நாம் ஏன் பலஸ்தீனவிடுதலையை ஆதரிக்க வேண்டும் என்பது தொடர்பில் மே பதினேழு இயக்கத்தின் தலைவர் திரு திருமுருகன்காந்தி அவர்கள் ஆற்றிய உரை இது.

“இசுலாமிய மதத்தினை கொச்சைப்படுத்துகிறார்கள்” என்று பலசமயங்களில் பொங்கி எழுந்த எந்த ஒரு இசுலாமிய மத அடிப்படைவாத குழுவோ அல்லது ’அல்கொய்தாவோ’ பாலஸ்தீன மக்களை காக்க லட்சக்கணக்கில் இசுலாமியரை திரட்டவில்லை, போராடவில்லை.

‘இந்து தர்மம் காப்போம், இந்து தேசம் அமைப்போம், இந்துவினை காப்போம்’ என்கிற ஆர் எஸ்.எஸ்-பாஜகவோ ஈழ (இந்து) தமிழர்கள் பல லட்சம் கொலை செய்யப்பட்டபொழுது ஒரு சுண்டுவிரலைக் கூட உயர்த்தவில்லை .

தமது மதத்தினை நம்புகிறவர்களைக் கூட கைவிடுபவர்களே இந்த மத அடிப்படைவாதிகள். பாலஸ்தீனமும், ஈழமும் தேசிய இனங்களாகவே போராடுகின்றன. மதங்களாக அல்ல.

யூத மத-இனவெறிக்கு இந்துத்துவ அடிப்படைவாதமும், கிருத்துவ மத அடிப்படைவாதமும் துணை போகின்றன. இசுலாமிய மத அடிப்படைவாதிகள் மெளனம் காக்கிறார்கள்.

பெளத்த சிங்கள் இனவெறிக்கு, இந்துத்துவவாதிகள் துணை போகிறார்கள்.இசுலாமிய மத அடிப்படைவாதிகள் மெளனம் காத்தார்கள்.

கொலை செய்யப்படும் மக்களுக்காக , மத-இன வெறியை-அடிப்படைவாதத்தினை மறுத்த பொதுமக்களே இன்று பல்வேறு தேசங்களில் போராடுகிறார்கள்.

மதம் மக்களை ஒருபொழுதும் காக்காது.

சக மக்களே தம்மை காக்க குரல்கொடுப்பார்கள் என்று அம்மக்களுக்கு தெரியும். இன்று இவர்களுக்கு நாம் குரல் கொடுத்தால் நாளை நமக்கென்று குரல் கொடுக்க சிலர் மிச்சம் இருப்பார்கள் என்கிற சுயநலம் தவறு கிடையாது.

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=9nC4SXg504M