“ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்கள் யார்?” ராஜீவ் காந்தியின் நினைவு நாளில். டெல்லியில் புதிய அரசு பதவியேற்க உள்ள நிலையில் இந்தக் கேள்வியை நாம் மீளவும் கேட்க வேண்டியுள்ளது.

எதேச்சையாக இந்த படம் கண்ணில் தெரிகிறது.

இந்திய கொள்கை வகுப்பாளர்களே ராஜீவை கொலை செய்தார்கள். இந்த படம் சொல்லும் அப்பட்டமான உண்மை இதுதான்.

இந்திய கொள்கை வகுப்பாளர்கள் சிங்களத்தின் இந்த முதல் அடி விழவே சுதாரித்திருக்க வேணும். ஆனால் கேட்டால்தானே.. விதி வலியது.

இடையில் புலிகள் அடித்தார்கள்.. பின்பு சுப்ரமணியசாமி சந்திரசாமி மாதிரி ஆட்களை வைத்து “தாணு” மூலமாக அமெரிக்கா அடித்ததா? பாகிஸ்தான் அடித்ததா? சீனா அடித்ததா? உலக மாபியா கும்பல் அடித்ததா? யாருக்கும் தெரியவில்லை.

rajiv-23
ராஜீவ் கொலையில் புலிகள் தொடர்பு என்பதே கேபி மூலமாகத்தான் ஆரம்பமாகிறது. ஆனால் இன்று அமெரிக்கா விலைக்கு வாங்கி சிங்களத்திற்கு விற்கப்பட்ட ஆளாக கேபி இருக்கிறார்.

இதனூடாக கிட்டத்தட்ட உலக சூழ்ச்சி ஒன்றினூடாக ராஜீவ் கொல்லப்படுவதற்கு அப்போதைய இந்திய கொள்கை வகுப்பாளர்கள் களம் அமைத்து கொடுத்தது தற்போது புலனாகிறது.

தற்போது “மே 18 ” என்ற ஒரு புதுக்கணக்கை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் தொடக்கி இருக்கினம். இதைப் பாவித்து எவன் இந்தியாவை எதால வந்து அடித்து போட்டு தமிழரில பழி போடப்போறானோ தெரியாது..

தூர நோக்கற்ற பழி வாங்கும் கொள்கை வகுப்பாக்கங்கள் எப்போதும் ஆபத்திலேயே போய் முடியும் என்பதை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் எப்போது உணரப்போகிறார்களோ தெரியாது.

தற்போது புலிகளின் அழிவை அடுத்து அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் என்று பகை நாடுகள் வரிசையாக இலங்கைக்குள் நுழைந்துகொண்டிருக்கின்றன.

சந்தி சிரிக்கிறது இந்திய கொள்கை வகுப்பாக்கம்..

இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. பதவியேற்கும் புதிய அரசு தமது சொந்த நாட்டு மக்களான தமிழக மக்களுக்கும் ஈழ மக்களுக்கும் உள்ள பண்பாட்டு அரசியல் உறவை கணக்கில் கொண்டு தெளிவான வெளியுறவுக்கொள்கைகளை வகுக்கலாம்..

இந்தியாவிற்கான பிராந்திய பாதுகாப்பு அரண் இதன் வழியேதான் உருவாக முடியும்.. சிங்களத்தை நம்புவதனூடாக அல்ல..

தமது சொந்த நாட்டு மக்களான பல கோடி தமிழர்களையும் அவர்களை மையப்படுத்திய தமிழக அரசையும் நம்பாமல் ஒரு அந்திய நாட்டை அதுவும் பகை முரண் நாடுகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் ஒரு நாட்டை நம்புவது கொள்கை வகுப்பாக்கம் அல்ல கோமாளித்தனம்..

இன்னொரு சுய பேரழிவுக்கு அடித்தளம் இடும் வேலை இது.

எனவே ராஜீவின் மரணம் என்பது தவறான கொள்கை வகுப்பாக்கத்தின் ஒரு பக்க விளைவு.. இந்தியாவிற்கு எதிரான சக்திகளுக்கு களம் அமைத்து கொடுத்த மோசமான ஒரு வெளியுறவுக்கொள்கையின் பிரதிபலன் அது..

இதற்கு தமிழர்களோ, புலிகளோ எந்தவிதத்திலும் பொறுப்பாளிகளல்ல..

எனவே பதவியேற்கும் புதிய அரசு இதை புரிந்து கொள்வதனூடாகவே தீர்க்கமான வெளியுறவுக்கொள்கைகளை வகுக்க முடியும்.

ஈழம்ஈநியூஸ்.