Theepaஇலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம் இணைந்து வழங்கும் 2014ஆம் ஆண்டிற்கான நெருக்கடிச் சூழலில் இயங்கியமைக்கான சிறந்த ஊடகவியலாளர் விருது ஈழக் கவிஞரும் எழுத்தாளரருமான தீபச்செல்வனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

நிலத்திற்காய் போராடும் தென்னைமரவாடி மக்கள், அபகரிக்கப்படும் வடக்கு கிழக்கு எல்லைக் கிராமங்கள், எமது நிலம் எமக்கு வேண்டும், சத்தமின்றி அபகரிக்கப்படும் ஒதியமலை முதலிய தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் இன நில ஒடுக்குமுறை சார்ந்து எழுதப்பட்ட கட்டுரைககள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன

 

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் விருதுகள் மும்மொழி ஊடகத்திற்கும் வழங்கப்பட்டபோதும் நெருக்கடி சூழலில் இயங்கியமைக்கான 2014 ஆம் ஆண்டின் சிறந்த ஊடகவியலாளர் விருதை தமிழ் மொழி ஊடகவியலாளர் தீபச்செல்வன் மாத்திரம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

ஏற்கனவே இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் 2010 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் நெருக்கடிச் சூழலில் செய்தி தேடலுக்கான சிறந்த ஊடகவிலாயளருக்கான பேராசிரியர் கைலாசபதி விருதையும் 2010ஆம் ஆண்டில் சிறந்த புகைப்பட ஊடவியலாளர் விருதையும் பெற்றுள்ளார்.

 

தீபச்செல்வனுக்கு ஈழம்ஈநியூஸ் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.