பிரதமர் மோடியிடம் ஜெயலிதாவின் வழக்கை மீள் பரிசோதனை செய்ய வேண்டும் என்று ஒபாமவுக்கான தமிழர்கள் கேட்டு உள்ளார்கள்

ஜெயலலிதா இந்தியாவில் சிறந்த மற்றும் மிகவும் பிரபலமான அரசியல்வாதி. அவர்கள் ஈழத்தமிழர்களின் துன்பத்திற்கு மிகவும் அனுதாபமும் ஆதரவு கொண்டவர். இவர் ஈழத்தமிழர்களின் தலைவர் மட்டும்மல்ல நெருங்கிய சிறந்த நண்பரரும் என ஒபமவுக்கான தமிழர்கள் மோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்புட்டுருந்தார்கள் .

modi-jeya
ஜெயலலிதாவின் திறமையையும், அவரின் செல்வாக்கையும் தாங்க முடியாத அவருடைய எதிரிகள் கைகள் இந்த வழக்கில் இருந்ததால்தான், இவ் வழக்கின் முடிபு மிக மோசமாய் இருந்துள்ளது .

ஒபாமவுக்கான தமிழர்கள் கடிதத்தில் மூன்று காரணங்களை சுட்டிக்காட்டினார்கள்

1. கர்நாடகாவுக்கும் .ஜெயலலிதாக்கும் காவேரி தண்ணியினால் பல காலமாக சர்ச்சைகள் இருந்து வருகின்றது. இந்த மாநிலம் ஜெயலலிதாவை ஒரு எதிரி போல் தான் எண்ணுகிறது. இதனால் இந்த விரோதப்போக்கு கர்நாடகா மாநிலத்தில் ஒரு நியாயமான விசாரணைக்கு சாத்தியமற்ற இடம்.

2. ஜெயலலிதா பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பேசிவருகிறார். முக்கியமாக ஈழ தமிழர்கள் மற்றும் தமிழ் நாட்டு மீனவர்கள் விடயத்தில் உறுதியாகவும், மக்கள் பலத்துடன் காங்கிரஸ் க்கு எதிராக பேசுவது காங்கிரஸ் அரசுக்கு பல தடவை கோபத்தை உண்டாக்கியுள்ளது.தேசிய அரசாங்கம் மற்றும் கர்நாடக மாநிலம் காங்கிரஸ் கட்டுப்பாட்டில் இருந்ததால் அநேகமாக ஒரு முறையான தீர்ப்பை அடைய கூட கடினமாக இருந்திருக்கலாம்.

3 கருணாநிதி, திமுக தலைவர், கிட்டத்தட்ட ஆறு தசாப்தங்களாக தமிழ்நாட்டில் அரசியல் பிரமுகர். இவர் ஒரு செயலில் மற்றுமல்ல மிகவும் இலட்சிய அரசியல் பிரமுகர். ஜெயலலிதா தனது போட்டியாளரான பல ஆண்டுகளாக இருப்பதால் தனிப்பட்ட பழிக்குப்பழி வாங்க விரும்பியிருக்கலாம். . அவர் ஒருவேளை ஜெயலலிதா மீது வழக்கு கொண்டுவந்தபோது, அவ் வழக்கில் வேண்டுமென்றே பல தவறான தகவல்கள் மற்றும் ஆதாரங்களை உள் நுழைத்திருக்கலாம். இதுவும் இநத வழக்கை மீள் செய்வதற்கு நல்ல கரணம்.

தங்கள் மோடியின் கடிதத்தின் இறுதியில், ஒபமவுக்கான தமிழர்கள் “நாங்கள் உங்கள் அரசாங்கம் ஜெயலலிதாவிக்கு எதிராக கொண்ட வழக்கை மறு ஆய்வு மற்றும் இந்த வழக்கை அறத்தின்படியும் மற்றும் சட்டபூர்வமாக நடத்தப்படவும் உறுதி செய்ய, அதன் நீதி துறை பயன்படுத்த வேண்டும் என்றும்” கேட்டுள்ளார்கள்.