தமிழின அழிப்பில் உலக பெரு முதலாளிகளின் வகிபாகம் இன்னும் பேசுபொருளாகவில்லை.

 

‘பிரபாகரனியத்தின்’ மைய சரடான ‘நந்திக்கடல் கோட்பாடுகள்’ இந்த பெரு முதலாளிகளின் உலக ஒழுங்கு குறித்து நிறையவே உரையாடுகிறது.

 

நவீன அரசுகள் பெரு முதலாளிகளுக்கான அரசுகளாக மாறி ஒரு கட்டத்தில் பெரு முதலாளிகளே அரசை ஆளும் நிலை உருவாகும் என்று ‘பிரபாகரனியம்’ முன்னறிவிக்கிறது.

 

முன்னையதற்கு நரேந்திரமோடியும் பின்னையதற்கு டொனாலட் டிரம்பும் சமகால உதாரணங்கள்.

 

நரேந்திரமோடி மற்றும் டொனால்ட் டிரம்ப் போன்றவர்களின் வருகை இந்த உலக ஒழுங்கை மக்களிலிருந்து முற்றாகவே விலத்தும் தன்மையை அடையாளம் காட்டுகின்றன.

 

‘நந்திக்கடல்’ நேரடியாக அரசுகளைத் தாக்குவதைவிட, அதைத் தாங்கும் பெரு முதலாளிகள், நிறுவனங்கள்; அமைப்புக்கள; வகுத்து வைத்திருக்கும் உலக ஒழுங்கை நிர்மூலம் செய்வது குறித்தே அதிகம் உரையாடுகிறது.

 

இந்த நிர்மூலமே ஒடுக்கப்பட்டு அடக்கப்பட்டு அல்லலுறும் இனங்களுக்கான உலக ஒழுங்கை தீர்மானிப்பதில் பெரும் பங்கை வகிக்கும் என்கிறது.

 

‘பிரபாகரனியத்தின்’ நந்திக்கடல் கோட்பாட்டின் மையமான குறிக்கோள் அரசுகளை நேரடியாகத் தாக்குவது அல்ல. மாறாக, அதன் நுட்பத்தை அதன் வடிவத்தைத் தாக்குவதாகும்.

 

இதை பல பரிமாணங்களாக விளக்க முடியும். இந்த வடிவத்தை முன்பு நேரடியாக நாம் அடையாளம் காண முடியாது. ஆனால் தற்போது அதை நாம் நரேந்திரமோடி, டொனாலட் டிரம்ப் வகையறாக்கள் மூலம் ஒரளவு இலக்கு வைக்க முடிகிறது.

 

இத் தருணத்தை உலகின் போராடும் இனங்கள் ஒன்றிணைந்து பயன்படுத்தினால் உலகின் மக்கள் சார் பதிய உலக ஒழுங்கு உருவாவது திண்ணம்.

 

தமிழீழமும் இதன் வழி தன் சொந்த வரலாற்றை தானே எழுதும் நிலை உருவாகும்.

 

பல்லாயிரக்கணக்கான மக்களினதும் மாவீரர்களினதும் அர்ப்பணிப்பில் உருவான ‘நந்திக்கடல் கோட்பாடுகள்’ அதற்கு உறுதுணையாக இருக்கும்.