போரினாலும், இயற்கை அநர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்ட, பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல், அதன்பொருட்டு அவர்களுக்கான சுயதொழில் வாய்ப்புக்களை வழங்குதல் எனும் போர்வையில், கிண்ணியா பிரதேச சபையின், தமிழ் அரசுக் கட்சி சார்பாக போட்டியிட்டு தெரிவான அங்கத்தவர் திரு சிவசேகரம் பஞ்சலிங்கம் என்பவர் இந்த வருடம் தைமாதம் அழைத்துவந்த, NTP Development (Pvt) Ltd. எனும் ஒரு போலி அமைப்பு மூலம் முதற்கட்ட நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட குடும்ப பெண்கள் தலா 3000 ரூபாய் அங்கத்துவப் பணம் செலுத்தவேண்டும் என்று கூறி பணம் சேகரித்துள்ளார்கள்.

ஆனால் இதுநாள்வரைக்கும், குறித்த சுயதொழில் முயற்சி தொடர்பான அடுத்தகட்ட வேலைத்திட்டங்களோ அன்றி, அதுபற்றிய எந்தவித தகவல்களோ குறித்த பயனாளிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை.

குறித்த பாதிக்கப்பட்ட பெண்கள், இதுபற்றி, கிண்ணியா பிரதேச சபையின் தமிழ் அரசுக் கட்சி அங்கத்தவர் திருவாளர் சிவசேகரம் பஞ்சலிங்கம் என்பவரிடம் விசாரித்தபோது, அது ஒரு போலி அமைப்பு என்றும், அவர்கள் பணம் முழுவதையும் சுருட்டிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார்கள் என்றும், தன்னால் மேற்கொண்டு எதுவும் செய்யமுடியவில்லை என்றும் கையைவிரித்துவிட்டதாக, பாதிக்கப்பட்ட பெண்கள் அறியத்தருகின்றார்கள்.

கிண்ணியா பிரதேச சபையின் தமிழ் அரசுக் கட்சி அங்கத்தவர் திருவாளர் சிவசேகரம் பஞ்சலிங்கம் என்பவர் கையொப்பமிட்ட பற்றுச்சீட்டுகள் இதில் இணைக்கப்பட்டுள்ளது இவர் களவாடியது கடந்தகால யுத்தத்தில் கணவனை வாழ்வாதரத்தை இளந்து நிர்க்கதியானவர்களிடம். இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலமையும் இக்கட்சியின் தம்பலகாமம் பிரதேச சபை உறுப்பினர்களும் என்ன பதில் தரப்போன்றார்கள்.

கைக்கூலிகளே முடிந்தால் தீர்வைக் கொடுங்கள். இனியாவது இவர்களிடமிருந்து எம் மக்களைக் காப்போம்

பொறுப்புவாய்ந்தவர்களே, கனவான்களே, நீங்கள் எங்கள் மக்களுக்கு புடுங்கியவைகள் எல்லாம் போதும், உங்களால் பாதிக்கப்பட்ட இந்த அப்பாவி அபலைகளுக்கு குறைந்தது, அவர்களின் சொந்தவியர்வை சிந்தி உழைத்த அந்த 3000 ரூபாய் பணத்தையாவது மீட்டு தாருங்கள் என்று மன்றாடிக் கேட்டுக்கொள்கிறோம் ஐயா! அவர்கள் பாவம் ஐயா! அவர்களுக்கு இரக்கம் காட்டும் ஐயா!

இதற்கான உரிய தீர்வையும், பதிலையும் பொறுப்புவாய்ந்தவர்களிடமிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பெற்றுக்கொடுக்கும்வண்ணம் சமூகநல ஆர்வலர்கள் இந்த பதிவை பகிர்ந்து, வலியுறுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here