தமிழீழ தேசத்தின் அரசியல் துறைப்பொறுப்பாளர் பிரிகேடியர் சுப தமிழ்ச்செல்வன் மற்றும் லெப்.கேணல். அலெக்ஸ், மேஐர். மிகுதன் , மேஐர். கலையரசன், மேஐர். செல்வம், லெப். ஆட்சிவேல், லெப். மாவைகுமரன் ஆகிய மாவீரர்களின் நினைவாக பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான பிரிகேடியர். சுப. தமிழ்ச் செல்வன் அவர்களின் உருவச்சிலை வைக்கப்பட்டுள்ள லாக்கூர்னோவ் என்னும் மாநகரத்தில் பிரான்சின் இறந்த ஆத்மாக்கள் நினைவு கூரும் 01.11.2014 ஆம் நாளன்று தமிழீழ மக்களால் நினைவு கூரப்பட்டது.

காலை 11.00 மணிக்கு லாக்கூர்னோவ் மாநகர முதல்வர் மதிப்புக்குரிய ஐpல்ஃபூ அவர்கள் ஏற்றி வைக்க ஈகைச்சுடரினை 12.10.1987-ல் இந்திய இராணுவத்துடனான மோதலில் வீரச்சாவையடைந்த அகிலனின் தாயாரும், பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் பெரிய தாயார் ஏற்றிவைக்க, கேணல்.பரிதியின் பெற்றோர்களும் ஈகைச்சுடரினை ஏற்றிவைத்தனர்.

france_tamilchelvan05
திருவுருவச்சிலைக்கு கேணல்.பரிதியின் தாயாரும், கேணல்.பரிதியின் துணைவியாரும் மலர்மாலை அணிவித்தனர். அதனைத்தொடர்ந்து அகவணக்கம் இடம் பெற்றன. தொடர்ந்து மக்கள் கண்ணீர் மல்க தமது ஒளிவணக்கத்தையும், மலர்வணக்கத்தையும் செய்திருந்தனர். கடந்த ஆண்டு பிரிகேடியர் சுப.தமிழ்செல்வன் அவர்களுடைய திருவுருவசிலையுடன் கேணல்.பரிதி அவர்களுடைய நினைவாக லாக்கூர்னோவ் மாநகரசபையின் ஆலோசகரும், தமிழ் மக்களின் நண்பனும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆதரவாளருமாகிய மதிப்புக்குரிய அந்தொனி றூசெல் அவர்களின் ஆலோசனையின் பெயரில் மாநகரசபையால் கேணல் பரிதி அவர்களின் முகம் பெறிக்கப்பட்ட சின்னம் பதிக்கப்பட்டது. 31.10.2014 இரவு மனிதநேயமேயில்லாத விரோதிகளால் அந்த சின்னம் அகற்றப்பட்டிருந்தமை அனைத்து தமிழ்மக்களின் மனதில் ஆறாத்துயரினை ஏற்படுத்தியிருந்தது.

நிகழ்வில் உரையாற்றிய முதல்வர் அவர்கள் சமாதானத்தில் தமிழ்மக்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும் என்று பாடுபட்டவர் அவ்வாறான ஒருவருக்கும் எமது பகுதியில் நினைவுச் சின்னம் எழுப்பியிருப்பது. தமிழ்மக்களுக்கு மட்டுமல்ல எமக்கும் பெருமைதரும் ஒருவிடயமாகும் என்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாதிகள் என்றும், அவர்களின் போராட்டத்தை பயங்கரவாதப்போராட்டம் என்றும் சொன்னது உலகம். ஆனால் இன்று அவர்களை பயங்கவாதிகள் இல்லை என்றும் அவர்களின் போராட்டம் நியாயமானது என்று ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதும் அதே போல சர்வதேசமும் ஒருநாள் ஏற்றும் கொள்ளும் என்றும் கூறினார்.

france_tamilchelvan
இவரைத் தொடர்ந்து உரையாற்றிய லாக்கூர்னோவ் மாநகர சபையின் ஆலோசகரும், தமிழ்ச்சங்கத்தின் தலைவியுமாகிய திருமதி. யாழினி அவர்கள் உரையாற்றியிருந்தார். தமிழர்கள் எங்கள் ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் உதவிவரும் மாநகரத்தையும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்திருந்தார். அவரைத் தொடர்ந்து நகரசபை கலைகலாசார பொறுப்பாளர் இந்த இடமும் சிலையும் தங்களுடைய மாநகரத்திற்குரியதாகும் என்றும் கூறினார். மாநகர ஆலோசகரும் நண்பருமாகிய அந்தோனி றூசெல் கூறும்போது பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் பற்றியும், அவரின் உருவச்சிலை வைப்பதற்கு தான் பரிதியை அணுகிய போது மிகுந்த ஆவல்கொண்டு அதற்கான ஒத்துழைப்பை நல்கியவர் என்றும் இன்று அவரும் தாய்மண்ணுக்காக உயிரை நீத்துவிட்டார் என்றும் அவரின் நினைவும் இந்த லாக்கூர்னோவ் மாநகரத்திற்கு தேவை என்றுமே அவரின் நினைவாக ஒரு உருவச்சின்னத்தை வைத்திருந்தோம் என்றும் அதனையும் வேண்டாதவர்கள் அகற்றிவிட்டார்கள் என்றும். ஆனால் அதனை மீண்டும் உறுதியாக நிறுவவுள்ளதையும் தெரிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பாக திரு. சத்தியதாசன் அவர்கள் உரையாற்றி யிருந்தார்.

பிரொஞ்சு மொழியில் உரையாற்றியதை லாக்கூர்னோவ் மாநகரசபை முன்னைநாள் ஆலோசகர் திரு. புவனேசுவரன் தமிழில் மொழி பெயர்த்திருந்தார். மாவீரர்கள் நினைவுப் பாடலுக்கு மாணவியர்கள் நடனம் வழங்கியிருந்தனர். நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு வீர வணக்கம் செலுத்தியிருந்தனர்.