பிரிந்து போவதற்கான ஒரு பொது வாக்கெடுப்பை அமெரிக்கா நடாத்த வேண்டும்

0
580

அமெரிக்காவின் இலங்கை மற்றும் ஆசிய விவாகரங்களுக்கான புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உதவி ராஜாங்க அமைசர் நிஸா பிஸ்வால் அவர்களுக்கு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

பிஸ்வால் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதோடு ஐக்கிய நாடுகளின் உதவியுடன் இலங்கையில் சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடாத்தப்பபடுவதோடு வடகிழக்கில் தனிநாட்டுக்கான பொதுவாக்கெடுப்பு நடைபெறுவதற்கு ஆதரவு நல்க வேண்டும் என .ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு திருமதி. பிஸ்வால்லுக்கு கடிதம் எழுதயுள்ளர்கள்.

மேலும் அக்கடிதத்தில் சிறிலங்காவில் நடைபெற்ற இறுதிய யுத்தத்தினால் 90,000 தமிழ் பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டும் 50,000 மேற்பட்ட பிள்ளைகள் அனாதைகள் ஆக்கப்பட்டும் இருக்கின்றார்கள் என்று குறிக்கபட்டு இருந்தது . நீண்ட காலமாக நடைபெற்று வரும் இனவழிப்பு மற்றும் இனச்சுத்திகரிப்பு போன்ற விடையங்களை நிறுத்துவதுக்கு தமிழ் மக்கள் விரும்பும் ஓர் தீர்வை பெற்று தர உங்களுடைய செல்வாக்கினை பயன் படுத்தி முயற்சிக்குமாறு வேண்டிக்கொள்கின்றனர் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு.

எமது இலக்குகளில் ஒன்றானது சர்வதேச போர்க்குற்ற விசாரனையை மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். ஐநா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று இறுதி யுத்தத்தில் 75,000 தமிழ் மக்கள் சிறிலங்கா ஆயுதப்படைகளினால் கொன்றொழிக்கப்பட்டுள்ளனர். மற்றும் பாதுகாப்பு வலையம் என பிரகடனப்படுத்திய பகுதிக்குள் தமிழ் மக்களை செல்ல விட்டு போரில் பயன் படுத்த தடைசெய்யப்பட் ஆயுங்களை கொண்டு தாக்கி தமிழ் மக்களைகொலைசெய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது எனவும் எழுதயுள்ளர்கள் .

மற்றைய எமது இலக்கு, சிறிலங்காவில் நீண்ட காலமாக ஒடுக்குமுறைக்கு ஆழாக்கப்பட்டு வரும் தமிழ் சமூகமான எமது மக்ககிற்கு நிரந்தர விடிவு வருவதற்காக ; சூடானில் நடைபெற்றதை முன்னுதாரணமாகக் கொண்டு பிரிந்து போவதற்கான ஒரு பொது வாக்கெடுப்பை நடாத்த வேண்டும் எனவும், தென் சூடானில் தற்போது நிரந்தர அமைதியும் நிம்மதியான வாழ்வும் இருக்கின்றது எனவும் . இதே போன்று எமது தமிழ் மக்களும் நின்மதியாக பாதுகாப்பாக வாழ வழிகை செய்து கொடுக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் குறைபட்டு உள்ளது.