பக்கச்சார்பாற்ற சர்வதேச விசாரணையை நடாத்துமாறு வேண்டுகிறேன் : சண்முகலிங்கம் சஜீவன்

0
688

1948 இலிருந்து எமது தேசிய இனப்பிரச்சினையின் வரலாறும் ஐ.நாவின் வரலாறுக்கு சமாந்தரமானது. ஒரு தீவில் இரண்டு தேசங்களுக்கிடையிலான தேசியச்சிக்கல் இது. பிரித்தானிய காலனித்துவத்தின் விளைவாக கொழும்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கட்டமைப்பின் ஊடாக ஓர் இன அழிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. பிரித்தானியாவின் பூகோளவியல் நலன்கள் இதற்கு காரணமாயின. அரசாட்சி பெற்ற ஒரு தேசிய இனம் இன்னொரு தேசிய இனத்தை ஒரு திட்டமிட்ட செயற்பாட்டினூடாகவும் சித்தாந்தம் ஒன்றை அடிப்படையாகவும் கொண்டே போருக்கு முன்னரும், போரின் போதும் போரின் பின்னாலும் அழித்துவந்திருக்கிறது என்பதற்கு தெளிவான அறிகுறிகள் உண்டு.

ஆனால், ஐ.நாவின் மனித உரிமை முறைமையோ எமது சிக்கலை வெறும் சிறுபான்மைச் சி;க்கலாக மட்டுமே நோக்கியது. தற்போது, அது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, இந்த அவைக்கு முன்னதாகவே, ஏதோசமயங்களுக்கிடையான சிறுபான்பைப் பிரச்சனையாக சித்தரிக்கப்படும் நிலை உருவாகியிருக்கிறது. தேசங்களுக்கிடையிலான சிக்கலாக இதை உலகம் பார்க்க மறுத்த நிலையில் நாம் கொன்றுகுவிக்கப்பட்டோம். கிழக்கில் எமது மண் சார்ந்த பரம்புகையே பறிபோயிற்று. போரின் பின்னால், இப்போது, எமது மண் மீண்டும் ஆக்கிரமிக்கப்படுகிறது. பாலஸ்தீனத்தின் காஸாவுக்கு ஒப்பான
வடிவில் வடக்கிலும் கிழக்கிலும் இது நடக்கிறது.

Shageevan_01_CI
எம்மீதான இன அழிப்பை இந்த அவை பார்க்க மறுக்கும் தருவாயில், எமது மண் பறிபோகிறது.கட்டமைப்புரீதியான இன அழிப்பு எம்மீது வடக்கிலும் கிழக்கிலும் கட்டவிழ்;த்து விடப்பட்டிருக்கிறது.மூலச்சிக்கலை நோக்காது, இந்த அவை மீண்டும் ஒரு தீர்மானத்தை விவாதிக்கும் நிலையானது எமது தமிழ்;த் தேசத்தின் மீது தொடர்ந்தும் நடாத்தப்படும் குற்றங்களை தடுப்பதற்கு வழிவகுக்காது.

எனவே, உலக சமுதாயத்திடம் இன அழிப்பில் இருந்து ஒரு தேசத்தை பாதுகாக்கும் வகையில், அதுவும் குறிப்பாக வல்லாதிக்க நலன்களை மையப்படுத்திய பூகோள நலன் சர்hந்த பார்வையை மையப்படுத்திய சர்வதேச அநீதியில் இருந்தும் விடுவித்து பாதுகாக்க வல்ல ஒரு பக்கச்சார்பாற்ற சர்வதேச விசாரணையை நடாத்துமாறு வேண்டுகிறேன்.

(வலி.வடக்கு மீள்குடியேற்ற குழு தலைவர் சண்முகலிங்கம் சஜீவன் அவர்கள் 2ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வின்போது ஆற்றிய உரையின் முழுமையான வடிவம்).