உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை

”இராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேர் குறித்த வழக்கில் ஏப்ரல் 25-ஆம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் அவர்கள் கூறியிருப்பது நீதிமன்ற மரபுகளுக்கு உகந்தது அல்ல . அரசியல் ரீதியான விளைவுகள் இதனால் ஏற்படும்” என தி. மு. க. தலைவர் மு. கருணாநிதி கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியையே மிரட்டும் வகையில் கருணாநிதி கூறியிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

”7 பேரையும் விடுதலை செய்ய வேண்டுமென கருணாநிதி முன்னர் பேசியதெல்லாம் ஒப்புக்காகவே என்பது இதன் மூலம் தெரிகிறது. 7 பேரின் வழக்கில் தீர்ப்பு வெளி வருவதை விட அவருக்கு தனது கட்சியின் நலன் பெரிது என கருதுகிறார். இவருடைய தேர்தல் ஆதாயத்திற்காக அந்தத் தீர்ப்பை ஒத்தி வைக்க வேண்டுமென நிர்பந்தம் செய்வது நீதித் துறையை அவமதிக்கும் போக்காகும்.