தமிழ் நாட்டு கொடி அறிமுகம்

0
1770

அன்பான தமிழர் இன உறவுகளுக்கு வணக்கம்

 

கடந்த 14.10.2018 அன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டம் சென்னை அயனாவரத்தில் நடந்தது அக் கூட்டத்தில் ஐயா சி ப ஆத்தித்த்னாருடன் இணைந்து தமிழர் அரசியல் செய்த ஐயா அருகோ, ஐயா சவுந்திர பாண்டியன் மற்றும் தமிழர் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் க அதியமான், தமிழர் ஆட்சி கட்சி ஐயா சந்திர மோகன், தமிழ் தேசிய குடியரசு கட்சி தலைவர் தமிழ் மணி, தமிழர் பண்பாட்டு நடுவ தலைவர் ராஜ்குமார் பழனிச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதில் எதிர் வரும் நவம்பர் 1 “தமிழகம் அமைந்த நாள்” நிகழ்வு, மற்றும் தமிழர் இனம் பயன்படுத்த வேண்டிய கொடி தமிழ் தேசிய கூட்டமைபிற்கான பொது கொள்கை வகுத்தல் போன்றவை பற்றி கலந்துரையாடபட்டது கூட்டத்திற்கு வர இயலாத தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெருமாள் தேவன் அவர்களுடன் கருத்து பரிமாறப்பட்டு அவருடைய ஒப்புதல் பெறப்பட்டது.

 
கூட்டத்தில் கொடி பற்றிய விவாதம் இவ்வாறாக நடந்தது.

 
மூவேந்தர் சின்னம் வைத்துக் கொள்வதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை மூவேந்தர் சின்னம் ஒரு வட்டத்திற்குள் இருக்குமானால் அந்த வட்டத்திற்குள் என்ன நிறம் இருக்க வேண்டும் ? சின்னத்தின் வெளிப்புறம் இருக்க வேண்டிய நிறம் என்ன ? என்பது பற்றி மட்டுமே விவாதம் நடந்தது.

 
மேலே வானம், கீழே பூமி நடுவில் நிலம் என்பதை குறிப்பதாக ,நாம் தமிழர் ஐயா சி பா ஆத்தித்தனார் பயன்படுத்திய கொடிக்கான விளக்கம் இருப்பதாக கூறி அதையே பயன்படுத்தலாம் என ஒரு சிலர் தெரிவித்தனர்.

 

நம் தலைவர் பயன்படுத்திய புலிக் கொடியில் உள்ள சிவப்பு நிறத்தை வெளியில் வைத்து மஞ்சள் வட்டத்தினுள் மூவேந்தர் சின்னத்தை இருக்க வைக்கலாம் என சிலர் தெரிவித்தனர்.

 
அதெல்லாம் இருக்கட்டும் சிகப்பு மஞ்சள் தவிர வேறு எந்த நிறமும் இருக்க கூடாது சிவப்பு போராட்டத்தையும் மஞ்சள் தமிழர் வாழ்வில் பண்பாட்டு நிறமாக பல வடிவங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது ஆகவே அந்த இரண்டு நிறம் மட்டுமே இருக்க வேண்டும் என சிலர்.

 
இதற்கிடையே வட்டத்தில் மஞ்சள் வருவதா ? வெளியில் வருவதா என வாதிட வேண்டாம் மஞ்சள் அதிகமாக தெரியும்படி மஞ்சளே இருக்கட்டும் என ஐயா சந்திரமோகன் கூற, அதனை ஏற்கும் வகையில் மேற்கொண்டு கொடி விவாதத்தை முற்று பெற வைக்கும்படி அவர் கருத்தை அமோதித்து அக் கூட்டத்தில் அக் கொடியை காண்பித்தபடி புகைப்படமும் எடுத்து ராஜ்குமார் பழனிச்சாமி முகநூலில் பதிவு செய்யப்பட்டது.

 

அதனைத்தொடர்ந்து மஞ்சள் உள்ளே இருப்பதுதான் நன்றாக உள்ளது வெளியில் இருப்பது நன்றாக இல்லை வெளியில் சிகப்பு இருப்பதுதான் சரியாக இருக்கும், நாம் அனைத்து உரிமையையும் இழந்துள்ளோம் அவற்றை போராடித்தான் பெற வேண்டும் ஆகவே வெளியில் சிகப்பு உள்ளே மஞ்சள் இருக்கும்படி கொடியை அமைத்து கொள்ளலாம் என்ற கருத்து மேலோங்கியது பின் கூட்டமைப்பில் அங்கம் வகிப்பவர்களுக்குள் அக் கருத்து விவாதிக்கப்பட்டு ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

 

 

மேலும் சென்னையில் கிரிக்கெட் போட்டி நடத்த கூடாது என நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் திரையினர் பயன்படுத்திய தமிழ் நாட்டு கொடியில் உள்ள நிறத்தை தவிர வேறு எந்த மாற்றமும் செய்யவில்லை அக் கொடியில் சுற்றுவட்டத்தில் இருந்த நீல நிறத்தை எடுத்துவிட்டு தமிழர் பாரம்பரிய மஞ்சள் நிறம் இருக்கும்படியும் நாம் போராடி பெற வேண்டிய நிலை எடுத்துக் காட்டும்படி சிவப்பு இருக்க வேண்டியும் , நம் தலைவர் பயன்படுத்திய கொடியில் பெரும்பகுதி சிவப்பே உள்ளது என்பதை மனதில் கொண்டும் அன்று திரைத்துறையினர் மிக அவசர சூழலில் அக் கொடியை பயன்படுத்தியுள்ளனர்.

 

அதை நாம் தவறு என்று கூறவில்லை அவர்களால் தான் மூவேந்தர் சின்னம் பொறித்த கொடி சற்று பிரபலம் ஆகியுள்ளது என்பதை நன்றியோடு நினைவு கூர்ந்தும் அதே நேரம் நிரந்தரமாக நம் இனத்திற்கு ஒரு கொடி வேண்டுமாயின் அதற்காக நீண்ட ஆய்வு செய்து ஒரு கொடி அமைக்க வேண்டியிள்ளது பற்றி ஆழ்ந்து சிந்தித்து மேற்கண்ட பெரியோர்கள் வழிகாட்டுதலில் அதன்படி கீழ்காணும் இக் கொடி உருவாக்கப்பட்டுள்ளது.

 

 

அன்பான உறவுகளே

 
சிவப்பு மஞ்சள் கொடிதான் காலம்காலமாக கன்னடர்கள் பயன்படுத்தி வருகின்றனர் அதற்கு போட்டியாக நாம் அந்த நிறத்தை வைக்கவில்லை “தமிழர் இனம் தாய் இனம்” தாய் பயன்படுத்தியதை பிள்ளை தீவீரமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என அதனை எடுத்துக் கொள்ளலாம் தாய் தன் அடையாளத்தை நிலை நாட்ட தவறிவிட்டாள் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

 
மஞ்சளும் சிவப்பும் இக் கொடியில் காணப்படும், கதிரவன் கதிர்களும் குறிப்பிட்ட யாருக்கும் சொந்தமானதல்ல ஆனாலும் இந்த மூத்தகுடி அதனை பயன்படித்திக் கொண்டதில், கொள்வதில் எந்த பிழையும் இல்லை குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என நாம் பழகி கொள்ள முன் வரவேண்டும் மஞ்சள் சிவப்பு ஏகோபித்த தமிழர்களால் ஏற்றுக் கொள்ளும் நிறம் நம் தலைவன் பிரபாகரன் கொடி நிறம் மஞ்சள் சிகப்பு ஆகவே இக் கொடியை முழுமனதாக அனைத்து தமிழர்களும் ஏற்று வரும் நவம்பர் 1 தமிழகம் அமைந்த நாள் அன்று தமிழகம் முழுக்க ஏற்றி மகிழ வேண்டுகிறேன்.

 

 

நான்கு கைகளை இணைத்து திராவிட மாநிலங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறும் கமலஹாசன் கொடியை போல இக் கொடி அல்ல பாபா சின்னத்தை வைத்துள்ள ரஜினி கொடி போல இக் கொடி அல்ல . நம் இனத்தின் வலியை உள்வாங்கி நம் இனத்தை ஒன்றுபடுத்தி வலிமையானதாக மாற்ற அமைத்த கொடி இக் கொடி ஆகவே இதில் குற்றம் காணாமல் முழுமனதோடு ஏற்று இக் கொடியை உங்கள் பகுதிகளில் ஏற்றி தமிழகம் அமைந்த நாளான நவம்பர் 1 ஐ சிறப்பாக கொண்டாடுங்கள்.

 

 

நன்றி

க அதியமான்

ஒருங்கிணைப்பாளர்
தமிழ் தேசிய கூட்டமைப்பு