பிரித்தானியா – கறுப்பு ஜூலை 30 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி

0
837

uk-karuppu-u-2கறுப்பு ஜூலை 30 ஆம் ஆண்டு நினைவு எழுச்சி  நாள் நிகழ்ச்சி   சனிக்கிழமை (27.07.13) மாலை 6 மணியளவில் london road  , mitcham, figge’s marsh green ground   இல்  நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முதலில் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினைச் சேர்ந்த சஞ்சய் அவர்கள் எழுச்சிச் சுடர் ஏற்றிவைத்தார். தொடர்ந்து பிரித்தானிய தேசிய கொடியை harrow நகராட்சி மன்ற உறுப்பினர் திரு சுரேஷ் கிருஷ்ணா அவர்களும் தமிழீழ தேசிய கொடியை கவிஞர்  திரு கந்தையா ராஜமனோகரன் அவர்களும் முறையே  ஏற்றி வைத்தனர்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து கறுப்பு ஜூலை நினைவு நிகழ்ச்சிகள்  இடம்பெற்றன.
கவிஞர் திரு கந்தையா ராஜமனோகரன் அவர்கள் உரையாற்றி, பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அறிக்கையினையும் வாசித்தளித்தார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் அறிக்கையை தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்த செல்வி  பைரவி அவர்களும் தமிழ் இளையோர் அமைப்பின் அறிக்கையை செல்வி யாது, செல்வி பாரதி ஆகியோரும் வாசித்தளித்தனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னை  நாள்  நாடாளுமன்ற உறுப்பினர் திரு எஸ் ஜெயானந்தமூர்த்தி அவர்களும் தேசிய செயற்பாட்டாளர் நியூட்டன் அவர்களும் உரையாற்றினர்கள் .
கறுப்பு ஜூலை நெருப்பு நினைவுகள் சுமந்த கலை நிகழ்ச்சிகளும்  இடம்பெற்றன. காலநிலை சீரற்றதாக இருந்தபோதும் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டனர்.