ஓஸ்ரேலிய பாராளுமன்ற உறுப்பினரான திரு. ஹக் மெக்டெர்மோட் (Hugh McDermott) இலங்கை இனப்படுகொலை தொடர்பில் தமிழர்களுக்காக குரல்கொடுத்து வருபவர் இந்த நிலையில் இவருக்கு எதிராக சிங்களவர்களால் 10,000 கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில்,அவருக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்துக்களை பெரும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

எனினும் ஆதரவு போதாமல் உள்ளதாக தகவல்கள் வந்ததையடுத்து தமிழக திரைப்பட இயக்குனரும்,தமிழர் நலப் பேரியக்கத்தின் தலைவருமான திரு.களஞ்சியம் அவர்கள் காணொளியொன்றை வெளியிட்டிருந்தார்.

அவர் அதில் குறிப்பிட்ட விடயங்களை இங்குதருகிறோம்;

அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி தேவை என முகநூலில் பதிவிட்டமைக்காக அவுஸ்திரேலியாவில் வாழ்கின்ற சிங்களவர்கள் ஒருங்கிணைந்து 10000 கையெழுத்துக்கள் வாங்கி, அந்த நாடாளுமன்ற உறுப்பினரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று  கோரி அவுஸ்திரேலிய அரசிடம் ஒப்படைத்துள்ளனர்.

அந்த பாராளுமன்ற உறுப்பினருக்காக தமிழர்கள் களத்தில் இறங்க வேண்டுமா? வேண்டாமா?  தமிழர்கள் ஏன் உணர்வற்று இருக்கிறார்கள்,  உறங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் நமக்கு புரியவில்லை. அவுஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட 90,000 இற்கு மேற்பட்ட ஈழத் தமிழர்கள் வாழ்கிறார்கள்.

நம்முடைய இனத்திற்கு ஒருவர் ஆதரவாக குரல் கொடுத்து அவர் தனது பதவியை இழக்கப் போகிறார் என்று சொன்னால், அவரைக் காப்பாற்றும் பொறுப்பும் கடமையும்  யாருக்கு இருக்கிறது. நாம் புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் இருப்பது எதற்காக?  தனி ஈழம் ஒன்றே தீர்வு என்ற அந்த இலக்கை அடைவதற்கான ஒரு போராட்டத்தில் தானே நாங்கள் இருக்க வேண்டும். ஆனால் உலகம் முழுவதும் வாழுகின்ற ஈழத் தமிழர்கள், மாவீரர் நாள், இனப்படுகொலை நாள், கறுப்பு யூலை என ஒரு சம்பிரதாய கலாசார பண்டிகை போல் இவற்றையெல்லாம் மாற்றி அவற்றை கடைப்பிடிப்பதே தமது கடமையாக இருந்து விடக்கூடாது அல்லவா?

நமக்கு எதிராக ஒரே வாரத்தில் 10,000 கையெழுத்தக்களை சிங்களவன் வாங்குகின்றான். அவன் இராஜதந்திரத்தில் நம்மை தொடர்ந்து வென்று கொண்டிருக்கிறான். ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் சிங்களவர் தாங்கள் மேற்கொண்டது போர்க் குற்றவாளிகள் அல்ல, நாங்கள் இனப்படுகொலை செய்யவில்லை. நாங்கள் மனித நேயத்திற்கு எதிராக எந்தத் தவறையும் செய்யவில்லை.

நாங்கள் எங்கள் நாட்டின் மீது திணிக்கப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிராக விடுதலைப் புலிகள் என்ற அமைப்புடன் மட்டும் தான்  போரிட்டோம் என்று இலங்கையின் வெளிவிவகாரத்துறை அமைச்சர்  தினேஸ் குணவர்த்தன ஐ.நா. மன்ற மனித உரிமைகள் ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இதை அவர்கள் ஏற்க மறுத்து விட்டார்கள்.

ஆனால்  சிங்களவன் தன்னை இந்த குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற மனுவை உலகம் முழுவதும் உள்ள நாடுகளைத் திரட்டி அவர்கள் வெளியே வரப்போகிறார்கள். நாங்கள் உறங்கிக் கொண்டிருந்தால் இது நடக்கும். வெளிநாடுகளில்  போய் அகதிகளாக, ஏதிலிகளாக, நாடற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இது தரும் வேதனையிலிருந்து மீள வேண்டும் என்கின்ற எண்ணம் நமக்கு இருக்க வேண்டும்.

உலகம் முழுவதும் வாழுகின்ற எமது தாய்த் தமிழ் உறவுகள்   சிங்களவர்கள் தொடர்ச்சியாக வென்று கொண்டிருக்கும் வாய்ப்பினை நாங்கள் தான் கொடுக்கிறோம். நாங்கள் உறங்கி விடக்கூடாது. அவர்களுக்கு  எதிராக நாங்கள் எழுந்து நிற்க வேண்டும்.

அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய ஒவ்வொரு தமிழனும் நமக்காக குரல் கொடுத்து தனது பதவியை இழக்கப் போகின்ற அந்த உறுப்பினருக்காக  குரல் கொடுக்க வேண்டும். அவருக்காக நீங்கள் கையொப்பம் இட வேண்டும். 90,000 பேர் இருக்கின்றீர்கள்.

90,000 பேரின் கையொப்பமும் அவருக்கு ஆதரவாக வரவேண்டும். அப்படியிருந்தால் தான் அந்த நாடு சீர் தூக்கிப் பார்க்கும். அந்த நாடாளுமன்ற உறுப்பினரின் பதிவில் நியாயம் இருப்பதாக உலகமே நினைக்கும். ஒரு நாட்டுக்காரன் எமக்காக குரல் கொடுத்து தனது பதவியை இழப்பானாக இருந்தால், வேறு எந்த நாட்டவனும் எமக்காக குரல் கொடுக்க மாட்டான்.

தாய்த் தமிழ் உறவுகளே விழித்துக் கொள்ளுங்கள். நமக்கான போராட்டம் ஓய்ந்து விடவில்லை. முள்ளிவாய்க்கால் என்பது ஆரம்பம் தான் முடிவல்ல. தனி ஈழமே தீர்வு என்ற இந்த போராட்டம் 25 ஆண்டுகளுக்கு முன்பாக தந்தை செல்வா அவர்களின் தலைமையில் ஒரு அகிம்சை வழிப் போராட்டமாக அது தொடர்ந்தது. அதன் பிறகு சிங்களவனின் அட்டூழியம் உச்சத்திற்கு சென்ற போது, உயிரோடு தமிழர்களை நெருப்பு வைத்துக் கொழுத்திய போது,  அது ஆயுதப் போராட்டமாக பரிணமித்து 35 ஆண்டுகளுக்கு மேலாக அந்த மண்ணிலே நடந்து முடிந்து  இப்போது ஒரு ஜனநாயக வழிப் போராட்டத்தில் இப்போது  இருந்து கொண்டிருக்கிறோம்.

இந்த நேரத்தில் நமது போராட்டக் குணத்தை நாங்கள் விட்டு உறங்கி விடுவோமானால், சிங்களவன் வென்று விடுவான். ஐ.நா. மன்றத்திலே உள்ள அவர்களின் குற்றச்சாட்டுக்களிலிருந்து அவர்கள் தப்பி விட்டார்களேயானால்  ஈழம் நமக்கு இல்லை. ஈழ மண்ணிலே வாழும் தமிழர்களை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடுவார்கள். இப்போதே 400 அடிக்கு ஒரு இராணுவத்தை நிறுத்தி வைத்துள்ளான். தமிழர் பகுதிகளில் புதிய இராணுவ முகாம்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறான். புதிய சிங்கள குடியேற்றங்களை நமது பகுதிகளில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறான்.

ஆகவே உலகம் முழுவதும் வாழுகின்ற தமிழர்கள் விழித்துக் கொள்ள வேண்டும். சிங்களவர்களுக்கு எதிரான யுத்தத்தை மிக வேகமாக, மிக உக்கிரமாக தொடர வேண்டும். என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here