ele-mavaiகடந்த ஐந்து ஆண்டுகளில் எமது தற்போதய தலைமைகள் பல அரசியல் தவறுகளை செய்து விட்டார்கள். இவர்கள் தமிழர்களின் பேரம் பேசும் பலத்தினை குப்பையில் தூக்கி எறிந்தார்கள்.

 

1. 2009 இல் இருந்து சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் சர்வதேச விசாரணையை மறுத்தார்கள். அமெரிக்காவிடம் சர்வதேச விசாரணை அவசியமற்றது என்று அமெரிக்கா தூதுவர் பற்றிசியா பூட்டனஸ் அவர்களிடமே சம்பந்தன் மற்றும் சுமந்திரன் அவர்கள் நேரடியாகக் கூறினார்கள். ஆனால் 2011 இல் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் அவர்கள் அமெரிக்கா வந்தபோது அக்காலத்தில் அமெரிக்காவில் பல உயர்மட்ட அதிகாரிகள் மட்டத்தில் சர்வதேச விசாரணை கண்டிப்பாக நடைபெறவேண்டும் என்று கருத்தினை கொண்டிருந்தார்கள். இந்நிலையில் புலம்பெயர்ந்த மக்களின் எதிர்ப்புக்கு அஞ்சி வேறு வழியின்றி சர்வதேச விசாரணைக்கு அதற்கு ஆதரவு கொடுத்தார்கள். ஆனால் அண்மைக்கால அவர்களின் செயற்பாடுகள் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரின் முன்னைய அவர்களது மனோநிலையினையே பிரதிபலித்துள்ளது இங்கு குறிபிடத்தக்கது.

 

2. தற்போது சர்வதேச விசாரணை வேண்டாம் உள்ளக விசாரணையே வேண்டும் என்று சுமந்திரன் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜெனீவாவிலும் கூறி வருகின்றார்.

 

3. அடிக்கடி ஓன்று பட்ட இலங்கைக்குள் தீர்வு என்று கூறி தமிழீழம் என்றும் சொல்லுக்கு அந்தியேட்டி கிரியை செய்துவிட்டார்கள். ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்று கூறி 77, 83, 2009 ஆண்டுகளில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு மீண்டும் தமிழரை  உள்ளாக்குகின்றார்கள்.

 

4. 43 வருடங்களாக தொடர்ந்து சுதந்திர தினத்தினை பகிஸ்கரித்து வந்த தமிழரை கடந்த சுதந்திர தினத்தில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் மக்களையும் தந்தை செல்வாயையும் அவமதித்து விட்டார்கள்.

 

5. சிங்கக் கொடியை எதிர்த்து பல போராட்டங்களை செய்த தமிழ் மண்ணில் சிங்களவருடன் வந்து சிங்கக்கொடியை சேர்த்து உயர்த்தி பிடித்ததன் மூலம் தமிழரின் உணர்வுகளை மழுங்கடித்தார்கள்.

 

6. கடந்த மே18 அன்று 2009ம் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட 145,000 மேற்பட்டடோருக்கான நினைவஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ளாது கொழும்பில் ஒழித்துக் கொண்டமை மூலம் தமிழ் மக்களை அவமதித்தார்கள்.

 

7. 30 வருட ஆயுதப்போராட்டத்தினை கொச்சைப்படுத்தும் வகையில், வீரச்சாவடைந்த மாவீரர்களை ஈவு இரக்கமற்ற பயங்கரவாதிகள் என்று அமெரிக்கா மற்றும் பல வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் அடிக்கடி கூறி எம்மை பாதுகாக்க ஆயுதம் ஏந்தி தன்னலமற்று வீரமரணம் அடைந்த மாவீரர்கள் மற்றும் அவர்களது வீரம் செறிந்த போராட்டம் அனைத்தையும் இழிவு படுத்தினார்கள்.

 

8. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலன் போது யு.என்.பி இனரிடம் பெருமளவு பணத்தினைப்பெற்று அதனை தமது சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 32 இலட்சத்தினை கொடுத்தன் மூலம் தமிழரின் சுய கௌரவத்தினை இழக்கச் செய்தார்கள். தமிழ்த் தலைமைகள் பணத்திற்கு சோரம் போக்கூடியவார்கள் என்பதை காட்டினார்கள். இப்பணத்தை ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மட்டும் வாங்க மறுத்தமையானது இன்னமும் பணத்திற்காக சோரம் போகாத தமிழர் இருக்கின்றார் என்பதனையும் காட்டுகின்றது.

 

9. இவை எல்லாற்றிக்கும் மகுடம் வைத்தமை போன்று தமிழ் மக்களால் ஏகமனதாக வாக்களித்து தெரிவு செய்யப்பட்ட வடமாகாண சபையினால் கொண்டுவரப்பட்ட இனபடுகொலை தீர்மானத்திற்கு தமிழர் தலைவர்களாக கூறிக்கொண்ளும் திரு சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

10. இத்தீர்மனத்தின் பின்னர் முதலமைசர் விக்கினேஸ்வரன் அவர்களை அவமதிக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்கா இராஜதந்திரிகள் முன்னனிலையில் புதிய அரசாங்கம் எமக்கான தீர்வினை பெற்றுத்தரும் ஆனால் அதனை நாமே குழப்பிடக் கூடாது என்று விக்கினேஸ்வரனை பார்த்து கேலியாக கூறி அவரை அவமதித்தார். அமெரிக்கா இராஜாங்க செயலாளர் கெரி இன் உடனான சந்திப்பில் அவருடன் பேசுவதற்கு விக்கினேஸ்வரனை விடவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

 

11. விக்கினேஸ்வரனுக்கு உரிய தேவைகளை நிதியமைசரிடம் கேட்கும் போதெல்லாம் கொழும்பில் இருந்து கொண்டு சுமந்திரன் அவர்கள் அரசாங்த்தின் ஊடாக தடைபோட்டு வருகின்றார்.

 

12. இறுதி யுத்தத்தில் மக்களும் புலிகளும் முழுமையாக அழிக்கப்படும் வரை தற்போதைய தமிழ் தலைமைகளாக உள்ள தலைவர்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து விட்டு அனைத்து போரும் முடிவுக்கு வந்த பின்னரே நாட்டுக்கு திரும்பினார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

குறிப்பு:

மேற்கூறப்பட்ட கருத்துக்கள் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு மற்றும் இறுதியுத்தத்தினால் பாதிப்புற்று வெளியேறி அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள தமிழர்களின் ஒரு கூட்டு செயற்பாட்டின் கருத்துக்களே ஆகும். இதன் நோக்கம் நடைபெற உள்ள பொதுத்தேர்தலின் மூலம் ஈழத்தில் உள்ள தமிழ் மக்களுக்கு தமது எதிர்கால தலைமைய சரியாக தெரிவு செய்யவேண்டும் என்பதனை தெழிவை ஏற்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளது.

-ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு.

 

ஜூலை 25, 2015