நடைபெற்ற இனஅழிப்பிற்கு மட்டுமல்ல தொடரும் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பிற்கும் ஐநாவும் மேற்குலகமும் உடந்தையாக இருக்கின்றன என்று கனடிய தமிழ் வனொலிக்கு வழங்கிய சிறப்பு பகிர்வில் பெண்ணிய உளவியலாளரும் அரசியற் செய்பாட்டாளருமான பரணி கிருஸணரஜனி விளக்கியுள்ளார்.

குறிப்பாக

ஐநா சபையின் அமைப்புக்களில் ஒன்றான WFP இனால் வட மாகாண பாடசாலைகளில் மட்டும் வழங்கப்படும் மதிய உணவுக்காக ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தகரத்தில் அடைக்கப்பட்ட மீன்கள் வழங்கப்படுவதாக அங்கிருந்து தகவல்கள் கிடைக்கின்றன. இவை கதிரியக்கத்தாக்கம உள்ள ஃபுகுக்ஷிமாவிலிருந்து வந்ததாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புரிந்துணர்வு உடன்படிக்கையினூடாக தமிழர் சேனைகளை அழித்தொழிக்கும் நயவஞ்சக நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இணைத்தலைமை நாடுகளின் முக்கியமான அலகாக அப்போது ஜப்பான் விளங்கியது.

ஜப்பான் இணைத்தலைமை நாடுகளில் ஒன்றாக இருந்து தமிழின அழிப்பில் பங்கெடுத்த கதை நம் எல்லோருக்கும் தெரியும்.

அதேபோல் ஐநாவின் பங்கு உலகறிந்தது. தற்போது கதிரியக்க தாக்கம் உள்ளதாக நம்பப்படும் உணவுகளை வழங்குவதனூடாக தொடரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கும் ஐநாவும் ஐப்பானும் உடந்தையாக செய்ல்படுகின்றனவா?

அல்லது எமது இனத்தை சோதனை கூடங்களாக மாற்றுகிறார்களா?

இதன் உண்மை தன்மைகளை எப்படி நாம் கண்டறிவது? இதை எப்படி தடுத்து நிறுத்தப்போகிறோம்.? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் அதி நவீன வடிவம் இது..

இது குறித்த நேர்காணலை இங்கு கேட்கலாம்..

https://www.youtube.com/watch?v=m1hIWAGW1UQ