துரோகத்திற்கு என்றுமே உலகில் மன்னிப்பு கிடைப்பதில்லை என்பதை இந்தியாவில் நடைபெற்று முடிந்த மற்றுமொரு தேர்தல் முடிவு எடுத்துக்காட்டியுள்ளது.

தமிழீழத்தில் பல ஆயிரம் தமிழ் மக்கள் கோரமாகப்படுகொலை செய்யப்பட்டபோது அதனை தடுப்பதைக்கூட விரும்பாமல், அதனை உலகின் கண்களில் இருந்து மறைத்து இந்திய காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சிங்கள தேசத்திற்கு தனது விசுவாசத்தை காண்பித்த திராவிடமுற்னேற்றக் கழகம், தனது நிலம் என்று கூறிவரும் தமிழகத்தில் மீண்டும் ஒருமுறை அனாதையாக வீழ்ந்து கிடக்கின்றது.

ragul
2009 ஆம் ஆண்டு எமது இனத்தின் அழிவில் அரசியல் இலாபம் பார்த்த திமுக தலைவர்களுக்கு அன்று ஏமாற்றப்பட்ட மக்கள் தற்போது தாங்கமுடியாத பதிலடியை வழங்கியுள்ளனர். தமிழீழம், தமிழ் இனம் என்ற வேதம் தான் இந்த தேர்தலிலும் வெற்றிபெற்றுள்ளது.

உலகம் சுருங்கிவருவது என்பது, உண்மைதான் சுருங்கிவரும் உலகத்தில் தான் ஏனைய இனங்கள் எவ்வாறு சுதந்திரமாக வாழ்கின்றனர் என்பதை கண்டுகொண்டு தாமும் அப்படி வாழவேண்டும் என்ற உத்வேகத்திற்குள் எல்லா இன மக்களும் தள்ளப்பட்டுள்ளனர்.

மத்திய அரசில் பாராதீய ஜனதாக்கட்சி மிக அதிக வெற்றிபெற்றுள்ளது. மோடி மீது அதிக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், மன்மோகன் சிங் மீதும், அவரை வழிநடத்திவந்த இத்தாலிய இனத்தவர் மீதுமான வெறுப்பும் தான் பாரதிய ஜனதாவின் வெற்றி.

ஆனால் இந்த மிகப்பெரும் கூட்டணியில் அங்கம் வகித்த தமிழக கட்சிகளால் கூட தமிழகத்தில் வெற்றிவாய்ப்பை எட்டமுடியவில்லை என்பது எமக்கு காத்திரமான ஒரு செய்தியை சொல்லி நிற்கின்றது.

அதாவது தமிழ் இனம் தனது அடையாளத்தை தக்கவைப்பதற்கான போராட்டத்தை தமிழகத்தில் ஆரம்பித்துவிட்டது என்பதாகும். வடஅயர்லாந்து தொடக்கம் பலஸ்த்தீனம் வரையிலும் போரட்டம் இன்னும் கைவிடப்படவில்லை. தமது இழப்புக்களை கண்டு போராட்டத்தை கைவிட்டு ஒடுவதற்கு அவர்கள் தாயாராக இல்லை. வடிவங்கள் மாற்றமடைந்துள்ளன ஆனால் விடுதலைக்கான பாதையை அவர்கள் மூடிவிடவில்லை.

karuna23
ஈழத்தமிழ் மக்களின் நிலையும் அது தான். விடுதலை வேண்டும் என்ற கோரிக்கைகள் நாளுக்கு நாள் வலுப்பெற்றுக்கொண்டு வருகின்றனவே தவிர அது நசுங்கிப்போய்விடவில்லை. சிறீலங்காவும், இந்தியாவும், மேற்குலகமும் இணைந்து தமிழீழத்தில் நடத்திய இனஅழிப்பு என்ற கொடுமையான போருக்குள் தமிழ் மக்களின் விடுதலைத் தீ அமுங்கிப்போய்விடவில்லை.

மாறாக அது தமிழகத்தின் ஊடாக இந்தியாவின் கொல்லைக்குள் புகுந்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வெற்றியும், அவர் இந்தியா பிரதமரின் பதவியேற்பு வைபவத்தை புறக்கணித்த நிகழ்வும், அதன் பின்னர் இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களை சந்தித்து வழங்கிய மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விடையங்கள் அனைத்தும் அதனைத் தான் பிரதிபலித்து நிற்கின்றன.

தமிழகம் சரியான பாதையில் செல்ல ஆரம்பித்துள்ளது. அதனை அதன் பாதையில் இருந்து விலகாமல் காத்து பலப்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களுக்கு உண்டு.

காலம் என்பது மனிதர்களைப்போல் அல்ல, அது பலவற்றை மறக்காமல் மன்னிக்காமல் நகரும் திறன் கொண்டது அது தான் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் கிடைத்த முடிவின் சுருக்கம்.

ஈழம்ஈநியூஸ்.