம் வீட்டிற்குள் ஆயிரம் பிரச்சனை இருக்கலாம் அதையெல்லாம் நாம் பிறகு பேசி தீருத்துக்கொள்வோம், இல்லை பிறகு மோதிக்கொள்வோம்,

ஆனால் இன்றைய உடனடித்தேவை அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க, சி.பி.எம் ஆகிய கட்சிகளை துடைத்தெறிவது தான்.

எனவே இந்த பாராளுமன்ற தேர்தலில் மதிமுக எந்த தேசிய கட்சிகளோடும் கூட்டணி வைக்காமல் தமிழக வாழ்வுரிமை கட்சி, SDPI போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட வேண்டும், சீமான் அண்ணன் அவர் ஏற்கனவே மதிமுக தனித்து நின்றால் பிரச்சாரம் செய்வேன் என்று சொல்லியுள்ளது போல் இந்த கூட்டணிக்கு பிரச்சாரம் செய்ய வேண்டும்.

மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பது உண்மை குறைந்தபட்சம் இந்த அணி மூன்றாவது இடமாவது பெரும், இதே கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தலை சந்தித்தால் நிச்சயம் வெற்றி பெரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆளும்கட்சியோ எதிர்கட்சியோ அது நாமாகத்தான் இருக்க வேண்டும். மக்களுக்காக இந்த தேர்தல் கூட்டணி அமைய வேண்டும்.

00000000000000000000000000000000000000000000

ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, 2014ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் விருதுநகர் தொகுதியில்,போட்டியிடப்போவது உறுதியாகியுள்ளது.

இம்முறை, நிச்சயம் வெற்றிபெற வேண்டுமென்ற முனைப்புடன் களமிறங்க உள்ள வைகோ, அதற்காக, தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் ,ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனிக் குழுக்களை அமைத்து பணிகளை முடுக்கிவிட்டுள்ளார் .

கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட வைகோ, காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரிடம் தோல்வியடைந்தார். இந்த நிலையில் 2014ம் ஆண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலில், வைகோ விருதுநகரில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. எப்படியும் வெற்றிபெற வேண்டுமென்ற முனைப்பில் அவர் உள்ளார்.

வைகோவின் ,மக்களைச் சந்திக்கும் மறுமலர்ச்சிப்பயணம் கட்சியினரிடையே நல்ல எழுச்சியையும் ,மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன .

00000000000000000000000000000000000

முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்கும் செயலலிதாவின் தமிழர் விரோத வன்செயலை கண்டித்து மதுரை நாம் தமிழர் கட்சியினர் தமிழ்த்தாய் சிலை முன்னர் ஆர்ப்பாட்டம்…

0000000000000000000000000000000000000

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் பொது இடத்தில் இருந்ததால் இடித்தோம் – தமிழக அரசு
சோபன் பாபு சிலை மட்டும் எக்ஸ்பிரஸ் அவென்யு மேலையா இருக்கு
00000000000000000000000000000000000000000000

பாண்டிச்சேரி மாநிலத்தில் மொத்தம் 30 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது புதுவையில் ஆட்சியமைக்க வெறும் 16 சட்டமன்ற தொகுதிகளில் ஜெயித்தாலே போதுமானது. இதில் மாஹி கேரளாவிலும், ஏனாம் ஆந்திராவிலும் இருக்கிறது இந்த இடங்களில் அந்தந்த பகுதியை சேர்ந்த கட்சிகள் மட்டுமே ஜெயிக்கமுடியும்,
muttam
எனவே பாண்டிச்சேரியில் உள்ள ஏனைய 28 சட்டமன்ற தொகுதிகளில் 16 இடங்களை மதிமுக,நாம் தமிழர், தமிழக வாழ்வுரிமை கட்சி, SDPI ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் நிச்சயம் அங்கு ஆட்சியை கைப்பற்ற முடியும்.

ஏனெனில் புதுவையில் நாம் தமிழர் கட்சி மிக பலமாக இருக்கிறது. ஏற்கனவே இருந்த காங்கிரசிற்கு மாற்றாக வந்த ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் மக்களின் ஆதரவை இழந்து தத்தளித்துக்கொண்டிருக்கிறது.

எனவே இந்த தருணத்தை நாம் சரியாக பயன்படுத்தி 2016-ல் புதுவையில் ஆட்சியமைக்க வேண்டும்.

மக்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள் நாம் தான் தயாராக வேண்டும்.