tn-praba-birtதேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் மற்றும் உலகம் எங்கும் உள்ள நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் பல நிகழ்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிகழ்வுகள் மற்றும் மக்களின் உணர்வுகள் தொடர்பில் ஈழம்ஈநியூஸ் தனது முகநூலில் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்ட மற்றும் வாசகர்களிடம் இருந்து உள்வாங்கிய கருத்துக்களை இங்கு தொகுத்து வழங்குகின்றது.

தமிழகத்தின் ஏற்பட்டுள்ள மாற்றம் எமது விடுதலைப்போருக்கு மிகப்பெரும் உந்துசக்தியாக மாற்றம் பெற்று வருவதை இதனூடாக நாம் காணமுடிகின்றது.

தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் தலைவர் பிரபாகரன் மயம்!!

உள்ளம் பூரிப்படைகின்றது!
மெய் சிலிர்க்கின்றது!!
இனம் புரியாத பெரும் மகிழ்ச்சி!!!

தமிழ்நாட்டில் எந்தத் தலைவனுக்கும் இல்லாத மதிப்பும், மரியாதையும், பிறந்த நாள் கொண்டாட்டங்களும் எம் தேசியத் தலைவனுக்கே கிடைத்துள்ளது..!

இந்த பிறந்தநாள் கொண்டாட்டங்களைப் பார்க்கும் போது, உலகத் தமிழினத்தின் ஒரே தலைவன் பிரபாகரன்தான் என்பதை ஆணித்தரமாகவும், உறுதியாகவும் நிரூபித்துள்ளது!!

தமிழக இளைஞர்களின் ஒவ்வொரு இதயங்களிலும் “பிரபாகரன்” என்ற பெயர் ஒன்று இருந்தாலே போதும் அவர்கள் வீறு கொண்டு எழுவார்கள்.!!

தமிழ்நாட்டில் “பிரபாகரன்” என்ற பெயர்தான் சாதியங்களையும், மதங்களையும் தொலைத்து புதியதொரு சகாப்தத்தையும், புதியதொரு தேசத்தையும் உருவாக்கப் போகிறது!!!

பிரபாகரன் பெயர் ஒரு சக்தி!
பிரபாகரன் பெயர் ஒரு தவம்!!
பிரபாகரன் பெயர் ஒரு வரம்!!!
பிரபாகரன் பெயர் ஒரு ஈரம்!!!!

இனிமேல் எந்த மாற்றான் தலைவனாலும் தடுக்க முடியாது!!

நீங்கள் நேரில் செய்யாததை, “பிரபாகரன்” என்ற ஒற்றைச் சொல்லே தமிழகத்தில் புதிய சரித்திரத்தினைப் படைக்கப் போகின்றது!!

0000000000000000

தமிழீழ தேசிய் தலைவர் அவர்களின் 59 ஆவது பிறந்த நாளினை தமிழர்கள் அனைவரும் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள்.இன்னிலையில் இன்று சென்னை பல்கலைக்கழகத்தின் விடுதியில் மாணவர்கள் கேக் வெட்டி மாணவர்களுடன் பரிமாறி கொண்டாடியுள்ளார்கள்.

புலம்பெயர் தமிழர்களும், தமிழகத்திலும் பரவலாக தேசியத் தலைவர் அவர்களின் பிறந்த நாள் எழுச்சி கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் 26.11.2013 இன்று 12 மணிக்கு தேசியத் தலைவர் அவர்களுக்கு வாழ்த்துக்கூறி கொண்டாடினர். அவரின் வயதுக்கு அளவான எண்ணிக்கையில் தின் பண்டங்களும் நிகழ்வில் பகிரப்பட்டன.
tn-praba-birth
தமிழ்நாட்டில் மாணவர்கள் தங்கள் தங்கியுள்ள இடங்களில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுளார்கள்

சென்னை ராயப்பேட்டையில் தலைவர் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம்

சென்னையின் ராயப்பேட்டையில் தமிழ் இளைஞர்கள் தலைவர் அவர்களின் பிறந்தநாளினை கொண்டாடியுள்ளார்கள்.பெருந்திரளான இளைஞர்கள் ஒன்று திரண்டு தலைவர் அவர்களின் 59 ஆவது பிறந்த நாள்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

தலைவன் பேர் முழங்க, புலிகள் புகழ்பாட, பெரும் வெடி சத்தத்துடன்’ , 500 இளைஞர்களின் கைதட்டலில் அதிர்ந்தது ராயப்பேட்டை.

0000000

ஒரு
இனத்தின்
விடுதலைக்கான
“போர்க்களம்” பிறந்த நாள் இன்று….

00000
thambi99
நீ
சென்ற பாதை
கரடுமுரடானது,
உன் கால்கள்
ஏற்படுத்திய தடத்தில்

தமிழ்
இனத்திற்கான
விடியலை நோக்கிய பயணம்
தொடரும்…
சரவணன் கன்னியாரி

00000000

தன் முகவரி தானறியாது
ஆழச் சகதிக்குள்
அமிழ்ந்த தமிழ்ச்சதியைத்
தத்தெடுத்தக் காத்த
முதல் தாதி!

சக்தி

00000000

நவம்பர் 26 – தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள். இந்த நாளை கொண்டாடுவதற்கு உலகத் தமிழர்கள் கடந்த ஒரு வார காலமாகவே ஆயத்தமாகி வந்தனர். தமிழர் நலன் சார்ந்த பல கட்சிகள் இந்த நாளை தமிழின எழுச்சி நாளாக கொண்டாடுகின்றன. இருப்பினும் தமிழக அரசு பிரபாகரன் பிறந்த நாளை யாரும் கொண்டாடக் கூடாது என்றும் , பிரபாரகன் படத்தை பொது இடங்களில் வைக்கக் கூடாது என்று காவல்துறைக்கு கட்டளையிட்டு உள்ளது. என்ன தான் தமிழக அரசு தடை சொன்னாலும் , பிரபாகரன் தமிழினத்தின் தலைவர் , அவர் பிறந்த நாளை நாங்கள் கொண்டாடாமல் இருக்க மாட்டோம் என்று பல தமிழ் கட்சிகள் , இயக்கங்கள் , அமைப்புகள் ஏற்கனவே இந்த நாளை கொண்டாடி வருகின்றன.
thambi-432
சமூக வலைத் தளங்களின் பிறந்த நாள் வாழ்துக்கள் !

தமிழக இணைய பயன்பாட்டாளர்கள் , முகநூல், ட்விட்டர் போன்ற சமூக இணைய தளங்களில் பிரபாகரன் படங்களையும் செய்திகளையும் அதிக அளவில் பகிர்ந்த வண்ணம் உள்ளனர். பலர் பிரபாகரன் படத்தை தங்கள் முகப்பு படமாக மாற்றி உலா வருகின்றனர். பல இணைய நண்பர்கள் ஒன்றாக கூடி பிரபாரகன் அகவை 59 என்று வாசகம் எழுதிய கேக் வெட்டி இந்த நாளை கொண்டாடி மகிழ்கின்றனர். வலைத்தள பயன்பாட்டாளர்கள் பெரும்பான்மையானவர் தேசிய தலைவருக்கு வாழ்த்துகள் என்று பல செய்திகளை பகிர்ந்துள்ளனர் . தமிழகத்தை பொறுத்தவரை , தற்காலத்தில் எந்த ஒரு தலைவருக்கும் இது போல் பிறந்த நாள் வாழ்த்தை சொல்லி கொண்டாடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விடுதலைப் புலிகளின் தலைவர் இப்போது ஒட்டுமொத்த தமிழினத்தின் தலைவராக உருவெடுத்து உள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மையாகி விட்டது. தேசிய தலைவரை புறக்கணித்து இனி தமிழகத்தில் யாரும் அரசியல் செய்ய முடியாது என்ற நிலையும் வந்து விட்டது என்பதை ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பிரபாகரன் பிறந்த நாள் தமிழர் நிமிர்ந்த நாள் என்ற வாசகங்கள் சமூக வலைத் தளங்கள் மட்டுமின்றி இப்பொது பொது வெளியிலும் காணப்படுகிறது .

00000000000

26.11.2013 இன்று காலைக் கதிரவானாம் எங்கள் அண்ணன் அகவை ஐம்பதியோன்பதில் காலடி எடுத்து வைக்கும் நாள்…

எம் தலைவன் பிறந்த நாள்!
எம் தேசம் நிமிர்ந்த நாள்!
ஆயிரம் கோடி சூரியக் கதிர்கள்
எம் மண்ணில் இருள் போக்க கிளர்ந்தெழுந்த நாள்.

உலகத்தமிழினம் அண்ணன் புகழ் பாடி
உறக்கம் கலைத்த நாள்..

உறங்கிக் கிடைத்த தமிழ் வீரம்
உலகெங்கும் துயில் துறந்த நாள்…

வரலாறு இவன் வழிகாட்டி என்றான்
எம் வரலாற்றுக்கோ இவனே என்றும் வழிகாட்டி!

காலம் எமக்காக தந்த தலைமகன்
ஞாலம் எம்மை வாழ்த்திட பிறந்தான் இவன்..

அன்னை மொழியே எழுந்திங்கு வருக!
எங்கள் அண்ணனை வாழ்த்தியே பாவாயிரம் பொழிக!

எம் மொழி வாழ எம் இனம் வாழ
அண்ணா நீ நீடூழி வாழ்க வாழ்கவே!

வாழ்த்த வயதில்லை வணங்குகின்றோம்!

000000

முப்பது வருடங்கள்
ஓயாது அடித்த புயல் !
முன்னிலும் பலமாக
அடிக்க ஓய்வெடுக்கட்டும்
சில காலம் !

வரலாற்றில் தமிழர் முகவரியை வடித்தெடுத்த
சிற்பி !

ஓயாத அலைகள் மூலம் எதிரியை ஓட வைத்தது உமது யுக்தி !

வருடங்கள் பலவானாலும்
காத்திருப்போம்
அண்ணா !
வருவீர் படைகளுடன் பார்புகழும் மன்னா !

மீலாது கிறிஸ்துமஸ் கிருஷ்ணஜெயந்தி அல்ல
உம் பிறப்பு!
வருடம் ஒருநாள் கொண்டாடி மறந்து போக !

எங்கள் நெஞ்சங்களில்
உம்மை பதித்ததனால்
நித்தமும் உம்மை கொண்டாடுகிறோம் !
அத்தனை நாட்களை போல இத்தரை மாந்தர்களும்
இன்றும் வாழ்த்திப்பாடுகிறோம் !
வாழிய வாழியவே !

00000

நான் கண் காண முதல் தமிழ் அரசன் முருகனின் அவதார நாளாகவும் அவன் ஆறுருவினின்று ஓருருவாகிய நாளாகவும் போற்றப்பெறும் கார்த்திகை மாதத்தில் நாம் கண்கான வந்துதித்த வீரத்தமிழனே பிரபாகரன் என்னும் பெரும் சூரியன் தமிழர்களின் அடிமை விலங்கை உடைத்தவனே தமிழர் நெஞ்சில் வீரம் விதைத்தவரே தமிழர் சரித்திரம் படைக்க மறவர் வழியில் வந்த மாபெரும் மாவீரனே உலகம் வியந்து பார்க்கும்.
thambi66
வரலாறு கண்ட வரலாற்று நாயகனே இந்த உலகம் இருக்கும் மட்டும் உன்புகள் ஓங்கும் உன் பெயரை நினைத்தாலே குருகியவன் தலை நிமிர்ந்து சுட்டெரிக்கும் சூரியனைபோல் கயவர்களை சுட்டெரித்து சுடர் கொழுந்தாய் தமிழன் தமிழனாய் வாழ வீறு கொண்ட வேங்கையாக எழுந்து தமிழ் ஈழ விடுதலை காணும் நாள் மட்டும் ஓயாமல் பயணிப்பான் என்றும் இறப்பு இல்லா எம் தலைவன் பிரபாகரன் இன்று பிறந்தநாள் தமிழர்களுக்கு சிறந்தநாள் வீரத் திருமகனே வாழ்க நீ பல்லாண்டு.

00000

எமக்கு, முகவரிதந்து, உயிர்ப்புடன் எழுந்த, அந்த,
இமயத்தை வாழ்த்துவோம்.
அந்த மரமொன்று வளர்ந்து
விழுதுகள் பரப்பி,
விருச்சமானது இன்று.
வாழ்த்திடு தோழா!, அது
உன் பிறவிப்பயன்.

0000

பிரபாகரன்

பிரபாகரன்
என்னும் உன் பெயர்தான்
இந்த நூற்றாண்டின்
ஆண்மையின் அடையாளம்.
thambi-433
கால்நூற்றாண்டு நிர்வாகம் – உன்
கைகளில் இருந்திருந்தால்
இரண்டு மூன்று ஜப்பானை
ஈழம் கண்டிருக்கும்.

உன் தமிழீழ தாகத்தை
உலகம் உணர்ந்திருந்தால்
அங்கே,
தமிழச்சிகள்
கற்போடு வாழ்ந்து சாகும்
கனவுப் பலித்திருக்கும்.

விதியின் நேர்கோடேனும்
விலகாது இருந்திருந்தால்
ஈழத்தின் உற்பத்தியை
இவ்வுலகம் புசித்திருக்கும்.

தன்மானத்தின் கம்பீரமே!
இன்று,
வந்துவிடாதெ
மாவீரர் உரையாற்ற

நாளை,
வந்துவிடு
காடையர்க்கு பாலுற்ற.

கவிஞர் – நான் சித்தன்

0000

அவன் சூரியன் தான்.
கடத்தலோ,
மேற்காவுகையோ,
கதிர்வீச்சோ,
அவனின் சக்திகள் எம்மைவந்தடைந்தன.
உயிர்த்தது உலகின் தமிழ்.

— என்றும் அன்புடன்,
வாழ்த்துகிறேன் அண்ணா!

Roger Sinna

000000000

கதிரவன் உதிர்த்த திருநாள்..
PRABA-333
உலகத்தமிழினத்தின் பொன்னாள்
உள்ளமெல்லாம் இன்பத் திருநாள்..

எங்கள் தலைவன் பிறந்தநாள்
இன்றே எங்கள் பெருநாள்..

மலரும் பூக்கள் தலைவனுக்கு வாசனை தெளிக்கும்
தலைவன் வழி பார்த்தே ஆதவனும் கண் விழிக்கும்..

அகவை ஐம்பத்தொன்பது காணும் தலைவனுக்கு
வாழ்த்து சொல்ல கார்மேகம் பூமழை தூவும்.

தமிழர்களின் விடிவிற்கு முகவரி தந்த தலைவன்
தமிழீழம் தந்த எங்கள் முதல்வன்.

உலகமெல்லாம் தலைவன் பெருமைகள் உள்ளதென்று
நாவிணிக்க மடோனாவும் புகழ்ந்தாரன்று.

எட்டுத்திக்கட்டும் தாய் மொழி தமிழ்
நிலவை தொட்டு ஆழட்டும் தலைவன் புகழ்.

:-விஜி தமிழன்-:

“என்ன தவம் செய்தோம் அண்ணா நீ எங்களுக்காய் பிறந்ததுக்கு “
thambi
என்ன தவம் செய்தோம் அண்ணா நீ எங்களுக்காய் பிறந்ததுக்கு…
வங்கக் கடல்தன்னில் வாழ்ந்தவனே உன்னை வாழ்த்துகின்றோம் அண்ணா…
எங்கள் தமிழ்த்தாய் மடியில் தமிழனின் விடிவுக்காய் வந்துதித்தவனே
உன் களத்துப் பெருமையை உலகமே பேசுதடா

தமிழனின் வரலாற்றில் வெற்றி சங்கு ஊதியவனே
எம் மண்ணைக் காத்திடும் மைந்தனின் தலைவனே
எம் மறத்தமிழ் மரபினைக்காத்தவனே
நீ பல்லாண்டு காலம் வாழ வேண்டும்
எழுச்சி கொண்டு வா தலைவா…

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

000000000

காற்றின் காலடி ஓசை கேட்குது
திரும்பி வருகிறான் தம்பி – நந்திக்
கடலின் ஆறடி அலைகள் எழும்புது
காத்திருக்கிறோம் நம்பி

எங்கும் போகவில்லை காலம் – எங்கள்
உயிரில் வாழ்கிறது ஈழம்.

பரணி