துயரக் கடலில் தமிழக மீனவர்களும்-தமிழீழ மீனவர்களும்!

0
646

Fish-SLதொடர்ந்து வரும் எம் தமிழ் மீனவர்களின் தீர்த்துவைக்கப்படாமல் வளர்க்கப்படும் சிக்கல்களை சூழ்ச்சியாக பயன்படுத்தி எம் இனத்தை பிரித்து பிரிவினை வளர்க்க கருவியாக்கி வருகின்றன இந்திய இலங்கை அரசுகள் என்றே தொடரும் எம் தமிழக தமிழீழ மீனவ சகோதரர்களின் துன்பங்கள் போக்கப்படாமையில் இருந்து எண்ணத் தோன்றுகின்றது.

தமிழக மீனாவர்களை எடுத்துக் கொண்டால் இதுவரை சுமார் 600க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்கள் இலங்கை அரசின் கூலிப்படையால் அடித்து துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். பலர் இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறாக இந்திய (?) மீனவர் பிரச்சனை இந்தியர்களாக எம் தமிழர்கள் பார்க்கப்படாததால் தீர்க்கப் படவில்லை.

இந்த சிக்கல்கள் இந்திய அரசால் தீர்த்து வைக்கப்படாதமைக்கு தமிழர்கள் மீது பகைமை வளர்க்கும் இந்திய மத்திய அரசே காரணம். தமிழக மீனவர்களின் அவலங்கள் அறிந்தும் அது பற்றி இந்தியா எந்த அக்கறையும் கொள்ளவில்லை. மாறாக தனது தேசத்தின் மக்களை அழிக்கும் இலங்கை அரசை உச்சம் தலையில் ஏற்றிக் கொண்டாடுவதோடு அவர்களுக்கு கடற்படை சிறப்பு பயிற்சியும் அளிக்கின்றது. எதற்கு?தன் தேசத்தின் எம் தமிழர்களை கொல்வதற்கா?

தமிழீழ மீனவர்களை எடுத்துக் கொண்டால் யாழ். மாவட்டத்திலுள்ள 50,000 மீனவக் குடும்பங்களின் நிலைமை மிக மோசமாக இருப்பதுடன், பரிதாபமாக இருப்பதாகவும் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச்சங்க சமாசத்தின் சம்மேளனத் தலைவர் அந்தோனிப்பிள்ளை எமிலியாம்பிள்ளை தெரிவித்துள்ளார். மேலும், எதிர்வரும் 20ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்கு வடபகுதி மீனவச் சங்கங்களுக்குத் தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை என்றும் இவ்வாறான நிலைமைகள் வேதனை தருகின்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொப்புள் கொடி உறவுகளான தமிழக தமிழீழ மீனவச் சகோதரர்களுக்குள் சண்டை போல் காட்டி அரசியல் பண்ணும் சூழ்ச்சியை இலங்கை அரசும் இந்திய அரசும் சூழ்ச்சியாகவே செய்து வருவதாகவே தோன்றுகின்றது. மீனவர்களை பேச அனுமதித்தால் அவர்கள் புரிதலில் விட்டுக் கொடுத்து புரிந்துணர்வு வளர்ப்பார்கள். அவர்கள் பிரிந்து பகைத்து வாழ வேண்டிய தேவை இந்திய இலங்கை அரச கூட்டு சதிகார நாச சக்திகளுக்கே உண்டு.

ஈழத்து தமிழ் மீனவர்களில் அக்கறை இருப்பதுபோல் காட்டிக் கொள்ளும் இலங்கை அரசு ஈழத்து தமிழ் மீனவரின் மீன் வளத்தை சிங்கள மீனவர்களை கொண்டு வந்து குடியமர்த்தி எம் தமிழீழ மக்களுக்கு சொல்லொணா துன்பங்களை இடையூறுகளை ஒடுக்குமுறைகளை செய்து வருகின்றமை அனைவரும் அறிந்ததே. சுரண்டிக் கொழுக்கும் சிங்கள அரசும் அதற்கு துணைபோகும் சிங்கள மீனவக் காடையர்களுமே தமிழர்களுக்கு எதிரி. இரு தமிழ் தேசங்களினதும் தமிழ் மீனவர்களை பிரித்தாளும் கயமைத்தனமும் வெறித்தனமும் அவர்களுக்கே உண்டு!

தமிழர்களுக்குள் சிக்கல் போல் காட்டிக் கொண்டு பிரிவினை வளர்க்க விளையும் நாசகார சக்திகளிடம் தமிழினம் விழிப்போடு இருக்க வேண்டும்! ஒன்று பட்டு அவர்கள் சூழ்ச்சியை முறியடிக்க தமிழக தமிழீழ மீனவ சகோதரர்கள் அவசியம் தமக்குள் சந்தித்து ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும். இணக்கப்பட்டோடும் அன்போடும் தமிழினத்தை பிரித்து அழிக்க நினைக்கும் பகையை வெல்லும் வியூகங்கள் வளர்த்து வெற்றி காண வேண்டும்.

தமிழக மீனவர்களை கைது செய்வதற்கு காரணம் ஈழத்து தமிழ் மீனவர்கள் வளத்தை பாதுகாக்க என பாசாங்கு செய்யும் சிங்கள அரசு சிங்கள மீனவரை தென்னிலங்கையில் இருந்து அழைத்து வந்து தமிழர்கள் நிலங்களில் பலாத்கார நில அபகரிப்பு சிங்களக் குடியேற்றம் மூலமும் கொள்ளை அடிப்புகள் மூலமும் ஈழத்து தமிழரை அடக்கி ஒடுக்கி துன்புறுத்தி உடமைகளை பறித்து தமிழர் கடல் எல்லைகளையும் வளத்தையும் தமதாக்கும் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து சொல்லொணா துன்பங்கள் தந்து வருகின்றது.

ஈழத்து தமிழகத்து தமிழர்களின் ஒற்றுமையை குலைப்பதும் ஈழத்து தமிழர்களை காரணம் காட்டி தமிழகத் தமிழர்களின் கடல் வளத்தை கொள்ளை அடிப்பதோடு கைது செய்து அவமானப்படுத்தி இன்பம் காண்பதும் தமிழர்களுள் இருக்கும் அன்பு விட்டுக் கொடுப்பினை குழப்பி கடல் எல்லைகளை சிங்கள பகுதியாக்குவதுமேஇலங்கை அரசின் நோக்கங்கள்.

தமிழக மீனவர்களுக்கு நடக்கும் துன்பங்கள் குறித்து ஈழத்து தமிழ் மீனவர்களும் வருந்தி மனம் மருகுவதை நான் அறிவேன். எனவே தமிழக உறவுகளும் இதை நன்கு அறிவார்கள் என நம்புகின்றேன்.

துயரக் கடலில் தமிழக மீனவர்களும்-தமிழீழ மீனவர்களும்! «அணி திரள்வோம். இந்திய-சிங்கள அரசுகளின் தமிழின அழிப்புக் கொள்கைக்கு எதிராக…»
தமிழக தமிழீழ மீனவர்களுக்கு எந்த இடர் வந்தாலும் ஒட்டு மொத்த தமிழினமும் கொந்தளிக்க வேண்டும்.தமிழீழ தமிழக மீனவர்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிராகஅனைத்து தமிழர்களும் குரல் கொடுப்போமாக.

துயரக் கடலில் தமிழக மீனவர்களும்-தமிழீழ மீனவர்களும்! «அணி திரள்வோம். இந்திய-சிங்கள அரசுகளின் தமிழின அழிப்புக் கொள்கைக்கு எதிராக…».
துயரக் கடலில் தமிழக மீனவர்களும்-தமிழீழ மீனவர்களும்! «அணி திரள்வோம். இந்திய-சிங்கள அரசுகளின் தமிழின அழிப்புக் கொள்கைக்கு எதிராக…»

தமிழீழ விடுதலை ஆதரவு மாணவர் இயக்கம்.