தேசியப்பற்றாளர் பிரபலப் பொருளியல் ஆசானும் தமிழ்த்தேசிய அரசியலின் தீவிர செயற்பாட்டாளரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் தலைவருமான சி.வரதராஜன் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி இன்று புதன்கிழமை (20.08.2014) நடைபெற்றது.

varatha-6
பழைய பூங்கா வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் இறுதிக்கிரியைகளும் அஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்று அவரது புகழுடல் அதன்பின்னர் வேம்படி மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் அமைந்துள்ள கல்வி நிறுவனத்தில் மாணவர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

varatha-7
நூற்றுக்கணக்கான மாணவர்கள் அஞ்சலி செலுத்தியபின் அவரது புகழுடல் கோம்பையன் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுத் தகனம் செய்யப்பட்டது.
varatha-12vartah22varatha-1varatha-4