ஊழல்களிற்கு எதிரான இலங்கை அமைப்பு (டிரான்ஸ் பேரன்சி இன்ரர்நசனல் – இலங்கை) வட- கிழக்கு ஊடகவியலாளர்களிற்கென ஏற்பாடு செய்திருந்த புலனாய்வு செய்தி அறிக்கையிடல் தொடர்பான பயிற்சி பட்டறை மீண்டும் அரசு ஆதரவு கும்பல்களினால் குழப்பியடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் எந்தளவிற்கு இனவாதம் முத்தி போயுள்ளதென்பதற்கும், தமிழர்களுக்கு எந்த சலுகைகளும், அதிகாரங்களும் வழங்க சாத்தியமேயில்லை என்பதற்கும் உதாரணமாக, ஒரு குறியீடாக தமிழ் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படவிருந்த புலனாய்வு செய்தி அறிக்கையிடல் தொடர்பான இந்த பயிற்சி பட்டறையை சிங்கள இனவாதிகள் குழப்பியடித்ததிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

SLA-patrolஇது முதல் தடவையல்ல..கடந்த 22ம் திகதி பொலன்நறுவையில் இந்த பட்டறை நேரடியாக இனஅழிப்பு அரசின் படைப்புலனாய்வாளர்களால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.

தற்போது கடந்த 6ம் திகதி நீர்கொழும்பில் இதே பட்டறை ஆரம்பமாகவிருந்த நிலையில் இனஅழிப்பு அரசின் ஆதரவு கும்பல் ஒன்று வந்து தடுத்து நிறுத்தியிருக்கிறது.. இனஅழிப்பு அரசின் காவல்துறை இதற்கு முழு உடந்தை..

ஆர்ப்பாட்டக்காரர்கள், பட்டறையை நிறுத்தியதோடு மட்டுமல்ல தமிழ் ஊடகவியலாளர்களை வெளியேற சொல்லியும் கோசமெழுப்பியுள்ளார்கள்.

இந்த கோசத்திலேயே தீவு இரண்டாக பிளக்கப்பட்டிருப்பது புரிந்து விடும்..பிறகு ஏன் வேறு காட்சிகள், சாட்சிகள்.?

இதே அமைப்பினால் முன்பு சிங்கள ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்ட போது எந்த தடங்கலும் இல்லை.. எந்த ஆர்ப்பாட்டமும் இல்லை..

இது சொல்ல வரும் செய்தி என்ன?

தமிழர் வேறு, சிங்களவர் வேறு என்பதுதானே!

பொலன்னறுவையில் இந்த பயிற்சி பட்டறையை இனஅழிப்பு அரசு தடுத்து நிறுத்தியதை அடுத்து அச்சத்தினால் சில தமிழ் ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக “யாழ் ஊடக மையம்” இது தொடர்பான தனது கண்டன குறிப்பில் தெரிவித்திருக்கிறது..

இப்படியே போனால் தமிழ் ஊடகச்சூழலின் நிலை என்ன.?

“நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது பற்றிய புலனாய்வு அறிக்கையிடல்” எனும் தலைப்பிலேயே இப்பயிற்சி பட்டறை ஏற்பாடாகியிருந்ததது. இதை எப்படி சிங்களம் அனுமதிக்கும்..?

ஆனால் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு ஐநா தொடக்கம் அத்திப்பட்டி வரை தீர்மானங்கள் முன்மொழியும் வேடிக்கை நடந்து வருகிறது.. ஆனால் அது தொடர்பான ஊடகவியலாளர் பயிற்சியை கூட வழங்காமல் எல்லாவற்றையும் இருட்டடித்து நீதியை புதைப்பதே இனஅழிப்பு அரசின் நோக்கம் என்பதை இனியாவது இந்தியாவும் மேற்குலகமும் புரிந்து கொள்ளுமா?

தமிழீழம் அல்ல இலங்கைத்தீவில் தமிழர்களாக வாழ்வதற்கே முடியாத நிலை உருவாகி வருகின்றதென்பதை இனியாவது இவர்கள் புரிந்து கொள்வார்களா?

சிங்கள இனவாத அரசின் கீழ் தமிழர்களுக்கு எந்த தீர்வும் சாத்தியமில்லை என்பதன் மிக சமீபத்திய உதாரணம்தான் இந்த சம்பவம்.

ஈழம்ஈநியூஸ்.