கடந்த வாரம் இந்தியா – சீனா எல்லைப்பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் உயிரிழந்த 20 இந்திய படையினருக்கு அமெரிக்கா தனது ஆழ்ந்த இரங்கலை கடந்த வெள்ளிக்கிழமை (19) தெரிவித்துள்ளது.

இந்த மேதல்களில் உயிரிழந்த படையினரின் குடும்பங்களுக்கு நாம் இரங்கலை தெரிவிப்பதுடன், இந்திய மக்களுக்கும் தமது அனுதாபங்களை தெரிவிப்பதாக அமெரிக்காவின் வெளிவிவகார செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

கடந்த இரு தசாப்தங்களாக இந்தியா அமெரிக்காவுடன் நெருக்கிய உறவகளை வலுப்படுத்தி வருகின்றது. இந்தியாவின் ஆயுத விநியோகஸ்த்தராகவும் அமெரிக்கா மாறியுள்ளது.

எனினும் தற்போதைய நிலை இந்தியாவை மேலும் அமெரிக்காவின் பக்கம் நகர்த்தியுள்ளதாகவும், இந்த கூட்டணியில் யப்பான் மற்றும் அவுஸ்திரேலியா போள் நாடுகள் உள்ளதாகவும் இந்தியாவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் நிருபாமா ராவ் தெரிவித்துள்ளார்.

இந்த மோல்களில் சீனா சிறைப்பிடித்த 10 இந்திய இராணுவத்தினர் விடுவிக்கப்பட்டுள்னர். 1962 ஆம் ஆண்டு நிகழ்ந்த போருக்கு பின்னர் இந்திய படையினரை சீனா சிறைப்படித்துள்ளது இதுவே முதல்தடவை.

ஆனால் இந்தியாவின் இந்த தோல்வியானது அதன் புலனாய்வுத்துறையின் தோல்வி என இந்தியா காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

எல்லைகளில் சீனா படைகளை குவித்ததை செய்மதிகள் மூலமோ அல்லது வெளிநாட்டு உளவு அமைப்புக்கள் மூலமோ இந்தியா அறியாது போனது எவ்வாறு என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here