ஈழமுரசு, பதிவு, சங்கதி என தமிழ்த் தேசிய ஊடகங்களில் பலமுறை பல மாதங்கள் முன்பே லைக்காவின் கத்தி பற்றி பல செய்திகள் வெளிவந்தது. ஆனால் எவருக்கும் தெரியாதாம். இதையெல்லாம் போராட்டவாதிகள் தேடி அறிய வேண்டியது அவசியம் இல்லலையா? நாம் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? எனது இதற்கு முந்தைய பதிவின் விமர்சனங்களை கீழே சென்று பாருங்கள் அனைத்தும் இணைப்புக்களும் உள்ளது….

கத்திக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றார்கள் என்றவுடன் விழுந்தடித்து யாரிடம் முருகதாசும், கருணாவும் ஓடினார்களோ அவர்களிடம்தானே எதிருங்கள் என கோரிக்கை வைக்க முடியும் எதிர்க்காதீர்கள் என்று கேட்காத கருணாநிதியிடமா கேட்க முடியும்? நாம் யாரை நம்பியிருந்தோமோ அவர்களிடம்தான் உரிமையுடன் கேட்க முடியும் – இது எப்படி தவறாகும், இதற்கு பெயர் நாம் அவர்களை எதிர்ப்பதாக நினைத்தால் அது எம் குற்றமா?

paramesh
அதே போல் நாம் புலம்பெயர் மக்கள் போராட்டம் நடத்தவில்லை என்பதும் பொய் – நாம் போராடியதன் விளைவுதான் இன்று மாபெரும் எதிர்ப்பாக உருவாகி பலரது கழுத்தை கத்தி பதம் பார்க்க காத்திருக்கின்றது.- வீதியில் இறங்கி போராடுவது மட்டும்தான் போராட்டமா? எமது வீதிப் போராட்டம் பற்றி பிரித்தானியா காவல்த் துறையிடம் கேட்டுப் பாருங்கள்…

நாம் விஜய்க்கோ, முருகதாசுக்கே எதிராக போராடக் கேட்கவில்லை, நம் இன விரோதியான சிங்கள பயங்கரவாத அரசை பலப்படுத்த பொருளாதாரா பலம் கொடுக்கும் லைக்காவுக்கு எதிராகவே புறக்கணிக்க கோருகின்றோம்.

நான் 2013ம் ஆண்டு பொதுநலவாய மாநாட்டுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தபோது. உலகம் முழுவதும் தமிழர்கள் அம்மாநாட்டை புறக்கணிக்க கோரிக்கை வைத்து போராடினார்கள்.

ஆனால் எதுவும் அறியாதவர்கள் போல் அந்த மாநாட்டை பலப்படுத்த பல இலட்சம் பிரித்தானிய பவுண்ஸ்களை கொடுத்து ஆதரவளித்தது லைக்கா நிறுவனம் இந்த ஒரு ஆதாரம் மட்டும் போதாதா லைக்காவை எதிர்க்க???? இதை மறைக்க லைக்கா – லிபாரா வியாபாராப் போட்டியை முன்னிறுத்தி போராட மறுப்பதும், லிபாராவிற்காகத்தான் நாம் போராடுகின்றோம் என எமது போராட்டத்தை கொச்சைப்படுத்துவதையும் எந்த வகையில் சேர்ப்பது?. – ஆனால் இதைவிட பல ஆதாரங்களை வெளியிட்டாகிவிட்டது.

இவர்கள் கூறும் லிபாராவுக்கும் எதிராகவும் நான் போராட்டம் செய்தவன், அதில் வெற்றியும் பெற்றவன் என்பது எனது முகப்புதக நண்பர்களுக்கு தெரியும். விஜய் தொலைக்காட்சி நடத்த இருந்த நிகழ்வுக்கு லிபாரா ஆதரவு வழங்கியிருந்தது. விஜய் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் இலங்கையில் மகிந்தவின் கட்சி முக்கிய உறுப்பினர் நடத்திய நிகழ்வில் பாடியவர்களை அழைத்து நிகழ்வு செய்யக்கூடாது எனவும். அந்நத நேரத்தில் ஐ.நாவில் முக்கிய தீர்மானங்கள் வர உள்ளதை கவனத்தில் கொண்டு நிகழ்வை புறக்கணிக்க வேண்டும் என்றும் லிபாராவுக்கு அழுத்தங்கள் கொடுத்தோம்.

அதையிட்டு எனது முகப்புத்தகத்திலும் புறக்கணிப்பு செய்தேன். அழுத்தம் காரணமாக விஜய் தொலைக்காட்சி நிகழ்வை பிற்போடுவதாக லிபாரா அறிவித்தது. பின்பு மீண்டும் மே மாதம் விஜய் தொலைக்காட்சி நிகழ்வு செய்ய ஏற்பாடு செய்தது. அதையும் லிபாராவுடன் பேசி அந்த மாதம் முள்ளிவாய்க்கால் படுகொலை மாதம் அதில் நடத்தினால் போராட்டங்கள் செய்ய நேரிடும் என தெரிவித்து பின்பு லிபாரா அதையும் மீள் அறிவிப்பு இன்றி பிற்போட்டது.

இதைப்பொறுத்துக்கொள்ள முடியாத விஜய் தொலைக்காட்சி பின்பு லிபாராவின் ஆதரவை நிறுத்திவிட்டு தன்னிச்சையாக நிகழ்வை நடத்தி பல்லாயிரம் பேர் வரக்கூடிய மண்டபத்தில் சில ஆயிரம் மக்களுடன் ஏப்ரல் மாதம் நடத்தி முடித்தது. அதற்காக விளம்பரங்கள் ஏனைய ஏற்பாடுகளை செய்த லிபாரா நிறுவனம் நஷ்டத்தை சந்தித்தது.

அதன் பின்பு கண்டித்து லிபாராவுக்கு எதிராக எழுதிய கட்டுரையை அகற்றிவிட்டு நன்றி சொல்லி செய்தி வெளியிட்டேன் அது இன்றும் எனது முகப்புத்தகத்தில் பதிவாக உள்ளது. ஆக எவரென்றாலும் நான் எதிர்ப்பேன் என்பது இதற்கு சாட்சி.

இதையெல்லாம் அறியாதவர்கள் போல் லிபாரா தூண்டிவிட்டு போராட்டம் நடத்துகின்றார்கள் என்பது எம்மை கொச்சைப்படுத்துவதாகும்.

அப்படிப் பார்த்தால் பல அமைப்புக்கள் பல நிறுவனங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தியுள்ளது அதற்கும் இவர்கள் அந்த நிறுவனத்திற்கு எதிரான நிறுவனத்திற்கு ஆதரவாகத்தான் போராடினார்கள் என்று அந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்த முடியுமா?

நிகழ்ந்ததை மறைக்க புலம்பெயர் மக்களை குறை கூறவேண்டாம். லைக்காவுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும்…..இதை விஜய் முருகதாஸ் எதிர்ப்பு போராட்டம் என்று நீங்கள் நினைத்தால் நாம் பொறுப்பல்ல…