சிறீலங்கா பயங்கரவாத விசாரணைப் திணைக்களத்தால் குற்றச்சாட்டுக்கள் எதுவும் நிரூபிக்கப்படாமல் 362 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பாலேந்திரன் ஜெயகுமாரி அவர்கள் சற்று முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவரது பிணைக்காக இரண்டு இலட்சம் ரூபா செலுத்தப்பட்டதோடு அவரது கடவுச்சீட்டு இன்னமும் அவரிடம் கையளிக்கப்படவில்லை. அத்துடன், ஒவ்வொரு மாதமும் அருகிலுள்ள காவல் நிலையத்தில் கையொப்பமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார். இவருடன் கைது செய்யப்பட்டிருந்த 64 வயது மூதாட்டியும் கர்ப்பிணி பெண்ணும் உட்பட ஒன்பது பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

missing-09

 

பொறுப்புக்கூறும் தன்மை தொடர்பாக அழுத்தங்களை கொடுப்போம் என பிரித்தானிய அரசியல் தலைவர்கள் கூறிவற்த நிலையிலும் இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் இலங்கைத் தீவுக்கு வருகை தரவுள்ள நிலையிலுமே இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 

அதேவேளை, இவர்கள் கைது செய்யப்பட்ட காலப்பகுதியில் கைது செய்யப்பட்ட பலர் இன்னும் விடுவிக்கப்படவில்லை.

 

இவர்களின் விடுதலைக்காக உள்நாட்டில் குறிப்பிடத்தக்க சிலர் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. ஒன்பது பேரினதும் விடுதலைக்காக ஆதரவு வழங்கியவர்களுக்கு நன்றியைத் தெரிவிக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனையவர்களின் விடுதலைக்காக தொடர்ந்து போராடப் போவதாக அறிவித்துள்ளனர்.