mulli-87 ஈழப்படுகொலையில் இலங்கை அரசு இந்திய அரசு மற்றும் அமெரிக்கா இங்லாந்து போன்ற நாடுகளை திட்டிக் கொண்டே ,இன்னும் எத்தனை ஆண்டுகள் நினைவேந்தல் நடத்தப்போகிறோம்? தமிழர்களுக்கென்று ஒரு அரசு தமிழகத்தில் இருந்தது அந்த அரசு திமுக அரசு, அதற்கு சரி நிகராக முன்பு ஆண்ட அரசாக அதிமுக கட்சி எதிர்கட்சியாக இருந்தது. ஆனாலும் நடந்த போரை தடுக்க எதுவும் செய்ய வில்லை. அரசியலுக்காகவும் கருணா நிதியின் துரோகத்தை தோலுரித்துக் காட்டாது முள்ளிவாய்க்காலில் போர் முடியும் வரை மவுனம் காத்தது அதிமுக.

 

போருக்கும் அதிமுக. திமுக வுக்கும் சம்மந்தமே இல்லையா ?

 

 

இப்படி சிந்திக்காவிட்டால் இன்னும் உங்களுக்குள் திராவிட கருத்தியல் இருக்கிறது, அதன் வழியே தான் நீங்கள் நடக்கிறீர்கள் என்று அர்த்தம் ?

 

அப்படி நீங்கள் இல்லையென்றாலும் சில உலக அரசியல் பேசும் அதிமேதாவிகளால் மூளை மழுங்கடிக்கப்பட்டு , நமக்கு இயற்கையாக வர வேண்டிய திராவிட கட்சிகள் மீதான கோபத்தை மடைமாற்றி அமெரிக்கா, இந்தியா மீது திருப்பி இவர்களை தப்பிக்க விடும் வேலை திட்டமிட்டு செய்கிறார்கள் என்று அர்த்தம்

 

தமிழினம் தமிழகத்தில் அரசியல் ரீதியாக எழுச்சி கொள்ளாது தமிழீழம் நாம் அடைய முடியாது இது அந்த அதிமேதாவிகளூக்கே நன்கு தெரியும். தமிழினம் அரசியல் எழுச்சி கொள்ள நமக்கு எதிராக நடந்து, நமக்கு பகையாகிப்போன திராவிடம் தலை தூக்க கூடாது இச் சிந்தனையில் செயல்பட்டால் ஈழம் விரைந்து கிடைக்கும். இதற்க்கு எதிராக தமிழினம் எழுச்சி கொள்ளும் காரணத்தை மறைத்து பக்கத்திலிருக்கும் பகைவனை விட்டுவிட்டு, எங்கோ இருப்பவனை தொடந்து எதிரியாக காட்ட நினைப்பதே, தனி ஈழம் கிடைக்க முட்டுக் கட்டை போடுவதாகும்

 

இருபது பேரை சுட்டுக் கொல்ல உத்தரவிட்ட சந்திரபாபு நாயிடுவால் ஒரு மலையாளியை சுட்டுக் கொல்ல முடியுமா ? இங்கு அண்டை மா நில சந்திரபாபு நாயிடுவால் தமிழர்கள் கொல்லப்பட்டதற்க்கும் அங்கு ராஜபக்சேவால் தமிழர்கள் கொல்லப்பட்டத்தற்கும் தமிழக ஆண்ட ஆளும் அரசியல் கட்சிகளுக்கு பொறுப்பு இல்லையா ?

 

அன்று பெரியார் எதெர்க்கெடுத்தாலும் பார்ப்பான் பார்ப்பான் என்று சொன்னதற்க்கும் இன்று சிலர் எதெற்க்கெடுத்தாலும் இந்தியா அமெரிக்கா என்று சொல்வதற்க்கும் என்ன வேறுபாடு உள்ளது ?

அன்று தொடர்ந்து பார்ப்பானை எதிரியாக காட்டியதை நம்பி நாம் திராவிடர்களிடம் ஆட்சியை இழந்தோம்

 

இன்று இந்தியா அமெரிக்கா என்று காட்டி கிடைக்கபோகும் ஈழத்தை இழக்க போகிறோமா ?

 

இந்தியாவிற்கு சம்மந்தமே இல்லையா என நீங்கள் கேட்கலாம்?

 

இந்தியாதான் போரை முன் நின்று நடத்தியது நான் ஒத்துக் கொள்கிறேன்

 

இந்தியாவால் எப்படி அந்த போரை நடத்த முடிந்தது?

 

தமிழக ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் தமிழர் விரோத எண்ணம் கொண்டவர்கள், பிரபாகரன் சாக வேண்டும் என நினைப்பவர்கள் என கூறுகெட்ட இந்தியாவிற்கே நன்கு புறிந்திருந்தது.

 

அண்டை மா நிலங்கள் போல நாம் இன ரீதியாக எழுச்சி கொள்ளாமல் இனத்தை காப்பாற்ற முடியாது.