சில நாட்களுக்கு முன்பு சப்ரகமுவா பல்கலைக்கழகத்தில் இனஅழிப்பு அரசின் புலனாய்வுத்துறையினரும் இனவாத சிங்கள மாணவர்கள் சிலரும் சேர்ந்து தமிழ் மாணவர் ஒருவரைத் தாக்கியதுடன் ஏனையவர்களை எச்சரித்து விட்டும் சென்றிருந்தார்கள்.

அதற்கு அடுத்த நாள் கடத்தல் பாணியிலான கைதின் மூலம் வேறொரு தமிழ் மாணவரை கைது செய்து நாலாம் மாடிக்கு கொண்டு சென்றுள்ளது இனஅழிப்பு அரசு.

sabra-2
இன்று காலை அன்று தாக்கப்பட்ட மாணவர் தனது சிகிச்சை முடிந்து விடுதிக்கு திரும்பிய நிலையில் அவரை “புலிப்பயங்கரவாதி” என்றும், “தனக்கு தானே தாக்கி கொண்டார்” என்றும் காரணம் சொல்லி கைது செய்து இவரையும் நாலாம் மாடிக்கு கொண்டு சென்றுள்ளது இனஅழிப்பு அரசு.

இது எப்படி இருக்கிறது? பாதிக்கப்பட்டவனையே குற்றவாளியாக்கும் தந்திரம். இதுதான் இனஅழிப்பு நீதி!

இப்படித்தான் தமது “பிள்ளைகளை தாங்கோ, அண்ணாக்களை தாங்கோ” என்று வீதி வீதியாக புலம்பிக்கொண்டு திரிந்த சிறுமி விபுசிகாவையும் அவளது தாயார் ஜெயகுமாரியையும் “பயங்கரவாதிகளுடன்

தொடர்பு” என்று கைது செய்து “களி” தின்ன வைத்திருக்கிறது இன அழிப்பு அரசு.

2 நாள் நாமும் கத்தினோம். தற்போது நாமும் விபுசிகாவை மறந்துவிட்டோம். பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்கி நீதியை மறுத்து, மறக்கடிக்க செய்து “நினைவு அழிப்பு” அரசியலை செய்கிறது இனஅழிப்பு அரசு.

இவையெல்லாம் சில உதாரணங்கள். இப்படி வெளியில் வராத ஆயிரம் சம்பவங்கள் அங்கு தினமும் அரங்கேறிக்கொண்டிருக்கிள்றன.

இதைத் தட்டிக்கேட்கவோ, அதை அம்பலப்படுத்தவோ எந்த நாதியும் இல்லை.

இந்த அயோக்கியத்தனங்களை இனஅழிப்பு அரசு நடைமுறைப்படுத்தினாலும் மக்களுக்கு உண்மையை சொல்லி மக்கள் போராட்டத்தை விரிவு படுத்தாத தமிழ்அரசியலவ்hதிகளும் மெத்தபடித்த தமிழ் மேதாவிகளும்தான் இந்த இழிநிலை தொடர காரணமாகும்.

எனவே மக்கள் இவர்களை நம்புவதை முதலில் கைவிட வேண்டும்.

மக்கள் முதலில் தம்மை நம்ப வேண்டும், அல்லது மாணவர்களை, போராளிகளை நம்ப வேண்டும். ஏனென்றால் ஒரு இனத்தின் விடுதலை என்பது இந்த மூன்று சக்திகளாலும்தான் சாத்தியம்.

மெத்த படித்தவர்களாலும் அரசியல்வாதிகளாலும் அல்ல.

‘போராடினால் மட்டுமே வாழ்வு’ என்ற தமிழீழதேசியத்தலைவரின் தீர்க்கதரிசனம் மிகுந்த கூற்றை மக்கள் உணர வேண்டிய தருணம் இது.

மக்கள் சிறிது காலத்திற்கு போராடாமல் வேண்டுமானால் இருந்து விட்டு போங்கள். அது பிரச்சினையில்லை. ஆனால் தமிழ் அரசியல்வாதிகளும் மெத்த படித்தவர்களும் ஏதாவது வழி ஏற்படுத்தி தருவர்கள் என்று மட்டும் நம்பி விடாதீர்கள். அது ஆபத்தானது மட்டுமல்ல மீளெழ முடியாத அதல பாதாளத்திற்குள் எம்மை தள்ளிவிடும் ஆபத்தும் நிறைந்தது.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் கோட்பாடுகளை சரியாக வரையறுத்த மாமனிதர் தராகி சிவராம் இவர்கள் குறித்து நிறையவே எச்சரித்திருக்கிறார்.

எனவே மக்கள் விழிப்படைய வேண்டிய தருணம் இது.

“விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி.”

ஈழம்ஈநியூஸ்.

Comments are closed.