naliniஈழப்போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்து 1987ஆம் ஆண்டு வரை அந்த போராட்டத்திற்கும், போராளிகளுக்கும் இந்திய மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் பணம், ஆயுதம், அரசியற்குரல், பயிற்சி, பயிற்சி இடம் போன்ற எல்லா உதவிகளையும் செய்து வந்தன.

தமிழ் நாடு அரசு உத்தியோகபூர்வமாக அப்போதே ஐந்து கோடி ரூபாய் விவிடுதலைப் புலிகளுக்கு கொடுத்தது. தமிழ்நாட்டு மக்கள் ஈழப்போராளிகளை போற்றிக் கொண்டாடிய காலம் அதுவாகும். நளினி சென்னையில் பிறந்து வளர்ந்த ஒரு சாதரண சராசரிப் பெண்ணாவார். தனது பள்ளிப்படிப்பினை இல் —–@——- முடித்தார்.

இளநிலைப் பட்டப்படிப்பினை சென்னை எத்திராஜ் கல்லூரியில் முடித்தார். முதுநிலைப் படிப்பு கடைசிப் பரிட்சை கைது செய்த அன்று (15.6.91)இருந்தது. நளினியின் தந்தை காவல்துறையில் நாற்பது வருடம் நேர்மையாளராக பணி பரிந்து ,எம்.ஜி.ஆர் அவர்களிடம் பாராட்டுப் பெற்று ஆய்வாளராக ஓய்வு பெற்றவர்.

தாய் பத்மா அவர்கள் சென்னையில் பிரபல்யமான மருத்துவ மனையில் 28 வருடங்கள் தாதியாக பணிபுரிந்திருக்கிறார், இன்றய சில VIP பிரமுகர்களுக்கு அவர் பிரசவம் பார்த்திருக்கிறார்.

நளினி பிரபல்யமான பெரிய கம்பனியின் (Managing Director) மேலாள இயக்குனர்க்கு (Personal Assistantt) உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

1991 பெப்ரவரிக்கு முன்னால் விடுதலைப் புலிகளுடன் எவ்விதமான தொடர்பும் நளினிக்கு இருந்தது இல்லை என்றுதான் CBI சாட்சியங்கள் சொல்கின்றன.
இராஜிவ் காந்தி கொல்லப்படப் போகிறார் என்பது தெரிந்துதான் நளினி பொதுக்கூட்ட இடத்திற்குப் போனார் என்ற பொய்யினை நிருபிக்க தாமே தாயார் செய்த ஒப்புதல் வாக்குமூலம் எனப்படும் தாள்களில் நளினியை கொடுமைக்குட்படுத்தி CBI யினர் கையொப்பங்கள் பெற்றனர்.

நளினி அப்படித் தெரிந்து அங்கு போகவில்லை என்பதினை உணர்த்தும் நிகழ்வுகளை CBI யினர் அரைகுறையாக செய்திருக்கும் பதிவுகளிலிருந்தே தெரிந்து கொள்ளுங்கள்.

* “இந்திய அமைதிப்படைப் (IPKF) பிரச்சனையின் காரணமாக இந்திய அரசியல் தலைவர்களுக்கும் எமக்கும் இடையில் உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டது , அதனை சரிசெய்ய எமது நல்லெண்ணத்தினை வெளிப்படுத்தும் வகையில் எம் சார்பில் எல்லாத் தலைவர்களுக்கும் மாலை அணிவித்து புகைப்படம் எடுக்க வேண்டும், அது எமது போராட்டததிற்கு ஆதரவு திரட்ட உதவும் , அதற்கு கூடப்போய் உதவிசெய்ய ஒரு தமிழ்நாட்டுப் பெண் தேவை” எனச் சிவராசன் முருகனிடம் சொன்னதாக Ex.P.79 இல் எழுதி வைத்திருக்கிறார்கள். ஆக முருகனுக்கு உண்மை தெரியக்கூடாது என்பதில் சிவராசன் உறுதியாக இருந்தார் என்பதினை நிரூபிக்கும் பல ஆவணங்களில் இதுவும் ஒன்றாகும்.

அப்படியிருந்தும் நளினியை முருகன் மூளைச்சலவை செய்து ஈடுபடுத்தினார் என்ற CBI யினரின் கொடூர கற்பனை புலப்படவில்லையா…?
*19.05.91 அன்று சிவராசன் நளினியிடம்…

“பாண்டிச்சேரிக்கா அல்லது ஸ்ரீபெரும்புதூருக்கா பொதுக்கூட்டத்திற்கு போக வேண்டும் என நாளைதான் முடிவு செய்ய வேண்டும்” எனச் சொன்னபோது “அவ்வளவு தூரமெல்லாம் என்னால் வரமுடியாது, அலுவலகத்தில் விடுமுறை எடுக்கமாட்டேன் அருகிலெனில் (ஏற்கனவே சென்னை நந்தனத்தில் நடந்த வி.பி. சிங் பொதுக்கூட்டத்திற்கு போனது போல்) முடியும்” என நளினி சொன்னார் எனவும் EX.P.77 இல் எழுதி வைத்திருக்கிறார்கள்.

அப்படியொரு பாரதூரமான கொலைச்சதித்திட்டம் பற்றி தெரிந்து அதற்கு உடன்பட்டிருந்தால் ஏதோ சினிமாவிற்குப் போகிற மாதிரியா ….? நளினி வெள்ளந்தியாய் பதில் சொல்லியிருப்பார்…?

தனது அலுவலக வேலைக்கு விடுமுறை போடக்கூடாது என்ற அவரது எண்ணம் அவர் நிரபராதி என்பதினைக் காட்டவில்லையா…?
ஒருவேளை அது பாண்டிச்சேரியாக இருந்திருந்தால் நளினி போயிருக்க வாய்ப்பே இல்லையே….!
* ஸ்ரீபெரும்புதூரில் மாலை 4.30 மணிக்கு இராஜிவ் காந்தி பொதுக்கூட்டம் நடப்பதாக இருந்தது. அன்று அரைநாள் விடுமுறைக்கு நளினி விண்ணப்பித்தும் அனுமதி கொடுக்காது மதியம் 1.00 மணிக்கு போகும்படி மேலாளர் சொன்னதால் நளினி 1.00 மணிக்கு கிளம்பியதாகவும், இராயப்பேட்டை தாய் வீட்டில் போய் சாப்பிட்டுவிட்டு மாலை 3.30 மணிக்கு மேல் வில்லிவாக்கம் வீட்டில் போய்ச்சேர்ந்து, அங்கிருந்து 4.30 மணியளவில் சிவராசன், தனு சுபா ஆகியோருடன் பாரிமுனையூடாக சுமார் 7.00 மணியளவில் பொதுக்கூட்ட இடம் போய்ச் சேர்ந்ததாக CBI யினர் எழுதியிருக்கிறார்கள்.

உண்மையில் அந்தக் கொலைச் சதி தெரிந்து உடந்தையாக இருந்திருந்தால் மாலை 4.30 மணிக்கு அங்கிருக்கிற மாதிரியல்லவா நளினி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டிருக்கவேண்டும். இல்லையே ஏன்…?

ஏனென்றால் எந்த விதமான பாரதூரமான திட்டமும் , உடன்பாடும் நளினியிடம் இருந்தது இல்லை என்பதினை இது காட்டுகிறது.

* நளினியும் முருகனும் ஏற்கனவே திருப்பதியில் திருமணம் செய்து கொண்டிருந்தார்கள்.

21.5.91 அன்று சம்பவம் நடந்த நாட்களில் நளினி கர்ப்பமாக இருந்தார்.

ஆரம்பகால கர்ப்பகாலங்களில் மாடிப்படிகூட ஏறக்கூடாது என்பது மருத்துவ அவசியம். முதன்முதலில் கர்ப்பம் தரித்திருந்த எந்தப் பெண்ணாவது வெடிகுண்டு வைத்துக் கொல்லப் போகிறார்கள் என்று தெரிந்து கொண்டு கூடப் போயிருப்பாரா…? அல்லது கணவனான முருகன்தான் அனுப்பிவிட்டு இருக்கமுடியுமா..? அப்படி அனுப்பிவிட்டு வீட்டில் எப்படி படுத்து உறங்கிக் கொண்டிருந்திருக்க முடியும்….?

21.05.91 அன்று அந்த பொதுககூட்ட இடத்தில் வெடித்த குண்டு ஜாக்கட்வடிவில் இருந்தது எனவும் அதனை தனு முதுகில் கட்டிக் கொண்டு மிகவும் நெரிசலான பாரிமுனை சென்று அங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர்க்கு மூன்று மணிநேரம் சிவராசன், தனு, சுபா மற்றும் நளினி ஆகியோருடன் போய்ச் சேர்ந்ததாக எழுதியிருக்கிறார்கள்.

இவ்வளவு பெரிய கொலைச்சதிக்குத் திட்டம் தீட்டியவரர்கள் இடையிலேயே வெடித்துவிடும் ஆபத்தினை எப்படி உணராது இருந்திருக்க முடியும்…?

திருப்பதிக்கு அவர்கள் காரில் போய் வந்தவர்களுக்கு அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூர்க்கு காரில் பாதுகாப்பாக போவதினை தடுத்து எது…?

அங்கு ஐந்துபேர் பேருந்தில் ஒன்றாகப்போனார்கள் என்ற CBI யினரின் கதை நம்புகிற மாதிரியா உள்ளது..?

* 21.05.91 அன்று நளினி தனுவுடன் பயணித்தினை பார்த்தாகவோ, அல்லது அன்று சம்பவ இடத்தில் நளினியை தனுகூடப் பார்த்தாகவோ அல்லது இரவு 8.00 மணிக்குப் பிறகு நளினியை சம்பவ இடத்தில் (சம்பவம் நடந்தது இரவு 10.20 மணிக்கு) பார்த்தாகவோ ஒரு சாட்சியமும் கிடையாது!!

இந்த இடைவெளிகளை CBI நளினி பெயரில் தயார் செய்த ஒப்புதல் வாக்கு மூலங்களூடாகத்தான் நிரப்பினர்.

அதில் கூட இராஜிவ்காந்தி பொதுக்கூட்ட இடத்தில் வந்திறங்கியவுடன் சுபா நளினியைக் கூட்டிக் கொண்டு வெளியே வந்துவிட்டார்கள் என்றுதான் எழுதியிருக்கிறார்கள்.

அதன் பின்பு 10-15 நிமிடங்கள் கழித்துததான் குண்டு வெடித்தாக சாட்சியங்கள் சொல்கின்றன. இப்படி CBI யினரின் பதிவுகளிலேயே இருக்கும்போது தனு அந்த குற்றத்தினைச் நளினி மறைப்பு (Cover) கொடுத்தார் எனவும் அதற்காக முருகன் அவரை மூளைச்சலவை செய்து தயார்செய்தார் எனக் குற்றம் சாட்டி மரணதண்டனை வாங்கிக் கொடுத்தது கொடுமையில்லையா….?

* சம்பவம் இரணடாவது நாள் 23.05.91 அன்று திருத்துறைப்பூண்டியில் விடுதலைப்புலி சங்கரை “நளினியின் அலுவலக தொலைபேசி எண், நளினி மற்றும் தாஸ் என்ற பெயர்கள் எழுதப்படட துண்டுச் சீட்டு” கைப்பற்றியதாக CBI யினர் சொல்கின்றர்.

06.06.91 அன்று நளினி தம்பியை கைது செய்து கொண்டுபோய்விட்டனர்.

நளினி 10.06.91 அன்று காலைவரை அலுவலகம் போய்வந்தார்.

நளினி உண்மையில் குற்றவாளியாக இருந்திருந்தால் அன்று வரை விசாரணை செய்யாமலும், கைது செய்யாமலும் CBI ஏன் தவிர்த்தனர்….?

உண்மையில் சம்பந்தப்பட்டவர்களை பிடிக்க முடியாத காரணத்தினால் பின்யோசனையாக இவர்களை குற்றவாளியாக்கி இருப்பது புலனாகவில்லையா….?

* 06.06.91 அன்று நளினியின் தம்பியை CBI யினர் கைது செய்துகொண்டு போனபின்னர் பெரிய சிக்கலிலும், ஆபத்திலும் சிக்கிக் கொண்டோம் என்றுணர்ந்து பெரும் அவப்பெயருக்கும் பழிச்சொலலுக்கும் ஆழாகப்போகிறோம் எனப்பயந்தும் 09.06.91 அன்று இரவு 7.00 மணியளவில் நளினி, நளினியின் அம்மா, தங்கை, தங்கையின் வேலையிடத் தோழி (Paying guest ஆகவிருந்தவர்) ஆகிய நால்வரும் எலிப்பாஷண நஞ்சு சாப்பிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றனர்.

தற்செயலாக அந்நேரம் அங்கு சென்றதினால் அவர்கள் சாவிலிருந்து காப்பாற்றப்பட்டனர்.

உண்மையில் அக்கொலைக்கு உடன்பட்டவர்களாக இருந்திருந்தால் அப்படி தற்கொலை முயற்சிக்கு ஏன் போயிருக்க வேண்டும்…?

அதுவும் அவ்வீட்டில் Paying guest ஆகவிருந்த தோழியும் கூட அந்த முடிவை ஏன் எடுத்திருக்க எடுத்திருக்க வேண்டும்..?

அப்பாவிகள் மீது அப்படியொரு பாரதூரமான பழியினையும், அவப்பெயரையும், குற்றத்தினையும் சுமத்தும்போது தமது எதிர்காலம் முடிந்து விட்டது என பீதிகொள்வது இயல்பானதுதானே…!

* 10.06.91 அன்று காலை நளினி தனது பொறுப்பில் இருந்த அலுவலகத்திற்குச் சென்று “எதிர் பார்க்காத சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக நான் எனது பணியை இராஜினாமாச் செய்கிறேன் (I am resigning my job due to unforeseen circumstances.) என மேலாள இயக்குனருக்கு (MD) கடிதம்க்ஷஎழுதி வைத்துவிட்டு அலுவலகத்தினை திரும்பவும் பூட்டிவிட்டு சாவியை தனது சக ஊழியர் வீட்டுக்குச் சென்று பொறுப்பாக ஒப்படைத்து விட்டுப் போயிருக்கிறார்.

உண்மையில் அக்கொலைக்கு உடன் பட்டிருந்திருந்தால் நளினி அப்படி தனது நிறுவனத்திற்கும், இயக்குனருக்கும் பொறுப்புணர்ச்சியினை காட்டுவதிலும், சாவியை சக ஊழியரிடம் வீடு தேடிச் சென்று (அதுவும் அச்சக ஊழியரிடம் மாற்றுச்சாவி இருந்திருந்த போதிலும்) பொறுப்பாக ஒப்படைப்பதலுமா அக்கறை செலுத்தியிருப்பார்..?

இந்த நடத்தைகள் அவரின் நிரபராதித் தன்மையினை புலப்படுத்துகினறனவே! — with தமிழரசன் அப்துல் காதர் and உணர்வின் வலி.