சிறீலங்கா அரசுடன் இணைந்து பிரித்தானியா அரசு தமிழ் மக்களுக்கு எதிராக ஈழத்தில் மேற்கொண்ட ஒருங்கிணைந்த போரின் கொடுமை தொடர்பான சிறப்பு ஆய்வரங்கம் ஒன்று எதிர்வரும் 22 ஆம் நாள் பிரித்தானியாவின் கிளாஸ்கோ நகரில் இடம்பெறவுள்ளது.

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் விளையாட்டு விழாவுக்கு முதல் நாள் இடம்பெறும் இந்த நிகழ்வில் சிறீலங்கா அரசுடன் இணைந்து பிரித்தானியா தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட போர் தொடர்பான தகவல்கள் ஆதாரத்துடன் அறிக்கையாக முன்வைக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் விவாதமும், பிரித்தானியா – தமிழ் இசைக்குழுவின் இசைநிகழ்வும் இடம்பெறுவதுடன் சிறீலங்கா அரசுடன் இணைந்து பிரித்தானியா அரசு தமிழ் மக்களுக்கு எதிராக ஈழத்தில் மேற்கொண்ட ஒருங்கிணைந்த போர் தொடர்பான பிலிப் மில்லிர் அவர்களின் 48 பக்க அறிக்கையும் விருந்தினர்களுக்கு வழங்கப்படும்.

பின்வரும் விடயங்கள் இந்த நிகழ்வில் கலந்துரையாடப்படவுள்ளன.

சிறீலங்கா இராணுவத்தின் கட்டளை அதிகாரியும், 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற போரில் பெருமளவான தமிழ் மக்களை படுகொலை செய்தவருமான மேஜர் ஜெனரல் கமால் குணரட்னாவுக்கு பிரித்தானியா பயிற்சிகளை வழங்கியிருந்தது.

2007 – 2008 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் பிரித்தானியா அரசு தனது செலவில் சிறீலங்கா புலனாய்வு பிரிவுக்கு பயிற்சிகளை வழங்கியிருந்தது.

UK-srilanka-war
பிரித்தானியா அரசின் அரசியல் அழுத்தம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான கொள்கைகள் என்பன 2002 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அமைதி உடன்பாட்டை முறியடித்திருந்தது.

இந்த நிகழ்வில், காலாநிதி என் மாலதி (ஆசிரியர் A Fleeting Moment in My Country), போல் ஓ கோனொர் (Pat Finucane Centre), அன்ரனி லோவ்ன்ஸ்ரன் (கார்டியன் பத்திரிகையின் பத்தி எழுத்தாளர்) ஆகியோர் உட்பட பலர் உரையாற்றவுள்ளனர்.

தொடர்புகளுக்கு:

Scottish Trades Union Congress, Room 1
333 Woodlands Road
Glasgow
G3 6NG
United Kingdom

https://www.eventbrite.co.uk/e/report-launch-britains-dirty-war-on-the-tamil-people-1979-2009-tickets-12242570859

Tuesday, 22 July 2014 from 18:30 to 21:00 (BST)