அண்மையில் ததேமமு புலிகளுக்கு எதிரான போர்க்குற்றவாளியான நிலாந்தனை மேடையேற்றியதற்கு நாம் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருவதுடன் மக்களிடம் ததேமமு ஐ புறக்கணிக்கும் அழைப்பையும் கோரிவருகிறோம்.

சம்பந்தப்பட்ட ததேமமு எமக்கு எழுத்து மூலம் மறுப்பு வெளியிடாமல் திரைமறைவு சதிகளை செய்து வருகிறது. நாம் எதிர்பார்ப்பதெல்லாம் அவர்கள் செய்கைக்கான எழுத்து மூல நியாயத்தையே..!

“நிலாந்தன் ஒரு தமிழ்த்தேசியவாதி அல்ல. புலிகளுக்கு எதிரான ஒரு போர்க்குற்றசாட்சியும் போராட்டத்தை நீர்த்துபோகச் செய்ய முயன்றுவருபவரும்” என்ற எமது வாதத்திற்கான ஆதாரங்களை நாம் பகிரங்கமாகச் சமர்ப்பிக்க தயராக இருந்தும் அதை கோராமல் திரைமறைவு சதிகளில் ஒரு ஜனநாயக அமைப்பு களமிறங்கியிருப்பது வேதனைக்குரியது.

இனி ததேமமு யுடன் பேச எமக்கு ஒன்றுமில்லை. நிலாந்தன் குறித்த இரகசிய ஆவணங்கள் எம்மிடம் இருந்தும் அதை பகிரங்கபடுத்தாமல் மிக எளிமையாக நிலாந்தன் எப்படி நுட்பமாக தமிழ்த்தேசியத்தையும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தையும் சிதைக்கிறார் என்பதை எமது கண்ணோட்டத்தில் இல்லாமல் மற்றவர்களின் கண்ணோட்டத்தில் தொடர்ந்து இங்கு பகிரங்கப்படுத்த விரும்புகிறோம்.

இணையத்தில் தேடினால் ஆயிரக்கணக்கில் கிடைக்கும் ஆதாரங்களைக்கூட வாசிக்க தலைப்படாமல் இன்று ததேமமு முட்டாள்தனமாக உளறுவதனால் நாம் இதை செய்ய வேண்டிய இக்கட்டில் உள்ளோம்.

கீழே இணைக்கப்பட்டுள்ள கட்டுரை ஆய்வாளர் ஜமுனா ராஜேந்திரனால் 10 மாதங்களுக்கு முன்பு நிலாந்தனை விளித்து எழுதப்பட்டது. பல ஆய்வுகளில் நிலாந்தனை ஜமுனா ராஜேந்திரன் அம்பலப்படுத்தியுள்ளார். இந்த சிறிய கட்டுரையில் மிக எளிமையாக நிலாந்தனின் தமிழர் விரோத அரசியலை அம்பலப்படுத்தியிருக்கிறார். தமிழ்த்தேசியம் பேசியபடியே நுட்பமாக “புலிநீக்கம்” செய்தல், சிறீலங்காவிற்கு எதிரான இனஅழிப்பு விசாரணைகளை தடுத்தல், இனஅழிப்பு ஆவணங்களை கேலிக்குள்ளாக்குதல் என்று நுட்பமாக வாசித்தாலே நிலாந்தனின் தமிழர் விரோத அரசியலை அறியமுடியும்.

மேலோட்டமான வாசிப்பில் இந்த நுண்ணரசியலை புரிய முடியாது. அதுதான் நிலாந்தனின் சாமர்த்தியம்.

ஆனால் எம்மை ஏமாற்ற முடியாது. ஜமுனா ராஜேந்திரன் இங்கு நுட்பமாக நிலாந்தனை அம்பலப்படுத்துகிறார். வாசியுங்கள். தெளிவடையுங்கள்.

“விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி” என்றார் தேசியத்தலைவர்.

ஜமுனா ராஜேந்திரனின் இந்த கட்டுரை எமக்கு நிலாந்தனின் எழுத்துக்கள் எப்படி அணுகப்பட வேண்டும் என்ற ஒரு எச்சரிக்கையை செய்வதை வாசிப்பின் இறுதியில் நீங்கள் உணரக்கூடும். ததேமமு க்கு மட்டுமல்ல தமிழ் தேசிய சக்திகளிடமும் நாம் கோருவது இதுதான்.

ஈழம் ஈ நியூஸ்.

(இந்த பதிவை ஜமுனா ராஜேந்திரனின் தளத்தில் இருந்து நன்றியுடன் எடுத்து மீள பதிவேற்றுகிறோம்.)

சே குவேராவும் யாசர் அரபாத்தும் காட்டிய ஹாலிவுட் சினிமா.

பிப்ரவரி 18 ஆம் திகதி இரண்டு கட்டுரைகள் வாசிக்க முடிந்தது. கட்டுரைகளின் காலப்பொருத்தம் உண்மையில் ஆச்சர்யமாக இருந்தது. இலண்டன் த இன்டிபென்டன்ட் பத்திரிக்கையில் நெஞ்சை அறுக்கும் வலி கொண்டதாக, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய புதல்வன் சிறுவன் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட முறை குறித்த கோரமான படம் வெளியாகி இருந்தது. புகைப்படம் தொடர்பாக ஆவணப்பட இயக்குனர் ஹாலும் மக்ரே ஒரு கட்டுரையும் எழுதி இருந்தார். ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைத் திரைப்பட விழா நிகழ்வில் திரையிடப்படும் ஹாலும் மக்ரேவின் நோ பயர் சோன் ஆவணப்படத்தில் இடம்பெறும் புகைப்படங்களே த இன்டிபென்டட்டில் வெளியாகியிருந்தது.
OLYMPUS DIGITAL CAMERA
மகிந்த அரசின் ‘கருணை அரசியலுக்கு’ சிறுவன் பாலச்சந்திரனின் படுகொலை நடத்தப்பட்ட முறை ஒரு சான்று. இதே 18 ஆம் திகதி குளோபல் தமிழ் நியூஸ் தளத்தில் நிலாந்தனின் படம் பார் பாடம் படி கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. நிலாந்தனுக்;கு ஹாலும் மக்ரேவின் ஆவணப்படமும் கூட ஹாலிவுட் சினிமாவின் அங்கமாகத்தான் தோன்றியிருக்கும் என நினைக்கிறேன்.

இலங்கை தொடர்பான ஜெனிவா மனித உரிமை நடவடிக்கைகளை ஹாலிவுட் சினிமா என்கிறார் நிலாந்தன். நிலாந்தனின் மேதைமை கொண்ட புரிதல் அது; இருக்கட்டும். முன்போலவே வரவிருக்கும் ஜெனிவா நடவடிக்கையை ஹாலிவுட் படம் போல் பார் என்கிறார் நிலாந்தன். ஜெனிவா நடவடிக்கைகளில் அவர் படித்த பாடம் என்ன என்பது குறித்தோ அல்லது பிறர் படிக்க வேண்;டிய பாடம் என்ன என்பது குறித்தோ ‘நடைமுறையில்’ எதுவும் நிலாந்தன்; கட்டுரையில் இல்லை.

மகிந்த சிங்கள மொழிச்சினிமா காட்டுவதைப் போல இருக்கிறது நிலாந்தனின் கட்டுரை.

மேற்கத்திய நாடுகள் மனித உரிமையின் பேரில் தன்னை மின்சார நாற்காலியில் உட்கார வைக்க முயற்சி செய்கின்றன என ஒரு முறை அழுதார் மகிந்த. ஜெனிவா மனித உரிமைத் தீர்மானங்கள் இலங்கைக்குத் தவிர்க்க முடியாதபடி ஆபத்தான பொறிமுறை என்றார் பிரான்சின் இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக. ஐநா மனித உரிமைத் தீர்மானத்துக்கான போராட்டம் என்பதும் ஐநா அங்கீகாரம் பெறுவது என்பதும் அல்ஜீரிய விடுதலை இயக்கத்தவர் முதல் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தவர் வரையிலும் ஒரு போராட்ட முறையாக உள்ளது. பிரான்சஸ் ஹாரிசன் முதல் மே பதினேழு இயக்கத்தவர் வரை ஐநா சபையைக் குற்றம் சாட்டுவது, அதன் அலுவலகங்கள் முன்பாகப் போராட்டங்களை முன்னெடுப்பது என்பது ஐநா சபையின் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து அதனை நேர்பட திரும்பச் செய்வதற்குத்தான்.

ஐநா சபையின் அலகொன்றில் அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளின் நிராகரிப்பை மீறித்தான் பாலஸ்தீனம் இடைக்கால அரசுக்கான அங்கீகாரத்தைப் பெருவாரியான வாக்குகள் மூலம் பெற்றிருக்கிறது. இது மிக மிகச் சமீபத்திய நிகழ்வு.

சே குவேரா ஐநாவில் உரை நிகழ்த்தினார். அரபாத் நிகழ்த்தினார். நேபாளத்தின் பிரசன்டா நிகழ்த்தினார். நிலாந்தனின் பாஷையில் இவர்களெல்லாம் ஹாலிவுட் கதாநாயகர்கள். அல்ஜீரிய-பாலஸ்தீன-நேபாள மக்கள் அனைவரும் ஹாலிவுட் நடிகர்கள்.

மகிந்த எந்தவித விசாரணைக்கும் உட்பட முடியாது என்கிறார். நிலாந்தன் ஜெனிவா மனித உரிமை நடவடிக்கைகளே ஹாலிவுட் சினிமா போல மாயை என்கிறார். சேனல் நான்கின் ஆவணப்பட இயக்குனர் ஹாலும் மக்ரே பாலச்சந்திரன் கொல்லப்பட்ட முறை குறித்துத் தேடி அதனை ஆவணப்படுத்துகிறார். ஜெனிவா நடவடிக்கைகள் இருக்கட்டும்; மகிந்தவின் பேச்சுக்கள் இருக்கட்டும்; ஹாலும் மக்ரேவின் விசாரணைகள் நாசமாகப் போகட்டும்; தமிழராக நீங்கள் படித்த பாடம் என்ன நிலாந்தன்? நீங்கள் படித்த அந்தப் பாடத்திலிருந்து தமிழராக நீங்கள் முன்வைக்கும் அரசியல் அல்லது தேர்ந்து கொண்ட அரசியல் பாதை என்ன நிலாந்தன்?