navipillayஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களின் வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து அவர்கள் விடுத்துள்ள அறிக் வருமாறு:

நவநீதம்பிள்ளையின் வருகையை முன்னிட்டு யாழ்வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ள கவனயீர்ப்பு நிகழ்வுக்கு அனைவரையும் அணிதிரளுமாறு அழைப்புவிடுக்கின்றோம். ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் யாழ்ப்பாணம் வருகைதரவுள்ள நிலையில் 27-08-2013 அன்று காணாமல் போனோரை கண்டறியும் குழுவினால் கவனயீர்ப்பு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யுத்தகாலத்தில் காணாமல்போனவர்கள் மற்றும் யுத்தத்தின் இறுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல்போனவர்களை கண்டறிதல் தொடர்பாகவும், சிறைகளில்வாடும் தமிழ் அரசியல் கைதிகளதும், புனர்வாழ்வு முகாம்களிலுள்ள முன்னாள் போராளிகளதும் விடுதலை தொடர்பாகவும், இராணுவம் மற்றும் அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலப்பறிப்பு, சிங்கள-பௌத்தமயமாக்கல் தொடர்பாகவும் மற்றும் தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட இன அழிப்புத் தொடர்பாக சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணையை வலியுறுத்தியும் நவநீதம்பிள்ளை அம்மையாரின் கவனத்தை ஈர்க்கும் முகமாகவும் நடைபெறவுள்ள மேற்படி கவனயீரப்பு நிகழ்வுக்கு தமிழ்த் தேசிய மக்கள் மக்கள் முன்னணி முழுமையான ஆதரவை வழங்குகின்றதுவதுடன் காணாமல்போனவர்களது குடும்பங்கள், நிலப்பறிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகளது குடும்பங்களை சார்ந்தவர்கள் உட்பட அனைத்துப் பொதுமக்களையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

காலம்:- 27-08-2013 செவ்வாய்க்கிழமை

இடம்:- யாழ் வீரசிங்கம் மண்டபம்

நேரம்:- மு.ப 10.00 மணி

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தலைவர்

செல்வராசா கஜேந்திரன்
பொதுச் செயலாளர்