நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற ஆசியா, பசுபிக் பசுமைக் கட்சியின் கூட்டமைப்பு மாநாட்டில் ஈழத்தமிழர்கள் தொடர்பான இன அழிப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

கடந்த இரண்டு நாட்களாக நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற ஆசியா, பசுபிக் பசுமைக் கட்சியின் கூட்டமைப்பு மாநாட்டில் தமிழின அழிப்பு தொடர்பான தீர்மானம் ஒன்று அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் கெதரின் டெலாஹன்டியஜனால் முன்வைக்கப்பட்டுள்ளது.

 

இதனையடுத்து இடம்பெற்ற விவாதத்தின் போது அவுஸ்திரேலிய பசுமைக் கட்சியின் சார்பில் கலந்துகொண்டவர்களினால் வழுவில்லாதாக்கப்பட்டது.

 

நாடாளுமன்ற உறுப்பினரால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தில் ஈழத்தமிழர்களுக்கு கட்டமைப்பு சார் இன அழிப்பு நடைபெறுகின்றது என்பதை ஏற்றுக்கொள்வதோடு ஈழத்தமிழர்களின் ஜனநாயக ரீதியான சுயநிர்ணய உரிமைக்கு தமது ஆதரவை கொடுப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இலங்யைில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் ஈழத்தமிழர்கள் மீதான அடக்குமுறைகள் தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றதுடன், தமிழர் தாயகத்தில் இராணுவ மயமாக்கல் அதிகரித்து வருகின்றது.

 

அத்துடன் தமிழர்களின் பூர்வீக காணிகள் அபகரிக்கப்பட்டு இராணுவ கட்டுப்பாட்டுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

 

இலங்கை அரசு உள்ளக விசாரணை செய்வதாக காலத்தை இழுத்தடித்து சர்வதேச விசாரணையை மறுத்துவருகின்றது.

 

தமிழின அழிப்பில் இருந்து தப்பி புலம்பெயர் தேசங்களுக்கு அகதிகளாக செல்லும் தமிழர்களை சர்வதேச நாடுகள் மனிதாபிமான அடிப்படையில் கவனிப்பது இல்லை.

 

அவர்களை நீண்ட காலங்களாக அகதி முகாம்களில் தங்கவைப்பதும், திருப்பி இலங்கைக்கு அனுப்புவதுமே உண்மை.

 

எனவே ஈழத்தமிழர்களின் இன அழிப்புக்கு ஒரு பன்னாட்டு சுயாதீன விசாரணை தேவை, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை அறிக்கை உடனடியாக வெளியிடப்பட வேண்டும்,  ஈழத்தமிழர்கள் தங்கள் அரசியல் தலைவிதியை தாமே நிர்ணயிக்கும் வகையில் ஒரு சர்வசன வாக்கெடுப்பு தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் நடைபெற வேண்டும் உள்ளிட்ட விடயங்கள் இத்தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

 

இந்நிலையில் இத்தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவுஸ்திரேலியா பசுமைக் கட்சி சார்பாக கலந்துகொண்டவர்கள் இத்தீர்மானத்தில் சில முக்கிய சொற்பதங்களை மாற்றி கொண்டுவர முயற்சித்தனர்.

 

வழமையாக அவுஸ்திரேலியா பசுமைக் கட்சி கடந்த ஆண்டுகளாக ஈழத்தமிழர்களுக்கு மிகவும் ஆதரவாக செயற்பட்ட முறையில் இன்று இத்தீர்மானம் தொடர்பாக அவர்களுடைய நிலைப்பாடு ஏமாற்றத்துக்குரியவாறு அமைந்தது.

 

விவாதத்துக்கு பின்னர் தீர்மானத்தில் ஈழத்தமிழர்கள் எனும் சொல்லுக்கு பதிலாக; “அனைத்து இலங்கையர்களும்” என மாற்றப்பட்டுள்ளது.

 

பொது வாக்கெடுப்பு வெளியில் எடுக்கப்பட்டுள்ளது.

 

சுமந்திரனும், சுரேன் அவர்களும் இலண்டன் இரகசிய பேச்சுவார்த்தை தொடர்பாக வெளியிட்ட ஊடகக் குறிப்பில் «தமிழ் டயாஸ்பொறா (Diaspora)» எனும் பதம் தவிர்க்கப்பட்டு, «இலங்கை டயாஸ்பொறா» என்ற பதம் பயன்படுத்தப்பட்டிருந்தமையாகும்.

 

இது தற்செயலாக நடைபெற்றிருக்கக் கூடியதொன்றல்ல.

 

இது ஒரு அரசியல் பின்னணியில் நடைபெற்றது.

 

இது நாமே எமது இன அடையாளத்தை சிதைப்பதற்கு சமன்.

 

அவுஸ்திரேலியா பசுமைக் கட்சியின் நிலை தொடர்பாக வினவியபோது இலங்கையில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னர் அவுஸ்திரேலியா பசுமைக் கட்சியை உலகத் தமிழர் பேரவையின் உறுப்பு அமைப்பான அவுஸ்திரேலியா தமிழர் காங்கரஸ்சின் ஏற்பாட்டில் சுரேன் சுரேந்திரன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் சந்திப்பை நடத்தி தமது ஒன்றுபட்ட இலங்கையின் தீர்வு தொடர்பான நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவை நாடியுள்ளனர்.

 

இச்சந்திப்பின் பின்னரே அவுஸ்திரேலியா பசுமைக் கட்சியின் ஒரு பிரிவினர் இப்படியான நிலைப்பாட்டை எடுத்திருக்க முடியும் என அரசியல் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.