நாட்டில் காங்கிரஸ் தனிமை ஆக்கப்பட்டது எமக்கு கிடைத்த வெற்றி – செந்தமிழன் சீமான்

0
599

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தனித்து விடப்பட்டது எங்களுக்கு கிடைத்த வெற்றி என்று சீமான் நிருபர்களிடம் கூறினார். பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நாம் தம¤ழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது..

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தனித்து விடப்பட்டது எங்களுக்கு கிடைத்த வெற்றி என்று சீமான் நிருபர்களிடம் கூறினார். பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நாம் தம¤ழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.

முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இலங்கை தமிழர்களுக்கு எதிரான செயல்பாட்டால், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் எந்த கட்சியும் கூட்டணி சேரவில்லை. காங்கிரஸ் கட்சி தனித்து விடப்பட்டு உள்ளது. இதுவே எங்களுக்கு கிடைத்த வெற்றிதான். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு இந்த நிலை மட்டும் போதாது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை, தேர்தலுக்கு செலுத்தும் ‘டெபாசிட்’ தொகையை பெற முடியாத அளவுக்கு தோல்வி அடையச் செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட நிலை அனைவருக்கும் பாடமாக அமையும்.

தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டால் இந்த கதிதான் ஏற்படும் என்பதை அனைத்து கட்சியினரும் உணர வேண்டும். காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி இல்லாவிட்டாலும், இலங்கையில் போர் நடைபெற்ற போது அவர்கள் அரசில் அங்கம் வகித்தவர்கள் என்பதால் தி.மு.க.வை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் பா.ஜனதா கட்சியை ஆதரிப்பீர்களா என்று கேட்கிறீர்கள். பொருளாதார கொள்கை, வெளியுறவுக் கொள்கைகளில் காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் ஒரே நிலைப்பாடுதான் கொண்டிருக்கின்றன. பாரதீய ஜனதா வெற்றி பெற்றால், அந்த கட்சி பெரிய முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே ஆதரவாக செயல்படும்.

ஜெயலலிதா பிரதமரானால், அதாவது தமிழகத்தை சேர்ந்த அவர் பிரதமரானால் மகிழ்ச்சி என்று கருணாநிதி உள்ளிட்டோர் கூறி உள்ளார்கள். ஜெயலலிதா பிரதமர் ஆகிவிட்டால் எங்களுக்கும் மகிழ்ச்சி தான். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நாங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று சட்டசபையில் பல தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளார். ஆனால் வருகிற 2016-ம் ஆண்டு தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிட இருப்பதால் வெளிப்படையாக யாருக்கும் ஆதரவு அளிக்க மாட்டோம். காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதே எங்களது நோக்கமாக கொண்டு இந்த தேர்தலில் செயல்படுவோம். இவ்வாறு நாம் தமிழர் கட்சிஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

இதனிடையே, இந்த முறை இந்திய லோக்சபா தேர்தலில் இலங்கை தமிழர்களின் பிரச்சினை முக்கிய பங்கினை வகிக்கும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் தேர்தல் கருத்துக்கணிப்புகளை நடத்தும் நிறுவனம் ஒன்றின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இந்திய பொதுத் தேர்தலின் போது இலங்கை தமிழர்களின் பிரச்சினை மிகுந்த செல்வாக்கு செலுத்தும் என்றும் நம்பப்பட்டது.

இந்தியாவின் தேர்தல்பெறுபேறுகளையே தமிழீழ விடுதலைப் புலிகளும் நம்பி இருந்ததாக கூறப்பட்டிருந்தது.

ஆனால் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இலங்கை தமிழர்களின் பிரச்சினை இந்திய அரசியலில் செல்வாக்கு செலுத்தாது என்று உறுதியாக தெரிவிக்கப்பட்டது.

எனினும் கடந்த இரண்டு வருடங்களில் இந்த நிலைமை மாறி இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலசந்திரன் தொடர்பான புகைப்படங்கள்,

ஊடகவியலாளர் இசைப்பிரியா கொலை செய்யப்பட்ட காணொளி உள்ளிட்ட சனல் 4 வெளியிட்டிருந்த காணொளிகள்

மற்றும் இந்திய அரசாங்கத்தின் மந்தமான செயற்பாடு போன்றவற்றால், இந்திய மக்களின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில் இந்த முறை லோக்சபா தேர்தலில் இலங்கை தமிழர்களின் விடயம் முக்கிய பங்கினை வகிக்கும் காரணிகளில் ஒன்றாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.