“நானும் ரவுடிதான்.. நானும் ரவுடிதான்” என்ற நாய் சேகர் காமெடி வடிவேலுவின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று.

அந்த நாய் சேகர் மாதிரி தான் இங்கு அறிவுஜீவிகளாக கொஞ்சம் பேர் உலா வந்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்களுக்கான அடிப்படை தகுதி, தமிழர்களை பாசிஸ்ட்டுகள் என்று சொல்ல வேண்டும். ஈழத்தை எதிர்க்க வேண்டும்.

இந்த அறிவாளிகளின் லேட்டஸ்ட் காமெடியில் ஒன்று `பிறகு’ என்ற சிங்கள இயக்குனரின் படத்திற்கு தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.. படத்தை வெளியிட விட மாட்டோம் என்றெல்லாம் மிரட்டினார்கள் என்று ஓவர் பில்டப்புகளை கடந்த சில நாட்களாக அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

film-chennai
அதன்படி என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் இப்படி ஒரு படம் வருவது குறித்தோ.. அதை எதிர்க்க வேண்டும் என்று எந்த அமைப்பும் அறிவித்ததாக ஒரு தக்குனுண்டு செய்தி கூட வரவில்லை.

ஆனால் டாக்குமெண்ட்ரி வியாபாரி லீனா மேடம் உள்ளிட்ட ஈழ எதிர்ப்பு கும்பல், இந்த படத்திற்கு ஒட்டுமொத்த தமிழர்களும் எதிர்ப்பு தெரிவித்து பெரும் போராட்டம் நடத்துவது போல் மாய்ந்து மாய்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

2012-ல் வெளிவந்த அந்த படம் வெளிநாடுகளில் நடந்த பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டிருக்கிறது. சமீபத்திய இனம் என்ற மொக்கப்படத்திற்கு தேவையில்லாமல் எதிர்ப்பு செய்யப்பட்டு பரவலாக அறியப்பட்டதை பார்த்ததும் `பிறகு’ பட இயக்குனருக்கும் அதுபோல் தன் படமும் பரவலாக அறியப்பட வேண்டும் என்ற ஆசை துளீர்விட்டிருக்கிறது என நினைக்கிறேன்.

உடனே, “கிளப்புங்கடா வண்டியை..” என்று சென்னைக்கு படப்பெட்டியுடன் வந்து இறங்கிவிட்டார்கள். தியேட்டரையும் வாடகைக்கு எடுத்து வெளியிட தயார் ஆனார்கள். ஆனால் இங்கு ஒரு பயலும் கண்டுக்கவில்லை.

அதுக்காக அப்படியே சும்மா விட முடியுமா.. ஒரு பரபரப்பு கிளுகிளுப்பு இல்லாமல் இருந்தால் எப்படி..

இதனால் தான் சில தினங்களாக, ஊடக யுக்தி மூலம் தன் ப்ராடக்ட்டை விற்பதில் திறமை வாய்ந்த அம்மணி அண்ட் கோ களமிறங்கி,
இப்படி ஒரு படத்தை திரையிட விடாத தமிழ் பாசிஸ்ட்டுகள் என்று அள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.. ஆனால் சீண்டுவார்தான் யாரும் இல்லை..

(ஏண்டா.. ஆளே இல்லாத ஊர்ல இப்படி டீ ஆத்திட்டு இருக்கீங்க.. :))

இப்போலாம் இப்படித்தான்.. நெகட்டிவ் பப்ளிசிட்டி மூலம் படத்தை ஓட வைக்க படக்குழுவினர் முயற்சிக்கிறார்கள். இனிமேல் தமிழ் திரையுலகினர் இந்த அம்மணியையும் அவர் கம்பெனியையும் மீடியா பப்ளிசிட்டிக்கு அணுகலாம்.. தமிழ் பாசிஸ்ட்டுகள்னு திட்டியே ஓடாத படத்தையும் ஓட வைச்சுருவாங்க..

– கார்ட்டூனிஸ்ட் பாலா
23-6-14