வீட்டைச்சுற்றி ஒரு விளைச்சலை பெருக்கும் நோக்குடன் கிராமங்கள் தோறும் விதை தானியங்கள் வழங்கும் நிகழ்வுகளை கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலகமான அறிவகம் முன்னெடுத்து வருகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் எண்ணித்திற்கமைய பசுமைத்தேசம் என்ற மகுட வாக்கியத்தின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தில் பசமைத்தேசம் விதைதானியங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

uootrupulam_seeds_002
ஊற்றுப்புலத்தை சேர்ந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயற்பாட்டாளர் வடிவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கரைச்சி பிரதேசபை உறுப்பினர்களான பாலாசிங்கசேதுபதி குமாரசிங்கம், ஊற்றுப்புலம் கிராமத்தின் மூத்த பிரசையும் முன்னாள் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவருமான சின்னையா, பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளரும் தமிழ் தேசிய கூட்மைப்பின் கிளிநொச்சி மாவட்டத்தின் உபதலைவருமான பொன்.காந்தன் கிருஸ்ணபுரம், கட்சி செயற்பாட்டாளர் சந்தோசம் மாதர் குழுத்தலைவி சுகந்தி, மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதிகள் கிராம அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதிகள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதில் கலந்து கொண்ட கரைச்சி பிரதேசபை உறுப்பினர் பாலாசிங்கசேதுபதி கருத்துரைக்கையில்

இம்மாதம் கார்த்திகை எங்கள் மனதில் புனிதமான நினைவுகளை கொண்ட மாதம். இந்த மாதத்தில் செய்கின்ற காரியங்களுக்கு அமைதியும் புனிதமும் உண்டு. எவர் எதை தடுத்தாலும் எங்கள் மக்கள் மனதுகளில் இருந்து எமது புனிதமான மாமறவர்களை எடுத்தெறிந்து விடமுடியாது.

இந்த நாட்டில் ஒரு மனிதன் உறவினனை நினைத்து விளக்கு ஏற்ற முடியாத காட்டுச்சட்டம் இருக்கின்றது. அச்சுறுத்தல் இருக்கின்றது. அடக்க அடக்க அது எங்கே மூலையால் வெடித்து வெளியேறும் என்பதை அவர்கள் மறக்க கூடாது. இன்று ஆள்பவர்களின் கோட்டை ஈடாடுவதை நாம் கண்முன்னே பார்க்கின்றோம்.

இது தர்மத்தின் தீர்ப்பே வேறில்லை. ஆகவேதான் நாம் தர்மத்தை நம்புவோம். தர்மத்துக்காக உயிர் கொடுத்தவர்களை நம்புவோம். அவர்கள் நினைவோடு எம் மண்ணுக்குகந்த நற்காரியங்களை இப்படி நிறைவேற்றுவோம் என தெரிவித்தார்.

ஆளுக்கொரு மரம் நடுவோம் நாளுக்கொரு வரம் பெறுவொம் கிளிநொச்சி ஆனந்தபுரம் மற்றும் பொன்னகரிலும் முன்னெடுப்பு

uootrupulam_seeds_006
வடமாகாண விவசாய அமைச்சால் முன்னெடுக்கப்படும் ஆளுக்ககொரு மரம் நடுவோம் நாளுக்கொரு வரம் பெறுவோம் மகுடத்தின் கீழான மர நடுகை மாதத்தில் கிளிநொச்சி, பொன்னகர், ஆனந்தபுரம் கிழக்கு ஆகிய பகுதிகளுக்கும் பயன்தரு பழ மரக்கன்றுகள் நேற்று கிடைத்துள்ளன.

இந்த மரக்கன்றுகளை வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை வடமாகாண விவசாய அமைச்சிடம் இருந்து பெற்று மக்களுக்கு வழங்கியுள்ளார்.

இந்த மரநடுகை மாத நிகழ்வுகளில் கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் மா.சுகந்தன், பொன்னகர் மத்தி கிராம அபிவிருத்தி சங்க தலைவர் கமக்கார குழு பொருளாளார் பொன்னகர் மாதர் கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், ஆனந்தபுரம் கிழக்கு பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் முன்பள்ளி ஆசிரியர்கள் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளரும் கட்சியின் மாவட்ட கிளையின் உபதலைவருமான பொன்.காந்தன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்