நிரபராதி தமிழர்களை விடுதலை செய்ய கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

0
595

May-17இவர்களிடம் வாக்குமூலம் வாங்கிய அதிகாரியான தியாகராஜன், அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தை நான் சரியாகப் பதியவில்லை என்றும் தான் தவறு செய்துவிட்டேன் என்றும் சொல்கிறார்.

· இவர்களுக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான K.T.தாமஸ் இந்த தீர்ப்பைத் தவறு என உணர்கிறேன் என்று சொல்கிறார்.

· இந்த வழக்கை தடா சட்டத்தின் படி விசாரித்த போலிஸ் அதிகாரிகளில் ஒருவரான ஜெபமணி மோகன்ராஜ் தவறு செய்தவர்கள் பெரிய பெரிய பதவிகளில் இருப்பவர்கள், ஆனால் அநியாயமாக இவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் என்று தொடர்ந்து சொல்லி வருகிறார்.

· இம்மூவருக்கும் தூக்கு தண்டணை கொடுத்தது தவறு என முன்னாள் நீதிபதிளே பல முறை சொன்ன பின்னும் 22ஆண்டுகள் தனிமை சிறைக்குப் பின்னும் இவர்களை தூக்குக் கயிற்றில் நிறுத்தி வைத்திருப்பது நியாயமா?

· இராஜீவ் காந்தி கொலையில் உண்மைக் குற்றவாளிகளான சுப்ரமணியன் சுவாமி மற்றும் சந்திராசாமி அகியோரை இதுவரை விசாரிக்கக் கூட செய்யாமல் பொய் குற்றச்சாட்டின் பேரில் மூன்று அப்பாவித் தமிழர்களை தூக்குக் கயிற்றில் நிறுத்தி வைத்திருப்பது நியாயமா?

· இராஜீவ் காந்தியை பெல்ட்பாம் வைத்துக் கொன்றார்கள். ஆனால் பெல்ட்பாம் எங்கே தயாரிக்கப்பட்டது என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்று வழக்கை விசாரித்த சி.பி.ஜ அதிகாரி இராகோத்தமன் அவர்களே சென்னபின் பெல்ட்பாம்க்கு 10 ரூபாய் பேட்டரி வாங்கிக் கொடுத்தார் என்று திரு.பேரறிவாளனை தூக்கிலேற்றுவது நியாயமா?

· தடா சட்டத்தில் இந்த வழக்கை விசாரித்தது செல்லாது என்று அறிவித்த நீதிமன்றம், அதே சட்டத்தின்படி பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் தூக்கு தண்டனை அளித்திருப்பது நியாயமா?

· இராஜீவ் காந்தி கொலையை விசாரிக்கத் தொடங்கப்பட்ட வர்மா கமிசன் பாதியில் ஏன் கலைக்கப்பட்டது? பல்நோக்கு விசாரணைக் குழு இன்னும் ஏன் விசாரணையை முடிக்கவில்லை? சுப்ரமணியன் சுவாமி மற்றும் சந்திராசாமியை விசாரிக்க வேண்டும் என்று சொன்ன ஜெயின் கமிசன் அறிக்கை ஏன் மூடிமறைக்கப்பட்டது? இப்படி விடைதெரியா நியாயமான கேள்விகள் ஆயிரமிருக்க இந்த மூன்று அப்பாவித் தமிழர்களை தூக்கு என்ற பெயரில் கொலை செய்வது எந்த வகையில் தமிழர்களே நியாயம்?

· தூக்குத் தண்டனை என்பது சட்டத்தின் பெயரால் நடக்கும் படுகொலை என்கிறார் முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் திரு.வி.ஆர். கிருஷ்ணய்யர். செய்த குற்றத்திற்க்கு வழங்கும் தூக்குத் தண்டணையே படுகொலையெனில் செய்யாத குற்றத்திற்கு வழங்கப்படும் தூக்குத் தண்டணையை என்னவென்று சொல்லுவது?

இப்படி பல்வேறு குழப்பங்களும் குளறுபடிகளும் உள்ள இந்த வழக்கை மேல்முறையீடு செய்யும் வசதி கூட இந்த மூவருக்கும் வழங்கப்படவில்லை. இராஜீவ் காந்தி சாவு என்று சொல்லி சொல்லியே இந்த காங்கிரஸ் அரசு ஈழத்தமிழர்கள் ஒரு லட்சத்தி நாற்பதினாயிரம் பேரை பழிவாங்கியது. அது மட்டுமில்லாமல் கொலைகாரன் இராசபக்சேவிற்க்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கிறது. கொலைகாரனுக்கு வரவேற்பு நிரபராதித் தமிழர்களுக்கு 22 ஆண்டுகளுக்குப் பிறகு தூக்கு தண்டணை என்பது என்ன வகை நியாயம்?

உண்மைக் குற்றவாளிகளை விடுத்து நிரபராதித் தமிழர்களை தூக்கில் ஏற்றுவதை தமிழர்கள் நாம் பார்க்க வேண்டுமா? இலங்கையில் தமிழர்கள் சாகும்போது அமைதி காத்தோம் ஒரு லட்சம் தமிழர்களை இழந்தோம். மீண்டும் அமைதிகாத்து இந்த மூன்று சகோதரர்களையும் இழக்க வேண்டுமா?

நீதிக்காகப் போராடாத இனம் ஒரு மனித இனமா…?

போராடுவோம் தமிழர்களே, இந்த நிரபராதித் தமிழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் இதே போல பொய்க் குற்றசாட்டின் அடிப்படையில் தூக்கை எதிர்நோக்கி கர்நாடக சிறையிலிருக்கும் ஞானபிரகாசம், சைமன், பிலேவேந்திரன் மற்றும் மீசை மாதையன் போன்றோரின் விடுதலைக்கும் போராடுவோம்.

வாருங்கள் தமிழர்களாய் ஒன்று கூடுவோம்

இடம்: வள்ளுவர் கோட்டம்,சென்னை.
நாள்:15.12.2013 ஞாயிறு காலை 10மணிக்கு

– மே 17 இயக்கம்
(9600781111, contact.may17@gmail.com)